ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் படித்தாலே டிரைவிங் லைசென்ஸ் – இன்று முதல் அமல்!

0
ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் படித்தாலே டிரைவிங் லைசென்ஸ - இன்று முதல் அமல்!
ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் படித்தாலே டிரைவிங் லைசென்ஸ - இன்று முதல் அமல்!
ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் படித்தாலே டிரைவிங் லைசென்ஸ் – இன்று முதல் அமல்!

அரசு அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற வாகன ஓட்டிகள் ஆர்டிஓ அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும் ஓட்டுநர் தேர்வில் கலந்து கொள்ளாமல் டிரைவிங் லைசன்ஸ் பெறலாம் என்ற புதிய அறிவிப்புகள் இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்துள்ளது.

புதிய விதிமுறைகள்

மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற வாகன ஓட்டிகள் டிரைவிங் லைசன்ஸ் பெறுவதற்கான புதிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டிருந்தது. முன்னதாக புதிதாக வாகனம் ஓட்டுபவர்கள் முதலில் எல்எல்ஆர் பெற்று, பின்னர் வாகனத்தை ஓட்ட பயிற்சி பெற்று, ஆர்டிஓ அலுவலகத்தில், வாகனங்களை ஓட்டி காட்டினால் தான் டிரைவிங் லைசன்ஸ் பெற முடியும். ஆனால் மத்திய அரசு அறிவித்துள்ள புதிய விதிமுறைகளின் படி வாகன ஓட்டிகள், அரசு அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றவர்களாக இருந்தால் அவர்கள் ஆர்டிஓ தேர்வுகளில் கலந்துகொள்ள தேவையில்லை.

தமிழகத்தில் மீண்டும் கடும் ஊரடங்கு உத்தரவு அமல்? ஆதிக்கம் செலுத்தும் கொரோனா!

இந்த விதிமுறையானது இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்துள்ளது. அதாவது மோட்டார் வாகன திருத்த சட்டம் 2019 ன் படி அரசு அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களில் புதிய விதிமுறைகளை அமல்படுத்த மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன் படி வாகன ஓட்டிகள், ஓட்டுநர் பரிசோதனை தேர்வில் கலந்து கொள்ளாமலேயே ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான அரசாணையை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதற்கான விதிமுறைகளாக அரசு அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்கள் 2 ஏக்கர் பரப்பளவு கொண்ட பயிற்சி கட்டமைப்பு வசதிகள், பயிற்சி வாகன வடிவமைப்பு வசதிகளை கொண்டிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

தவிர புதிய வாகன ஓட்டிகளுக்கு முதலாவது போக்குவரத்து குறியீடுகள், போக்குவரத்து விதிமுறைகள், வாகன கட்டமைப்பு, பொதுத்தொடர்பு, முதலுதவி உள்ளிட்டவை வகுப்புகளை நடத்த வேண்டும். மேலும் பயிற்சியின் போது வாகனங்களை மலை , கிராமம், நகரம், மேடு பள்ளம் போன்ற பல்வேறு நில அமைப்புகளில் ஓட்டும் முறை குறித்து வாகன ஓட்டிகளுக்கு கற்று கொடுக்க வேண்டும். தவிர வாகன ஓட்டுதல் சோதனையை நடத்தி அதை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும். இந்த பயிற்சிகளை முறையாக முடிக்கும் ஓட்டுனர்களுக்கு மட்டுமே ஓட்டுநர் தேர்வு இல்லாமல் லைசென்ஸ் கொடுக்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!