தமிழகத்தில் வேலை தேடுவோருக்கு ஹாப்பி நியூஸ் – 100+ முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் முகாம்!

0
தமிழகத்தில் வேலை தேடுவோருக்கு ஹாப்பி நியூஸ் - 100+ முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் முகாம்!
தமிழகத்தில் வேலை தேடுவோருக்கு ஹாப்பி நியூஸ் - 100+ முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் முகாம்!
தமிழகத்தில் வேலை தேடுவோருக்கு ஹாப்பி நியூஸ் – 100+ முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் முகாம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையம் சார்பாக மார்ச் 12ம் தேதி அன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 100 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளனர்.

வேலைவாய்ப்பு முகாம்:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பல்வேறு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் அரசு துறையில் உள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மேலும் போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பும் வெளியாகி வருகிறது. தற்போது குரூப் 2, 2A தேர்வு தேதி வெளியாகி உள்ளது. அதனை தொடர்ந்து மார்ச் மாதத்தின் மத்தியில் குரூப்4&VAO தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று TNPSC தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மே 13 கடைசி வேலை நாள்!

இந்த நிலையில் படித்த இளைஞர்களுக்கு உதவும் வகையில் மாவட்ட தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து மார்ச் 12ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டையில் உள்ள ஜி.கே.வேல்டு பள்ளியில் மார்ச் 12ம் தேதி காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும்.

IPL 2022: முதல் ஆட்டத்தில் களம் காணும் CSK vs KKR! உத்தேச 11 அணி விவரம் இதோ!

மேலும் இதில் 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. படித்த தகுதியான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் நோக்கில் இந்த பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, பட்டயபடிப்பு போன்ற கல்வித்தகுதிகள் உடையோர் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம். கலந்து கொள்ள வருபவர்கள் தங்களின் சுயவிவர குறிப்பு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வித் தகுதி சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!