தமிழக பள்ளிகளில் சத்துணவு பொருட்கள் விநியோகம் – இன்று முதல் துவக்கம்!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அரசு பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் மாணவ மாணவிகளுக்கு வழங்க வேண்டிய சத்துணவு பொருட்கள் அவர்கள் பெற்றோர்களிடம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
சத்துணவு பொருட்கள் விநியோகம்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சத்துணவு திட்டம் மூலம் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் சத்துணவு திட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் உணவு பொருட்களை அனைத்தும் நிலுவையில் இருந்தது.
தமிழக கோயில் நிலங்களின் ஆவணங்கள் இணையத்தில் வெளியீடு – இந்து அறநிலையத்துறை!!
இந்த நிலையில் மாணவர்களுக்கான அரிசி, பருப்பு, முட்டை போன்ற சத்துணவு பொருட்களை அந்தந்த மாணவ, மாணவிகளுக்கு வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் படி கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் மாணவர்களுக்கு வழங்கவேண்டிய சத்துணவு பொருட்களை வழங்கும் பணிகள் தற்போது துவங்கியுள்ளது. ஆனால் இந்த முறை கொரோனா தாக்கம் சற்று குறைந்துள்ளதால், மாணவ, மாணவிகளின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து சத்துணவு பொருட்களை வழங்குவதற்கு அரசு முடிவெடுத்துள்ளது.
TN Job “FB
Group” Join Now
அதன் படி 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் 2 கிலோ 200 கிராம் அரிசியும், 880 கிராம் பருப்பும், 10 முட்டைகளும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 3 கிலோ 300 கிராம் அரிசியும், 1 கிலோ 230 கிராம் பருப்பும், 10 முட்டைகளும் கொடுக்கப்பட்டு வருகிறது. அதன் படி அரசு பள்ளி மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து பொருட்களை பெற்றுச்செல்கின்றனர்.