தனியார் நிதி நிறுவன கடன் தவணை (EMI) வசூல் கூடாது – கலெக்டர் உத்தரவு!

1
தனியார் நிதி நிறுவன கடன் தவணை (EMI) வசூல் கூடாது - கலெக்டர் உத்தரவு!
தனியார் நிதி நிறுவன கடன் தவணை (EMI) வசூல் கூடாது - கலெக்டர் உத்தரவு!
தனியார் நிதி நிறுவன கடன் தவணை (EMI) வசூல் கூடாது – கலெக்டர் உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக பொதுமுடக்கம் அமலில் இருந்து வருகிறது. இத்தகைய கால கட்டத்தில் மக்களிடம் தனியார் நிதி நிறுவனங்கள் கடன் வசூலில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தனியார் நிதி நிறுவனம்:

தமிழகத்தில் கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கு காலத்தில் அனைத்து பணிகளும் முறையாக இயங்காத காரணத்தினால் மக்கள் அனைவரும் கடும் நிதிச்சுமைக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நேரத்தில் தனியார் நிதி நிறுவனங்கள் கடன் தவணையை உடனே திருப்பி செலுத்துமாறு மக்கள் அறிவுறுத்தி வருகின்றனர். தற்போது இது குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா அவர்கள் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

இந்தியாவில் ஒரே நாளில் 67,208 பேருக்கு கொரோனா தொற்று – 2,330 பேர் பலி!!

அதன்படி அவர் கூறியதாவது, பொதுமுடக்கம் காலத்தில் வீடு வீடாக சென்று கடன் தொகையை பெறுவது அரசின் அறிவிப்பை மீறும் செயலாகும். திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தனியார் நிதி நிறுவனங்களும் பொதுமுடக்கம் காலத்தில் மக்களிடம் சென்று கடன் தவணையை திரும்ப பெறும் செயலை நிறுத்த வேண்டும். குறிப்பாக அலுவலகங்கள் அல்லது கிராமங்களில் கூட்டம் கூட்டி கடன் தவணையை வசூல் செய்யும் நடவடிக்கைகளை தனியார் நிதி, நுண்நிதி நிறுவனங்கள் ஈடுபடக்கூடாது.

TN Job “FB  Group” Join Now

மேலும் பொதுமுடக்கம் காலத்தில் ஒரே தவணையில் செலுத்த கட்டாயப்படுத்தாமல் உரிய கால நீட்டிப்பு அளித்து அதற்கான தகவலை வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும். மகளிர் குழுக்களில் கடன் தவணை செலுத்தாத நபர்களிடம் தகாத வார்த்தையில் பேசுவதோ, கண்ணியம் குறைவாக நடக்கவோ கூடாது என்றும் அவ்வாறு நிகழ்ந்தால் இது தொடர்பாக மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலருக்கு 9865071910 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. Good initiative HAT’S OFFF
    It should have been done some from 2020 lockdown . Many would have not ended their life.
    Mainly business people are affected and no central government or state government taking action on these. Government employees are least bothered about the struggle of business people because they have their regular income.
    During lockdown time no business and nothing was happening but soon after the lockdown bank and private finance asking to pay the amount is ridiculous. From where we get the money to pay….
    Kind request take care of people. People are not only affected with COVID also with financial crisis.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!