PF கணக்கில் உங்களது வங்கி கணக்கை இணைக்க வேண்டுமா? அப்போ இத படிங்க முதல்ல!

0
PF கணக்கில் உங்களது வங்கி கணக்கை இணைக்க வேண்டுமா? அப்போ இத படிங்க முதல்ல!

EPFO சந்தாதாரர்கள் தங்களது PF கணக்கில் வங்கி கணக்கை இணைப்பதற்கான எளிய வழிமுறைகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

PF கணக்கு:

EPFO என்னும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு சிறு தொகையை அவர்களது வருங்கால தேவைக்காக புதிய கணக்கை துவங்கி “ஓய்வூதிய சேமிப்புத் திட்டத்தின் கீழ் சேமித்து” வைக்கும் நிறுவனமாகும். இவ்வாறு சேமிக்கப்படும் தொகை PF தொகை அல்லது வருங்கால வைப்பு நிதி என்றழைக்கப்படும். இந்த PF தொகைக்கு 8.25% வட்டியாக EPFO நிறுவனத்தால் வழங்கப்படும். இவ்வட்டி தொகையானது சந்தாதாரர்களின் PF கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

இந்த PF பணத்தை சந்தாதாரர்கள் கணக்கு துவங்கி 05 ஆண்டுகள் முழுமை அடைந்த பின் அல்லது பணியில் இருந்து விலகிய பின் பெற்று கொள்ளலாம். அவ்வாறு இந்த PF பணத்தை எடுக்க விரும்பும் நபர்கள் தங்களது சரியான வங்கிக் கணக்கை PF கணக்குடன் இணைக்க வேண்டியது அவசியமானது ஆகும். மேலும் புதிய கணக்கு விவரங்களை புதுப்பிக்காமல் தங்கள் வங்கிக் கணக்கை மூடி இருந்தால் அதை உடனே PF கணக்கிலும் அப்டேட் செய்ய வேண்டும். இவ்வாறு EPFO சந்தாதாரர்கள் PF கணக்கில் வங்கி கணக்கை இணைப்பதற்கான படிநிலைகள் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

ICSIL மத்திய அரசு நிறுவனத்தில் வேலை – .ரூ.17,494/- ஊதியம் விண்ணப்பிக்கலாம் வாங்க!

கணக்கை இணைப்பதற்கான படிநிலைகள்:

  • சந்தாதாரர்கள் EPFO-வின் e-SEWA வலைதள பக்கத்தில் உள்ள உறுப்பினர் போர்ட்டலுக்குச் சென்று பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை சரியாக உள்ளிட்டு உள்நுழையவும்.
  • பிறகு Manage என்னும் தேர்வில் KYC என்பதை கிளிக் செய்யவும்.
  • பின் திரையில் தோன்றும் பக்கத்தில் உங்களது வங்கியை தேர்வு செய்து வங்கிக் கணக்கு எண், பெயர் மற்றும் IFSC குறியீட்டை சரியாக உள்ளிட்டு Save என்பதை கிளிக் செய்யவும்.
  • பிறகு உங்களது முதலாளி / நிறுவனத்தின் ஒப்புதலுக்குப் பிறகு, உங்களின் சமீபத்திய வங்கி விவரங்கள் அங்கீகரிக்கப்பட்ட KYC பிரிவில் தெரியும்.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!