புதிய ரேஷன் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் – எளிய வழிமுறைகள் இதோ!!
அரசு பொது விநியோகம், சமையல் எரிவாயு போன்ற அன்றாட தேவைகளுக்கு ரேஷன் கார்டுகள் பெருமளவில் உதவுகிறது. இந்த ரேஷன் கார்டுகள் தொலைந்து விட்டால் அதை எளிய வழிமுறைகள் மூலம் ஆன்லைன் வழியாகவே பெற்றுக்கொள்ளலாம்.
ரேஷன் கார்டு:
மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ள ரேஷன் அட்டைகள் மக்களுக்கு பல்வேறு சலுகைகளை கொடுத்து வருகிறது. இந்த ரேஷன் அட்டைகள் தொலைந்து விட்டால் அதை மறுபடியுமாக பெற்றுக்கொள்வதற்கு மக்கள் பல இடங்களில் அலைந்து திரிய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இவற்றை தவிர்க்கும் வகையில் மத்திய அரசு ஸ்மார்ட் கார்டு திட்டத்தை துவங்கி வைத்துள்ளது. இதன் மூலம் ஒருவர் ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர் என்றால் அவர் எந்த இடத்திலிருந்து வேண்டுமானாலும் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.
TN Job “FB
Group” Join Now
இந்த ரேஷன் கார்டுகளை தொலைத்தவர்கள் ஆன்லைன் வழியாக எளிய வழிமுறையில் புதிய ரேஷன் கார்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.
10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
புதிய கார்டை விண்ணப்பிக்க,
- முதலில் https://tnpds.gov.in/ என்ற இணையதளத்துக்கு செல்லவும்.
- அதில் மின்னணு அட்டை விண்ணப்பிக்க என்பதை தேர்வு செய்யவும்.
- அதில் அடுத்த பக்கம் திறக்கும்.
- பிறகு புதிய அட்டைக்கான விண்ணப்பம் என்பதை கிளிக் செய்யவும்.
- அங்கு Name of Family Head என்று பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும்.
- அதில் ஆங்கிலத்திலும், தமிழிலும் சரியாக பதிவு செய்யவும்.
- பிறகு கேட்கப்பட்டுள்ள படி உங்கள் முகவரி, மாவட்டம், தாலுகா, கிராமம், அஞ்சல் குறியீடு, உங்களது மொபைல் எண், மெயில் ஐடி ஆகியவற்றை சரியாக பதிவு செய்யவும்.
- குடும்ப தலைவரின் புகைப்படம் என்று ஒரு பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும்.
- உங்கள் குடும்ப தலைவரின் புகைப்படத்தை அதில் பதிவேற்றம் செய்யவும்.
- புகைப்படம் 5 MB அளவில் இருக்கும்.
- பிறகு என்ன வகையான அட்டை வேண்டுமோ அந்த பாக்ஸை தேர்வு செய்ய வேண்டும்.
- அதில் இருப்பிட சான்று என்ற இடத்தில் ஏதாவதொரு ஆவணத்தை பதிவேற்றம் செய்யலாம்.
- இந்த ஆவணம் 1 MB அளவில் இருக்க வேண்டும்.
- பிறகு எரிவாயு இணைப்பு பற்றிய விவரங்களில் ஒரு இணைப்பு இருந்தால், ஒன்று என கொடுக்க வேண்டும்.
- எரிவாயுவில் எண்ணெய் நிறுவனம் எது என்பதை தெரிவு செய்யவும்.
- அதில் எத்தனை சிலிண்டர் என்பதை கொடுக்கவும்.
- பிறகு எத்தனை உறுப்பினர்கள் சேர்க்கை உள்ளதோ அதை கிளிக் செய்யவும்.
- அதில் குடும்ப தலைவர் பெயரை பதிவு செய்ய, ஏற்கனவே உள்ள தகவல்கள் திரும்ப பெறப்படும்.
- மேலும் சில தகவல்கள் கேட்கப்பட்டால் அதையும் பதிவு செய்யவும்.
- கடைசியாக scan செய்து ஆதார் எண்ணை upload செய்யவும்.
- பிறகு உறுப்பினர் சேர்க்கை என்ற ஆப்ஷனை தெரிவு செய்யவும்.
- பிறகு மனைவி, குழந்தை, மகன், மகள் போன்ற குடும்ப உறவுகளை பதிவிட்டு ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்யவும்.
- 5 வயதுக்கு உட்பட்ட குழந்தை பெயரை கொடுக்க வேண்டுமானால் பிறப்பு சான்றிதழே போதுமானது.
- அனைத்தும் முடிந்த பின் உறுப்பினர் சேர்க்கை save என்பதை தெரிவு செய்யவும்.
- இதில் திருத்தும் இருந்தால் சரிபார்த்து கொள்ளவும்.
- நீங்கள் கொடுத்துள்ள விவரங்களில் ஏதும் தவறாக காணப்பட்டால் red mark கொடுக்கப்படும்.
- பிறகு சரியான தகவல்களை நீங்கள் மாற்றி அமைத்து கொள்ளலாம்.
- கடைசியாக உங்கள் மின்னணு அட்டை பதிவு செய்யப்பட்டது என தகவல் வரும்.
- பிறகு ஒரு குறிப்பு எண் கொடுக்கப்படும்.
- அந்த எண்ணை வைத்து உங்கள் ரேஷன் கார்டு நிலைமையை தெரிந்து கொள்ளலாம்.
- இதை முடித்த பிறகு உங்கள் ஆதார் எண், போட்டோ, அப்ளிகேஷன் ஆகியவற்றை தாலுகா அலுவலகத்தில் கொடுக்கவும்.
- இதற்கு பிறகு 1 முதல் 2 மாதங்கள் கழித்து ரேஷன் அட்டைகள் உங்கள் கைகளில் கிடைக்கும்.