கோவை அரசு மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு – இலவச பயிற்சி!

0
கோவை அரசு மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு - இலவச பயிற்சி!
கோவை அரசு மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு - இலவச பயிற்சி!
கோவை அரசு மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு – இலவச பயிற்சி!

கோவை அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இந்த பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.

மருத்துவமனைகளில் வேலை:

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி உயிரிழப்புகளும் தினந்தோறும் கட்டுக்கடங்காமல் உள்ளது. அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையால் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தது. போதிய மருத்துவர்களும், செவிலியர்களும் இல்லாததால் உரிய நேரத்தில் சிகிசை அளிக்க முடியாத நிலை நிலவியது. மருத்துவ பணியாளர்களுக்கும் தட்டுப்பாடுகள் காணப்பட்டது. இந்த நிலைமையை சமாளிக்க மருத்துவம் படிக்கும் இறுதி ஆண்டு மாணவர்கள் பணியமர்த்தப்பட்டனர்.

ஜியோ (Jio) பயனர்களுக்கு தினசரி Unlimited டேட்டா திட்டங்கள் அறிமுகம்!

தற்போது மேலும் மருத்துவத் துறையில் பணியாற்ற பணியாளர்களை அதிகப்படுத்தும் முயற்சியாக கோவை மாவட்டத்தில் பேரிடர் காலத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் மருத்துவத் துறையில் பணியாற்ற குறுகிய கால இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இது வழங்கப்படுகிறது. 21 நாட்கள் வகுப்பறையிலும், அதைத் தொடர்ந்து 3 மாதங்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பயிற்சி அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த பயிற்சி குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில், பயிற்சி பெறும் நபர்களுக்கு பயிற்சி காலத்தில் இலவச பயண அட்டை, கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள், தடுப்பூசிகள் போன்றவை வழங்கப்படும். கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட ஆர்வமுள்ளவர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு மேல் கல்வித்தகுதி பெற்றிருக்கலாம். ஆவணங்கள் மற்றும் ஆதார் விவரங்களுடன் ஆறுதல் பவுண்டேஷன் திறன் பயிற்சி வழங்கும் மையத்தை 8870770882, 9080348505 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ள வேண்டும் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் தகவல்களை அனுப்பலாம் என குறிப்பிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!