அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் உற்சாகம்! கடைகளில் குவியும் மக்கள்!
தங்க நகை என்றாலே தமிழ் பெண்களுக்கு ஆசை குறையாமல் இருக்கிறது. எத்தனை நகைகள் இருந்தாலும் மேலும் தங்கம் வாங்கவே பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தங்கம் விலை பவுனுக்கு ரூ.432 குறைந்து இருப்பதால் நகைபிரியர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
தங்கம் விலை:
இந்தியாவில் தங்கம் விலையானது சர்வதேச பொருளாதார நிலவரப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது. என்ன தான் விலை ஏற்றம் இருந்தாலும் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை குறையாமல் இருக்கிறது. காரணம் தங்கம் என்பது ஒரு முதலீடு பொருளாக பார்க்கப்படுவதால் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை எந்த சூழ்நிலையிலும் குறையாமல் இருக்கிறது. மேலும் எத்தனை நகைகள் இருந்தாலும் தங்கம் நகைகள் மீது உள்ள ஆசை பெண்களுக்கு அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது.
இந்நிலையில் இன்றைய தங்கத்தின் விலையை பொறுத்து தங்கம் வாங்க செல்வதே சிறந்தது என்பதால் தினசரி தங்கம் விலை நிலவரத்தை தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் படி தங்கம் விலையானது சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.54 குறைந்து ரூ.4,626-க்கும், பவுனுக்கு ரூ.432 குறைந்து ரூ.37,008-க்கும் விற்பனையானது.
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் வரவுள்ள அதிரடி மாற்றங்கள் – முக்கிய அரசாணை வெளியீடு!
Exams Daily Mobile App Download
இவ்வாறு ஒரே நாளில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.432 குறைந்து இருப்பதால் இது தங்கம் வாங்க உகந்த நாளாக இருக்கிறது. மேலும் தங்கம் விலை அடிக்கடி ஏற்ற தாழ்வுகளுடன் இருந்து வருவதால் தங்கம் வாங்க நினைப்பவர்கள் தற்போதே சென்று தங்கம் வாங்கலாம். மேலும் ஒரே நாளில் தங்கம் விலையில் இவ்வளவு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதால் நகைக்கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்