விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – டான் படக்குழுவினர் என்ட்ரியால் குஷி!

0
விஜய் டிவி 'குக் வித் கோமாளி' ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - டான் படக்குழுவினர் என்ட்ரியால் குஷி!
விஜய் டிவி 'குக் வித் கோமாளி' ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - டான் படக்குழுவினர் என்ட்ரியால் குஷி!
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – டான் படக்குழுவினர் என்ட்ரியால் குஷி!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படம் இன்று அனைத்து தியேட்டர்களிலும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் டான் திரைப்படத்தை ப்ரொமோட் செய்வதற்காக சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகனன் இருவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படியான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

குக் வித் கோமாளி:

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி திரைப்படத்துறையில் முன்னணி நடிகராக சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். வருடத்திற்கு ஒரு திரைப்படமாவது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து கொண்டிருக்கிறது. இவரது திரைப்படங்கள் அனைத்தும் படு ஹிட்டாகி கொண்டிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்த பிறகு தான் சிவகார்த்திகேயனுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. தனது முதல் திரைப்படமான மெரினா திரைப்படத்திலேயே எக்கச்சக்கமான ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார்.

“பாரதி கண்ணம்மா” சீரியலை விட்டு விலகும் நடிகர் அருண் – இனி பாரதியாக பிரபல நடிகர்!

அதற்குப் பிறகு மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து இருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் பல கோடி வசூலை அள்ளியது. தற்போது இயக்குனர் சந்திரா பரோட் இயக்கத்தில் உருவாகியுள்ள டான் திரைப்படத்தில் சிவாங்கி, சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்துள்ளனர். காமெடியும் காதலும் கலந்த இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகனன் நடித்துள்ளார். பல மாதக்கணக்காக இந்த திரைப் படத்திற்கு ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.

Exams Daily Mobile App Download

பின்பு ஒரு வழியாக இன்று பல தியேட்டர்களில் டான் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் டான் திரைப்படத்தை ப்ரொமோட் செய்வதற்காக சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகனன் இருவரும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். கோமாளிகள் அனைவரிடமும் சிவகார்த்திகேயன் சேர்ந்து அரட்டை அடிக்கும் படியான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!