“பாரதி கண்ணம்மா” சீரியலை விட்டு விலகும் நடிகர் அருண் – இனி பாரதியாக பிரபல நடிகர்!

0
"பாரதி கண்ணம்மா" சீரியலை விட்டு விலகும் நடிகர் அருண் - இனி பாரதியாக பிரபல நடிகர்!
“பாரதி கண்ணம்மா” சீரியலை விட்டு விலகும் நடிகர் அருண் – இனி பாரதியாக பிரபல நடிகர்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல், தற்போது சமூக கருத்து கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலில் பாரதியாக நடித்து வரும் அருண் பிரசாத் சீரியலை விட்டு விலக இருப்பதாகவும் அவருக்கு பதிலாக நடிகர் சஞ்சீவ் களமிறங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியல் கதைக்களம் தற்போது அடுத்தக்கட்டத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. பாரதி கண்ணம்மா குடும்ப வாழ்க்கையை பற்றியே கடந்த 3 ஆண்டுகளாக காட்டப்பட்ட நிலையில், தற்போது சமூக விழுப்புணர்வு கருத்துக்களை மையமாக வைத்து காட்சிகள் காட்டப்பட்டு வருகிறது. பாரதி மருத்துவமனையில் சக்தி என்ற குழந்தைக்கு இதய மாற்று அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்ற நிலைமை வருகிறது. அதனால் விழுப்புரத்தில் இருந்து இதயத்தை கொண்டு வர முயற்சிகள் நடைபெறுகிறது.

சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனமும், கதை சுருக்கமும்!

அதில் கண்ணம்மா புத்திசாலித்தனமாக இருக்க, ஆனால் அவருடைய கருத்துக்களை கேட்காமல் இருக்கின்றனர். விமானம் மூலமாக இதயத்தை எடுத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், கண்ணம்மா சொன்னது போல வானிலையில் பெரிய மாற்றம் வருகிறது. அதனால் என்ன செய்வது என தெரியாமல் இருக்கின்றனர். பாரதி விக்ரம் என அனைவரும் குழப்பத்தில் இருக்கின்றனர். கண்ணம்மா மழை நிற்க வேண்டும் என கடவுளை வேண்டிக் கொள்கிறார்.

Exams Daily Mobile App Download

இன்றைய எபிசோடில் இப்படி பரபரப்பாக கதை சென்று கொண்டிருக்கும் நிலையில் பாரதியாக நடித்து வரும் அருண் பிரசாத் சீரியலை விட்டு விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். மேலும் டாக்டர் பாரதி கதாபாத்திரத்தில் நடிகர் சஞ்சீவ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த ரோஷினி விலகியதால் TRPயில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. ஆனால் இப்போது பாரதியாக நடிக்கும் அருண் விலக இருப்பதாக வெளியான செய்தி பாரதி கண்ணம்மா ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!