தமிழக பள்ளிக்கல்வித்துறையில் வரவுள்ள அதிரடி மாற்றங்கள் – முக்கிய அரசாணை வெளியீடு!

0
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் வரவுள்ள அதிரடி மாற்றங்கள் - முக்கிய அரசாணை வெளியீடு!
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் வரவுள்ள அதிரடி மாற்றங்கள் - முக்கிய அரசாணை வெளியீடு!
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் வரவுள்ள அதிரடி மாற்றங்கள் – முக்கிய அரசாணை வெளியீடு!

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் அடுத்தடுத்த மாற்றங்கள் வந்த வண்ணம் உள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது புதிய பணியிடங்களை உருவாக்கும் வகையில் அதிகாரிகள் பிரிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

புதிய பணியிடங்கள்:

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் இயக்குனரிடம் இருந்து செய்திகள் ஆணையர் வாயிலாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த வருடம் திமுக தலைமையிலான அரசு இயக்குனர் பணியை முழுமையாக ரத்து செய்தது. அனைத்து அதிகாரங்களையும் பள்ளிக்கல்வி ஆணையரிடத்தில் ஒப்படைத்தது. அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு எதிர்ப்புகள் வந்தது. மேலும் இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி அதிகாரிகள் தனியாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர். அனைத்து பள்ளிகளையும் ஒருவரே நிர்வகித்து வருவதால் மாவட்டக் கல்வி அதிகாரியால் சில பணிகளை முழுமையாகவும் திறம்படவும் செய்து முடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. மேலும் தொடக்க பள்ளிகளை வழிநடத்த சிறந்த அலுவலர்கள் இல்லாததால் கற்றல் – கற்பித்தலில் தொய்வு ஏற்படுவதாக புகார்கள் எழுந்தது. அத்துடன் ஒரே கல்வி அலுவலரால் எல்லா பள்ளிகளையும் செயல்முறைகளை மேற்பார்வை செய்ய வேண்டியுள்ளதால் காலதாமதம் ஏற்படுகிறது.

கொரோனா பரவலின் வேகம் அதிகரிப்பு.. 62 கோடியை நெருங்கும் பாதிப்பு – கட்டுப்பாடுகள் அமலாகுமா?

Exams Daily Mobile App Download

இந்த நிலையை மாற்ற தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு என்று தனித்தனியாக அதிகாரிகள் பிரிக்கப்பட்டுள்ளனர். புதிய பணியிடங்களை உருவாக்கும் நோக்கில் 58 மாவட்ட கல்வி அலுவலர்களை உருவாக்குமாறு கல்வி ஆணையர் அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது பள்ளிகள் மற்றும் அதில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 413 கல்வித் தொகுதிகள் மற்றும் 836 தொகுதிக் கல்வி அலுவலர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!