தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – அதிகாரிகள் வெளியிட்ட முக்கிய தகவல் இதோ!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் - அதிகாரிகள் வெளியிட்ட முக்கிய தகவல் இதோ!
தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் - அதிகாரிகள் வெளியிட்ட முக்கிய தகவல் இதோ!
தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – அதிகாரிகள் வெளியிட்ட முக்கிய தகவல் இதோ!

தீபாவளி பண்டிகை வர இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் குறித்த எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை. எப்போது போனஸ் கிடைக்கும் என்று ஊழியர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

தீபாவளி போனஸ்:

தமிழகத்தில் திமுக கட்சியினர் அரசு தேர்தலின் போது அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படி உயர்த்தபடும் என்று வாக்குறுதி அளித்தனர். அதன் படி ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த ஜனவரி மாதம் அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அதற்கான அதிகாரபூர்வ அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதன் பிறகு கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் 34% அதிகரிக்கப்பட்டது.

இதனால் ஏராளமான அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், ஓய்வூதியதாரர்களும் பயன் பெற்று வருகின்றனர். தற்போது மத்திய அரசு தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4% உயர்த்தி 38% ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கும் 4% உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதனை தொடர்ந்து தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போனஸ் தொகை குறித்தும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இன்னும் தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரமே உள்ள நிலையில் இதுவரை எந்த நிர்வாகமும் தொழிற்சங்கங்க உறுப்பினர்களை அழைத்து போனஸ் குறித்து பேசவில்லை.

இன்னும் இத்தனை நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கு – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

Exams Daily Mobile App Download

ஆண்டுதோறும் தமிழக அரசு, போக்குவரத்து, மின்சார வாரியம், சிவில் சப்ளை கார்ப்பரேஷன், ஆவின், டாஸ்மாக், கூட்டுறவு சர்க்கரை ஆலை, பஞ்சாலைகள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கி வருகிறது. அதே போல நடப்பாண்டும் தீபாவளி போனஸ் வழங்குவது குறித்தும் அரசு ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் சி.ஐ.டி.யூ தமிழ் மாநில குழு தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஆண்டை போல நடப்பாண்டும் 20% போனஸ் வழங்குவது குறித்து நிதித்துறை செயலாளர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!