SBI வங்கியின் பேலன்ஸ் & மினி ஸ்டேட்மெண்ட் அறிய எளிய முறை – வாட்ஸ்அப் சேவை!

0
SBI வங்கியின் பேலன்ஸ் & மினி ஸ்டேட்மெண்ட் அறிய எளிய முறை - வாட்ஸ்அப் சேவை!
SBI வங்கியின் பேலன்ஸ் & மினி ஸ்டேட்மெண்ட் அறிய எளிய முறை - வாட்ஸ்அப் சேவை!
SBI வங்கியின் பேலன்ஸ் & மினி ஸ்டேட்மெண்ட் அறிய எளிய முறை – வாட்ஸ்அப் சேவை!

எஸ்பிஐ வங்கியில் தங்கள் கணக்கை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் உள்ள பண இருப்பு மற்றும் மினி ஸ்டேட்மெண்ட் போன்றவற்றை எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் புதிய வாட்ஸ்அப் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் சேவை:

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கி கடந்த மாதம் தனது வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் வங்கி சேவைகளை அறிமுகப்படுத்தியது. தற்போது, மினி ஸ்டேட்மென்ட் மற்றும் அக்கவுண்ட் பேலன்ஸ் ஆகியவற்றை உடனடியாக சரிபார்க்க, எஸ்பிஐ வாட்ஸ்அப் வங்கிச் சேவைகளை பயன்படுத்தலாம். வாடிக்கையாளரின் கடைசி ஐந்து பரிவர்த்தனைகளின் விவரங்களை SBI வழங்கும். தனது புதிய வாட்ஸ்அப் வங்கி சேவைகள் குறித்து கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வங்கியானது அறிவித்து வருகிறது.

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் 5G சேவை அறிமுகம் – முகேஷ் அம்பானி அறிவிப்பு!

எஸ்பிஐ வாட்ஸ்அப் வங்கியில் பதிவு செய்யும் முறை:

எஸ்பிஐ வாட்ஸ்அப் பேங்கிங் சேவைகளைப் பயன்படுத்த, முதலில் உங்கள் கணக்கைப் பதிவு செய்து, அதற்கு எஸ்எம்எஸ் மூலம் உங்கள் ஒப்புதலை வழங்க வேண்டும். சேவைகளைப் பெற முயற்சிக்கும் பதிவு செய்யப்படாத வாடிக்கையாளர், முதலில் பதிவு செய்ய வேண்டும். அதன்படி, “நீங்கள் எஸ்பிஐ வாட்ஸ்அப் வங்கி சேவைகளில் பதிவு செய்யப்படவில்லை. இந்தச் சேவைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிவுசெய்து உங்கள் ஒப்புதலை வழங்க, பின்வரும் SMS WAREG A/c எண்ணை 917208933148 என்ற எண்ணுக்கு உங்கள் வங்கியில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து அனுப்பவும். இந்தச் சேவைகளுக்கான விரிவான டி&சியை நீங்கள் bank.sbi இல் பார்க்கலாம்” என்று பதிவு செய்யாத வாடிக்கையாளருக்கு எஸ்பிஐ போட் செய்தி வரும்.

எஸ்பிஐ வாட்ஸ்அப் வங்கி சேவைகளை பெறும் முறை:

உங்கள் கணக்கை பதிவு செய்ததும், ‘Hi’ SBI என டைப் செய்யவும். அப்போது, அந்த மெசேஜை அனுப்பியதும், நீங்கள்,

கீழே உள்ள விருப்பங்களில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கவும்.

1. கணக்கு இருப்பு

2. சிறு அறிக்கை

3. வாட்ஸ்அப் வங்கியிலிருந்து பதிவு நீக்கம்

என்ற விருப்பங்களை பெறுவீர்கள். உங்கள் கணக்கு இருப்பைச் சரிபார்க்க அல்லது உங்கள் கடைசி ஐந்து பரிவர்த்தனைகளின் சிறு அறிக்கையைப் பெற 1 அல்லது 2 ஐ தேர்வு செய்யவும். எஸ்பிஐ வாட்ஸ்அப் பேங்கிங்கில் இருந்து பதிவு நீக்கம் செய்ய விரும்பினால், ஆப்ஷன் 3ஐயும் தேர்வு செய்யலாம். இப்பொழுது, உங்கள் கணக்கு இருப்பு அல்லது மினி அறிக்கை உங்கள் விருப்பப்படி காட்டப்படும். அதில், உள்ள சந்தேகங்களை நாம் அதனை அனுப்பி தகுந்த பதிலை பெற்றுக் கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!