தமிழக கோயில் நிலங்களின் ஆவணங்கள் இணையத்தில் வெளியீடு – இந்து அறநிலையத்துறை!!

0
தமிழக கோயில் நிலங்களின் ஆவணங்கள் இணையத்தில் வெளியீடு - இந்து அறநிலையத்துறை!!
தமிழக கோயில் நிலங்களின் ஆவணங்கள் இணையத்தில் வெளியீடு - இந்து அறநிலையத்துறை!!
தமிழக கோயில் நிலங்களின் ஆவணங்கள் இணையத்தில் வெளியீடு – இந்து அறநிலையத்துறை!!

தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் திருக்கோயில் நிலங்களின் ஆவணங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அறநிலையத்துறையின் hrce.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

கோயில் நிலங்களின் ஆவணங்கள் :

தமிழகத்தில் ஏராளமான வரலாற்று மிக்க திருக்கோயில்கள் உள்ளது. இவை தமிழக இந்து அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வருகிறது. தமிழகம் முழுவதும் 36,000 கோயில்கள் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயில்களுக்குச் சொந்தமான 4 லட்சத்து 78 ஆயிரத்து 272 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களின் ஆவணங்களை சரிபார்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிலங்கள் மூன்று விதமாக பிரிக்கப்பட்டு சரி பார்க்கப்படுகிறது.

இன்று முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச C.A பயிற்சி – C.A தென்னிந்திய மைய தலைவர் அறிவிப்பு!!

இவை சரிபார்க்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. நிலங்களின் உரிமை ஆவணங்கள் வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள “தமிழ் நிலம்” மென்பொருளோடு ஒப்பீடு செய்யப்பட்டு முழுவதும் ஒத்துப்போகும் இடங்கள், பகுதியாக ஒத்துப்போகும் இடங்கள் மற்றும் புதிய இடங்கள் என மூன்று இடங்களாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன.

TN Job “FB  Group” Join Now

தற்போது முதற்கட்டமாக 3,43,647 முழுவதும் ஒத்துப்போகும் நிலங்களாக கண்டறியப்பட்டுள்ளது. இது மொத்த நிலங்களில் 72 சதவீதமாகும். மீதி உள்ள நிலங்களும் ஒத்து போகாத நிலங்களும் நடவடிக்கை எடுக்கப்பட்டு மாற்றப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி .கே. சேகர் பாபு தெரிவித்துள்ளார். தற்போது ஒத்து போகும் நிலங்களின் ‘அ’ பதிவேடு, நகர நில அளவைப் பதிவேடு மற்றும் சிட்டா ஆகியவை இந்து சமய அறநிலையத்துறையின் hrce.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!