ரூ.31,000/- சம்பளத்தில் DRDO நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
ரூ.31,000/- சம்பளத்தில் DRDO நிறுவன வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
ரூ.31,000/- சம்பளத்தில் DRDO நிறுவன வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
ரூ.31,000/- சம்பளத்தில் DRDO நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

DRDO நிறுவனத்தில் இருந்து வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில் கடற்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்தில் (DRDO-NSTL) காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. Junior Research Fellow பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கடைசி நாள் முடிவடைவதற்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை எளிமையான முறையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

DRDO-NSTL வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்:

JRF ( Electronics & Instrumentation Engineering) பணிக்கு என 01 பணியிடமும், JRF (Electronic / Physics) பணிக்கு என 01 பணியிடமும் DRDO கீழ் இயங்கி வரும் கடற்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்தில் (DRDO-NSTL) காலியாக உள்ளது. அரசு அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் E & I Engg.பாடப்பிரிவில் B.E / B.Tech / M.E / M.Tech Degree தேர்ச்சி பெற்றவர்கள் JRF ( Electronics & Instrumentation Engineering) பணிக்கும், Electronics / Applied Electronics / Physics / Applied Physics பாடப்பிரிவில் M.Sc Degree தேர்ச்சி பெற்றவர்கள் JRF (Electronic / Physics) பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Exams Daily Mobile App Download

Junior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகபட்சம் 28 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்முக தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். இவ்வாறு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கு ரூ.31,000/- மாத சம்பளமாக கொடுக்கப்படும்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

இந்த DRDO-NSTL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்டுள்ள கால நேரம் முடிவடைய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!