தமிழகத்தில் ஜூலை 11ம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு!

0

தமிழகத்தில் ஜூலை 11ம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு!

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள நெல்லையப்பர் திருக்கோவிலில் தேரோட்ட விழா நடைபெற இருப்பதால் வரும் ஜூலை 11ம் தேதியன்று அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

உள்ளூர் விடுமுறை

தமிழகத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி தேரோட்ட திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு நடைபெறும் இந்த திருவிழாவுக்கு தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி நெல்லையப்பரை தரிசிக்க வருகை தருவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் தேரோட்ட திருவிழா வரும் ஜூலை 11ம் தேதியன்று கொண்டாடப்பட இருக்கிறது.

தமிழகத்தில் 10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் கவனத்திற்கு – துணைத்தேர்வு குறித்த உத்தரவு!

இந்த விழாவின் தொடக்க நிகழ்வான கொடியேற்றம் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அம்பாளை தரிசனம் செய்திருந்தனர். இதை தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. இப்போது நெல்லையப்பர் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் ஜூலை 11ம் தேதியன்று நடைபெற இருக்கிறது.

இந்த தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வரும் ஜூலை 11ம் தேதி இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் முழுமையாக மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் ஜூலை 23ம் தேதி கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் அனைத்தும் வேலை நாளாக செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!