தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு – 25,000 ரூபாய் வரை சம்பளம்! முழு விவரம் இதோ!

0
தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு - 25,000 ரூபாய் வரை சம்பளம்! முழு விவரம் இதோ!
தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு - 25,000 ரூபாய் வரை சம்பளம்! முழு விவரம் இதோ!
தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு – 25,000 ரூபாய் வரை சம்பளம்! முழு விவரம் இதோ!

தமிழ்நாடு வனத்துறையின் கீழ் செயல்படும் வனவிலங்கு பாதுகாப்புக்கான மேம்பட்ட நிறுவனத்தில் திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இத்துறையில் உள்ள பணியிடங்களின் விவரங்களை குறித்து இப்பதிவில் காண்போம்.

வனத்துறை:

தமிழ்நாடு வனத்துறை தமிழக மாநிலத்திற்கு உட்பட்ட காட்டுப்பகுதிகளின் பராமரிப்பையும், பாதுகாப்பையும் மேற்கொண்டு அவற்றின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது. இத்தகைய வனத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் பாதுகாப்பு மேம்பட்ட நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 8 பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த பணியிடங்களை தற்காலிகமாக நிரப்பபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவார்கள் 22.7.2022 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, வயது,சம்பளம், ஆகியவற்றையும் வெளியிட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

1. திட்ட உதவியாளர் (Project Assistant – DNA) – இந்த பணியிடத்திற்கு 1 காலியிடம் இருப்பதாகவும்,கல்வி தகுதி M.Sc/ M.Tech in BioTechnology/ Molecular Biology/ Genetics/ Genetic Engineering உடன் ஒரு வருடம் பணி அனுபவம் வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் வயது 28 க்குள் இருக்க வேண்டும் என்றும் SC/ST/BC/MBC மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 ஆண்டுகள் வயதில் தளர்வும் உள்ளதாகவும், சம்பளம் 20,000 என்றும் தெரிவித்துள்ளது.

ஜூலை 18 & 19ம் தேதியன்று பள்ளிகளுக்கு விடுமுறை – இதற்காக தான்!

2. திட்ட உதவியாளர் (Project Assistant – STR) பணியிடத்திற்கு 2 காலியிடங்கள் இருப்பதாகவும் கல்வி தகுதி M.Sc/ M.Tech in BioTechnology/ Molecular Biology/ Genetics/ Genetic Engineering உடன் ஒரு வருடம் பணி அனுபவம் அவசியம் என்றும் வயது வரம்பு 28, SC/ST/BC/MBC மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு,சம்பளம் 25,000 ஏற்று தெரிவித்துள்ளது.

3. திட்ட உதவியாளர் (Project Assistant – SDMA) பணியிடத்திற்கு 2காலிப்பணியிடங்கள்இருப்பதாகவும்,கல்வி தகுதி M.Sc in Wildlife Biology/ Zoology உடன் ஒருவருட பணி அனுபவம் அவசியம் என்று அறிவித்துள்ளது. மேலும் வயது வரம்பு 28, SC/ST/BC/MBC மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு,சம்பளம் 25,000 என்றும் தெரிவித்துள்ளது.

4. திட்ட உதவியாளர் (Project Assistant – Assessment & Identification) பணியிடத்திற்கு 2 காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும், கல்வி தகுதி M.Sc in Wildlife Biology/ Zoology உடன் ஒரு வருட பணி அனுபவம் அவசியம் என்றும், வயது வரம்பு 28, SC/ST/BC/MBC மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வும்,சம்பளம் 25,000 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் இந்த பணியிடத்திற்கு நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது. இத்தகைய பயிற்சி பணியிடத்திற்கு  விண்ணப்பிக்க https://www.forests.tn.gov.in/app/webroot/img/AIWC%20%20Recruitment%20of%20Project%20Assistant%20-%20Notification.pdf என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்து கொள்ள வேண்டும் என்றும்,மேலும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து  Additional Principal Chief Conservator of Forests and Director, AIWC (R,T & E), Vandalur, Chennai – 600048 மேற்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதனை பற்றிய தகவல்கள் தெரிந்து கொள்ள https://www.forests.tn.gov.in/app/webroot/img/AIWC%20%20Recruitment%20of%20Project%20Assistant%20-%20Notification.pdf என்ற  இணையதளத்தை   பார்வையிடவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!