DRDO நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு – கிடைத்த வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்!

0
DRDO நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு – கிடைத்த வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்!

மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான DRDO நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Joint Director (Accounts) மற்றும் Chief Accounts Officer பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் சிறிதும் தாமதிக்காமல் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் DRDO
பணியின் பெயர் Joint Director (Accounts), Chief Accounts Officer
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 60 நாட்கள்
விண்ணப்பிக்கும் முறை Offline
DRDO பணியிடங்கள்:

DRDO நிறுவனத்தில் Joint Director (Accounts) பணிக்கு என 01 பணியிடமும், Chief Accounts Officer பணிக்கு என 02 பணியிடங்களும் காலியாக உள்ளது.

DRDO பணிக்கான கல்வி விவரம்:
இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
DRDO பணிக்கான அனுபவ விவரம்:

விண்ணப்பதாரர்கள் அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Level – 12 (Rs.78800 – 209200/-) அல்லது Level – 11 (Rs.67700 – 208700) என்ற ஊதிய அளவுகளின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் குறைந்தபட்சம் 05 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

DRDO பணிக்கான வயது விவரம்:
இந்த DRDO நிறுவன பணிகளுக்கு 56 வயதுக்கு மேற்படாத நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

DRDO பணிக்கான சம்பள விவரம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Matrix Level – 13 என்ற ஊதிய அளவின் படி மாத சம்பளம் வழங்கப்படும்.

DRDO தேர்வு முறை:

இந்த DRDO நிறுவன பணிகளுக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு நேரடியாக பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

DRDO விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். அறிவிப்பு வெளியான நாள் முதல் அதற்கு அடுத்து வரும் 60 நாட்களுக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Download Notification & Application Link

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!