தமிழகத்தில் மீண்டும் கடும் ஊரடங்கு உத்தரவு அமல்? ஆதிக்கம் செலுத்தும் கொரோனா!

1
தமிழகத்தில் மீண்டும் கடும் ஊரடங்கு உத்தரவு அமல்? ஆதிக்கம் செலுத்தும் கொரோனா!
தமிழகத்தில் மீண்டும் கடும் ஊரடங்கு உத்தரவு அமல்? ஆதிக்கம் செலுத்தும் கொரோனா!
தமிழகத்தில் மீண்டும் கடும் ஊரடங்கு உத்தரவு அமல்? ஆதிக்கம் செலுத்தும் கொரோனா!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் மீண்டும் கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகம்:

தமிழகத்தில் கடந்த மே மாதத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கி வந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் கடும் கட்டுப்பாடுகள் அடங்கிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைய தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்துக்கு குறைவாக காணப்பட்டு வந்தது. இதனால் மாவட்டங்கள் தோறும் விதிக்கப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நவம்பர் வரை இலவச உணவுப் பொருட்கள் – 198 டன் தானியம் ஒதுக்கீடு!

இந்நிலையில் தற்போது ஓர் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் 4,512 என்ற அளவில் இருந்த புதிய பாதிப்புகள் எண்ணிக்கை நேற்று 4,506 ஆக பதிவு செய்யப்பட்டது. பாதிப்பு எண்ணிக்கை வித்தியாசம் வெறும் 6 ஆக இருப்பதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆனால் திருநெல்வேலி மாவட்டத்தில் புதிய பாதிப்பு அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

TN Job “FB  Group” Join Now

தமிழகத்தில் அளிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வுகளை மக்கள் முறையாக பின்பற்றாததே இதற்கு காரணம் என்று கூறப்பட்டு வருகிறது. ஏற்கனவே தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பாதிப்புகள் அதிகரித்தல் ஊரடங்கு அமலாகும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் வருகிற 5ம் தேதி காலை 6 மணி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரும் நிலையில் வரும் வாரத்தில் புதிய தளர்வுகள் அளிப்பதற்கு மாறாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் குறைவாகத்தான் உள்ளது. எங்களுக்கு லாக்டவுன் வேண்டாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here