சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைகள் ரத்து – இரவு நேர ஊரடங்கு எதிரொலி!!

0
சென்னை புறநகர் மின்சார ரயில்கள் சேவைகள் ரத்து - இரவு நேர ஊரடங்கு எதிரொலி!!
சென்னை புறநகர் மின்சார ரயில்கள் சேவைகள் ரத்து - இரவு நேர ஊரடங்கு எதிரொலி!!
சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைகள் ரத்து – இரவு நேர ஊரடங்கு எதிரொலி!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு நேரத்தில் இரவு 10 மணிக்கு மேல் மின்சார ரயில்கள் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஊரடங்கு:

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காரணத்தால் அரசு தினமும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரையும், ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் அவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நேரத்தில் பேருந்துகள், ஆட்டோ மற்றும் டாக்ஸி போன்ற பொது போக்குவரத்துகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் மூடல் – மாநில அரசு அறிவிப்பு!!

மின்சார ரயில்கள்:

இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் சேவையின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. மொத்தம் சென்னையில் 672 ரயில்கள் இயக்கப்படுகிறது. இவை தற்போது 434 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை எந்த ரயில் சேவையும் இருக்காது என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

ஞாயிற்று கிழமைகளில் மொத்தம் 86 ரயில்கள் இயக்கப்படும். அவை 2 மணி நேரத்திற்கு ஒரு ரயில் என்ற விகிதத்தில் இயக்கப்படும். ஞாயிற்றுக் கிழமை ரயில் சேவைகள் அத்தியாவசிய பணியில் ஈடுபடுவோர், முன்கள பணியாளர்கள், ரயில்வே ஊழியர்கள் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here