இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. களைகட்டும் நகை விற்பனை!

0
இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. களைகட்டும் நகை விற்பனை!
இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. களைகட்டும் நகை விற்பனை!
இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. களைகட்டும் நகை விற்பனை!

பண்டிகை காலம் நெருங்குவதால் தங்கத்தின் விலை அதிகரிக்கும் என்று பொதுமக்கள் அச்சத்தில் இருந்த நிலையில், தற்போது சவரனுக்கு ரூ.160 குறைந்து மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கத்தின் விலை:

ஆபரணத் தங்கத்தின் விலை அட்சயதிருதியை, தீபாவளி பண்டிகை மற்றும் முகூர்த்தம் நிறைந்த நாட்களில் வழக்கத்தை விட விலை அதிகரிக்கும். அந்த நாட்களில் மக்கள் அதிக அளவில் நகைகளை வாங்குவதன் காரணமாக அதிக கொள்முதல் இருக்கும். இதனால் வணிக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்த்தப்படும். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி விட்டது. இதனால் மக்கள் தங்க நகைகளில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக அதிக விலை மாற்றத்தை சந்தித்து வரும் தங்க நகையின் விலையில் இன்று சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று 1 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,650 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும், ஒரு சவரன் ரூ.37,200 ஆக இருந்தது. இது கடந்த நாட்களை காட்டிலும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இன்று ஞாயிறு கிழமை வணிக சந்தைகள் விடுமுறைகள் என்பதால் விலையில் மாற்றம் இருக்காது.

இந்திய ஐடி துறை இளைஞர்கள் ஜாக்கிரதை – மத்திய அரசின் அறிவுறுத்தல்!

Exams Daily Mobile App Download

அதன்படி, சென்னையில் இன்று சந்தை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் 1 சவரன் ரூ. 37200 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல், 24 கேரட் ஆபரணத் தங்கம் 1 கிராம் ரூ.5052 க்கும் சவரன் ரூ.40,416 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, 1 கிராம் வெள்ளியானது ரூ.61.50 க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.61,500 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!