வணிக செய்திகள் – பிப்ரவரி 2019

0

வணிக செய்திகள் – பிப்ரவரி 2019

இங்கு பிப்ரவரி மாதத்தின் வணிக செய்திகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 2019
பிப்ரவரி மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF Download

ஜிஎஸ்டி வசூல் ரூ .1 லட்சம் கோடியைக் கடந்தது

  • இந்த ஆண்டு ஜனவரி மாதத்தின் ஜி.எஸ்.டி. வசூல் ஒரு லட்சம் கோடியை கடந்தது.
  • கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜிஎஸ்டி வசூல் 89 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது.

இடைக்கால பட்ஜெட் 2019-20

  • நிதி அமைச்சர் பியுஷ் கோயல் பாராளுமன்றத்தில் 2019-20க்கான இடைக்கால பட்ஜெட்டை வழங்கினார்.

2019-20 இடைக்கால நிதிநிலை அறிக்கை சிறப்பம்சங்கள்

  • பிரதமரின் கிஸான் திட்டத்தின் கீழ் 12 கோடி சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் வருமானம் கிடைக்க உத்தரவாதம்.
  • அமைப்பு சாரா தொழிலில் ஈடுபட்டுள்ள 10 கோடி தொழிலாளர்களுக்கு நிலையான மாதாந்திர ஓய்வூதியம் கிடைப்பதை உறுதி செய்ய பிரதமரின் ஷ்ரம் யோகி மான்தன் திட்டம்.
  • மாதம் ரூ.100/55 என்ற குறைந்த அளவிலான பங்களிப்பைச் செலுத்தும் தொழிலாளர்கள் 60 வயதை கடந்த பிறகு மாதம் ரூ.3,000 ஓய்வூதியமாக வழங்கப்படும்.
  • ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு முழு வரி விலக்கு. வருமானவரிக்கான நிரந்தரக் கழிவுத்தொகை ரூ.40,000-லிருந்து ரூ.50,000-ஆக உயர்த்தப்படும்.
  • 2019-20ல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு ரூ.60,000 கோடி ஒதுக்கீடு.
  • வங்கி / அஞ்சலக முதலீடுகள் மூலம் வட்டியாக பெறப்படும் தொகைக்கு வரிச்சலுகை பெறுவதற்கான உச்சவரம்பு ரூ.10,000-லிருந்து ரூ.40,000-ஆக அங்கீகரிக்கப்படும்.
  • பசுமாடுகளின் நீடித்த இனவிருத்தி மேம்பாட்டிற்காக ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் அமைப்பு ஒன்று உருவாக்கப்படும்.
  • 5 கோடி மீனவர்களின் நலனுக்காக மீன்வளத்துக்கென தனித்துறை உருவாக்கப்படும்.
  • 22ஆவது எய்ம்ஸ் மருத்துவமனை ஹரியானாவில் அமைக்கப்படும்.
  • 2019-20-க்கான நிதிப்பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தி வீத்த்தில்4%ஆக இருக்கும். 3% நிதிப்பற்றாக்குறை என்ற இலக்கு 2020-21-ல் எட்டப்படும்.
  • மின்சார வசதியை பெற விரும்பும் அனைத்து வீடுகளுக்கும் 2019 மார்ச்சுக்குள் மின் இணைப்பு வழங்கப்படும். சௌபாக்யா திட்டத்தின்கீழ் அனைத்து வீடுகளுக்கும் இலவச மின் இணைப்பு.
  • பிரதமரின் கிராமச்சாலை திட்டத்தின் கீழ், அமைக்கப்படும் கிராமப்புற சாலைகளின் அளவு மும்மடங்காக அதிகரிப்பு.
  • 2018-19 நிதி ஒதுக்கீட்டில் 21% அதிகரிக்கப்பட்டு 2019-20-ல் ரூ.58,166 கோடியாக நிர்ணயம்.
  • அருணாச்சலப்பிரதேச மாநிலம் அண்மையில் விமான போக்குவரத்து வசதியை பெற்றுள்ளது.
  • பிரம்மபுத்திரா ஆற்றில் போக்குவரத்து வசதியை மேம்படுத்தி சரக்குப்போக்குவரத்து தொடங்கப்படும்.
  • முதன் முறையாக ராணுவத்திற்கான ஒதுக்கீடு ரூ.3,00,000 கோடியை தாண்டியுள்ளது.
  • இதுவரை அடையாளம் காணப்படாத சீர் மரபின நாடோடிகள் மற்றும் நாடோடி பழங்குடியினரை அடையாளம் காண நிதி ஆயோக்கின் கட்டுப்பாட்டில் புதிய குழு ஒன்று உருவாக்கப்படும்.
  • இந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஒற்றைச் சாளர அனுமதியைப் பெறவும், படப்பிடிப்பை எளிதாக்கவும் நடவடிக்கை.
  • ஜிஎஸ்டி சட்டத்தில் பதிவு செய்த சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் பெறும் ரூ.1 கோடி வரையிலான கடனுக்கு 2% வட்டி தள்ளுபடி. ஒரு மணி நேரத்திற்குள் ரூ.1 கோடி வரை கடன் வசதி பெற ஏற்பாடு.
  • நாட்டில் உள்ள 1 லட்சம் கிராமங்கள் அடுத்த ஐந்தாண்டுகளில் டிஜிட்டல் கிராமங்களாக மாற்றப்படும்.
  • செயற்கைப் புலனாய்வுக்கான தேசிய திட்டத்திற்கு உறுதுணையாக செயற்கைப் புலனாய்வு நுழைவாயில் ஒன்று புதிதாக ஏற்படுத்தப்படும்.
  • பிரதமரின் கவுசல் விகாஸ் திட்டத்தின் கீழ் 1 கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு திறன் பயிற்சி.

அஞ்சல் துறை விரைவில் அதன் சொந்த காப்பீட்டு நிறுவனத்தை அமைத்துக்கொள்ள திட்டம்

  • அஞ்சல் துறை விரைவில் அதன் சொந்த காப்பீட்டு நிறுவனத்தை நிறுவ திட்டமிட்டுள்ளது, தபால் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமப்புற தபால் ஆயுள் காப்பீடு ஆகிய இரண்டு வகையான திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.

ஜனவரி மாதத்தில் மூலதனச் சந்தைகளில் இருந்து ரூ5,300 கோடியை திரும்பப் பெற்றுள்ளன

  • பொதுத்தேர்தல் வருவதை முன்னிட்டு ஜனவரி மாதம் இந்திய மூலதனச் சந்தைகளில் இருந்து 5,300 கோடி ரூபாய்களை வெளிநாட்டு சேவை முதலீட்டாளர்கள், FPI கள் திரும்பப் பெற்றுள்ளன.

இந்தியாவின் சுற்றுலாத்துறை 2018 ஆம் ஆண்டில் 19% வளர்ச்சி

  • நாட்டின் சுற்றுலாத்துறை கடந்த ஆண்டு 234 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் பெற்று, 19% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது என்று மத்திய அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் தெரிவித்தார்.
  • உலக சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் கவுன்சில் (WTTC) 2018 அறிக்கையின் படி,இந்திய சுற்றுலாத் துறை மூன்றாவது இடத்தில் உள்ளதாக கவஹாத்தியில் நடைபெற்ற இரண்டாம் ஆசியான்-இந்தியா இளைஞர் மாநாட்டின் தொடக்க உரையில் தெரிவித்தார்.

ஒட்டுமொத்த சுகாதார ஒதுக்கீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5% ஆக உயர்த்தப்பட உள்ளது

  • ஒட்டுமொத்த சுகாதார ஒதுக்கீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதமாக உயர்த்துவதற்கு இந்தியா உறுதியளித்துள்ளது.

கப்பல் துறையில் இந்தியர்களின் வேலைவாய்ப்பு விகிதம் இந்த ஆண்டு 35 சதவிகிதம் அதிகரிப்பு

  • இந்த ஆண்டில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் கப்பல் துறையில் இந்தியர்களின் வேலைவாய்ப்பு விகிதம் 35 சதவிகிதம் வளர்ச்சி கண்டிருக்கிறது.

மத்திய அரசு சர்க்கரைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை கிலோவுக்கு ரூ.2 அதிகரிக்கிறது

  • 2018-19 ஆம் ஆண்டுக்கான சர்க்கரையின் குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒரு கிலோவிற்கு ரூபாய் 2 அதிகரித்து 31 ரூபாயாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களின் மீதான சுங்க வரி 200% அதிகரிப்பு 

  • புல்வாமா பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களின் மீதான சுங்க வரியை 200 சதவிகிதம் இந்தியா உயர்த்தியுள்ளது.
  • இந்தியாவிற்கு பாகிஸ்தான் ஏற்றுமதி செய்யும் முக்கிய பொருட்கள் பழங்கள், சிமெண்ட், பெட்ரோலிய பொருட்கள், மொத்த கனிமங்கள், தாதுக்கள் மற்றும் முடிக்கப்பட்ட தோல் ஆகியவை அடங்கும்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ. 5,300 கோடி முதலீடு

  • இந்த மாதத்தின் முதல் பாதியில் இந்திய பங்கு சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 5,300 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்துள்ளனர்.

நாட்டில் சுமார் 16 கோடி மக்கள் குடிப்பழக்கம் உடையவர்கள்

  • எய்ம்ஸ் தேசிய மருந்து சார்பு சிகிச்சை மையத்துடன் இணைந்து தனது அமைச்சகம் நடத்திய ஒரு கணக்கெடுப்பபின்படி 16 கோடி மக்கள் நாட்டில் மதுபானம் அருந்துவதாக சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் திரு.தாவர்சந்த் கெலாத் கூறியுள்ளார். திரிபுரா, ஆந்திரப் பிரதேசம், பஞ்சாப், சட்டிஸ்கர் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகியவை ஆல்கஹால் பயன்பாட்டுக் கோளாறுகளால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட மாநிலங்களாகும்.

EPFO வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதத்தை உயர்த்தியது

  • ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு(EPFO), 2018-19 ஆம் ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதத்தை கடந்து ஆண்டு வழங்கிய 8.55 சதவீதத்திலிருந்து 8.65 சதவிகிதமாக உயர்த்தி வழங்க முடிவு செய்துள்ளது. தொழிலாளர் துறை மந்திரி தலைமையிலான மத்திய அறங்காவலர்கள் வாரியம்(CBT) என்பது EPFO ​​இன் தலைமை முடிவு எடுக்கும் அமைப்பு ஆகும், இது ஒரு நிதியாண்டின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை முடிவு செய்யும்.

வரி அறிவிப்பு மூலம் ஸ்டார்ட் அப்களுக்கு நிவாரணம்

  • தில்லியில் நடைபெற்ற லெட்ஸ் இகினேட் 2018 ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் மாநாட்டில் தொழில்முனைவோர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் இதர ஸ்டார்ட் அப் சூழல் தொடர்புடையவர்கள் மத்தியில் உரையாற்றிய நிட்டி ஆயோக் சி.இ.ஓ அமிதாப் காந்த், இந்தியாவில் ஸ்டார்ட் அப் சமூகம் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு தீர்வு கண்டு, தொழில்முனைவு கலாச்சாரத்தை ஊக்குவிப்பதில் அரசு மற்றும் நிட்டி ஆயோக் அமைப்பு உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.
  • தேவதை முதலீட்டாளர்கள் வருமான வரித்துறை அதிகாரிகளால் அணுகப்பட்டாமல் இருக்கும் வகையிலான சுற்றறிக்கையை அரசு விரைவில் வெளியிடும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

பாதுகாப்பான பிரௌசிங்கிற்காக சொந்த டிஎன்எஸ் யை இந்தியா பெரும்

  • அரசாங்கமானது நாட்டில் இணைய பயனர்களுக்கு ஒரு வேகமான மற்றும் அதிக பாதுகாப்பான பிரௌசிங் அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன், இந்தியாவின் பொது டொமைன் பெயர் சேவையகம் அல்லது டிஎன்எஸ் விரைவில் அமைக்கப்படும்.
  • ஒரு DNS என்பது இணையத்திற்கான ஒரு அடைவு. இது கணினிகள்/கணினிகள் மூலம் தொடர்பு கொள்ளும் நினைவில் எளிதாக இருக்கும் டொமைன் பெயர்களை IP முகவரிகளாக மாற்ற உதவுகிறது. DNS மெதுவாக அல்லது வேலை செய்யவில்லை என்றால், பயனர்கள் வலை முகவரிகளை கண்டறிய முடியாது.

ஆப்கானிஸ்தான் சபாஹார் துறைமுகம் வழியாக இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யத் தொடங்குகியது

  • ஈரானின் சபாஹார் துறைமுகம் வழியாக ஆப்கானிஸ்தான் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளது, இதன் மூலம் நிலத்தால் சூழப்பட்டநாடான ஆப்கானிஸ்தான் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு வெளிநாட்டு சந்தைகளுக்கு அதன் வர்த்தகத்தை திருப்பியுள்ளது. ஆப்கானிஸ்தானின் ஏற்றுமதிகள் அடுத்த வருடத்தில் ஒரு பில்லியன் டாலரிலிருந்து முதல் இரண்டு பில்லியன் டாலர் வரை அதிகரிக்கும்.

நடப்பு நிதியாண்டில் 500 பில்லியன் டாலரை கடக்கவுள்ளது நாட்டின் சரக்கு மற்றும் சேவை ஏற்றுமதி

  • உலகளாவிய வர்த்தக சவால்களை எதிர்கொள்ளும் போதும் இந்திய நாட்டின் சரக்கு மற்றும் சேவை நடப்பு நிதியாண்டில் 500 பில்லியன் டாலர்களை கடக்க உள்ளது என்று புது தில்லியில் நடைபெற்ற 2019 – ரைசிங் இந்தியா உச்சி மாநாட்டில் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார்.

7.1 வங்கி செய்திகள்

ரிசர்வ் வங்கி – ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைப்பு

  • ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான நிதிக்கொள்கை ஆய்வுக்கூட்ட முடிவில் ரெப்போ வட்டி விகிதம் 25% குறைத்து 6.50% சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாக குறைத்து அறிவித்தது. இந்த அறிவிப்பால் வீடு, வாகனங்களுக்கான கடன் வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது.

விவசாயிகளுக்கு அடமானம் இல்லா இலவச கடன் வரம்பு ரூபாய் 1.6 லட்சமாக அதிகரிப்பு

  • ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், இலவச வேளாண் கடன்களுக்கான வரம்பு 1 லட்சத்திலிருந்து 6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

பல்வேறு விதிமுறைகளை மீறியதற்காக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம்

  • எச்.டி.எஃப்.சி. வங்கி, ஐடிபிஐ வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி ஆகியவற்றிற்கு விதிமுறைகளை மீறியதற்காக தலா 2 மில்லியன் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
  • அலாகாபாத் வங்கி, மகாராஷ்டிரா வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றிற்கு தலா 1.5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இது, நிதிகளின் முடிவுகளை கண்காணிப்பது, தகவல் பரிமாற்றம், வகைப்பாடு மற்றும் மோசடிகளின் அறிக்கை மற்றும் மறுசீரமைப்பு கணக்குகள் விதிமுறைகளை மீறியதற்காக விதிக்கப்பட்ட அபராதம் ஆகும்.

ரிசர்வ் வங்கி ரூ. 28,000 கோடி இடைக்கால உபரி அறிவிப்பு

  • ரிசர்வ் வங்கி டிசம்பர் 31, 2018ஆம் தேதியுடன் முடிந்த அரை வருடத்திற்கு 28,000 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு இடைக்கால உபரியாக தருவதாக அறிவித்துள்ளது.

12 பொதுத்துறை வங்கிகளில் 48,239 கோடி ரூபாயை செலுத்த அரசு திட்டம்

  • 12 பொதுத்துறை வங்கிகளில் 48,239 கோடி ரூபாய்களை மறுசீரமைப்பதற்காக அரசாங்கம் இந்த நிதியாண்டில் அங்கீகாரம் அளித்துள்ளது. அவை ஒழுங்குமுறை மூலதன தேவைகள் மற்றும் நிதி வளர்ச்சி திட்டங்களை பராமரிக்க உதவுகின்றன.
  • அலகாபாத் வங்கியில் 6 ஆயிரத்து 896 கோடி ரூபாய் மற்றும் கார்ப்பரேஷன் வங்கியில் ஒன்பது ஆயிரம் கோடி ரூபாயை அரசாங்கம் முதலீடு செய்யும்.

ரிசர்வ் வங்கி, ஜப்பான் வங்கி இடையே இருதரப்பு பரிமாற்ற உடன்படிக்கை கையெழுத்து

  • இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் ஜப்பான் வங்கி ஆகியவை இருதரப்பு பரிமாற்ற உடன்படிக்கையில் (BSA) கையெழுத்திட்டன. பிஎஸ்ஏ 75 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவுக்கு தற்போது வழங்கியுள்ளது. இதற்கு முன் பிஎஸ்ஏ 50 பில்லியன் டாலர்கள் வழங்கியது.
  • இந்தியாவின் உள்நாட்டு நாணயத்திற்காக 75 பில்லியன் டாலர்கள் வரை தொகையை குறுகிய கால திரவத்தன்மையை பராமரிக்க வேண்டும்.

PDF Download

நடப்பு நிகழ்வுகள்  2018
Whatsapp குரூப்பில் சேர – கிளிக்செய்யவும்
Telegram Channel ல் சேர – கிளிக்செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!