தமிழகத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) மின்தடை ஏற்படும் இடங்கள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) மின்தடை ஏற்படும் இடங்கள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) மின்தடை ஏற்படும் இடங்கள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) மின்தடை ஏற்படும் இடங்கள் – மின்வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில், தென்காசி மாவட்டத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை:

தமிழகத்தில் உள்ள துணை மின் நிலையங்கள் வாயிலாக மாவட்டங்களுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த துணை மின் நிலையங்களை சரியாக பராமரித்து வருவதன் மூலம் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படும். மேலும் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மின் வயர்கள் சரி செய்வது, இடையூறாக இருக்கும் மரங்களை அகற்றுவது போன்ற பணிகளை மின்வாரிய ஊழியர்கள் மேற்கொள்வார்கள். அவ்வாறு பணிகள் நடைபெறும் போது எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருப்பதற்காக மின்தடை அறிவிக்கப்படுகிறது.

அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜர்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூர், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தளம்பாறை, திரவியநகர், ராமச்சந்திர பட்டணம், மேல மெஞ்ஞானபுரம், செங்கோட்டை, கணக்கப்பிள்ளைவலசை, பெரியபிள்ளைவலசை, பிரானூர், கரிசல், வல்லம், கற்குடி, புளியரை, தெற்குமேடு, பூலாங்குடியிருப்பு, புதூர், கட்டளைகுடியிருப்பு ஆகிய பகுதிகளில் நாளை(செப்.2) மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால் 5% ஜிஎஸ்டி பிடித்தம்? மத்திய அரசு அறிவிப்பு!

இதனை தொடர்ந்து சுரண்டை, இடையர்தவணை, குலையனேரி, இரட்டைக்குளம், சுந்தரபாண்டியபுரம், பாட்டாக்குறிச்சி, வாடியூர், ஆனைகுளம், கரையாளனூர், அச்சங்குன்றம், சாம்பவர்வடகரை, சின்னத்தம்பிநாடானூர், பொய்கை, கோவிலாண்டனூர், கள்ளம்புளி, எம்.சி.பொய்கை, துரைச்சாமிபுரம் ஆகிய இடங்களில் நாளை மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளதாக தென்காசி மின்விநியோக செயற்பொறியாளர் கற்பக விநாயக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here