தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – ஆய்வு செய்ய அரசு உத்தரவு!

0
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி - ஆய்வு செய்ய அரசு உத்தரவு!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி - ஆய்வு செய்ய அரசு உத்தரவு!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – ஆய்வு செய்ய அரசு உத்தரவு!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கூட்டுறவு சங்கங்களில் நகைகளை ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நகைக்கடன்:

நடந்து முடிந்த தேர்தல் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்துள்ளது. அதனை தொடர்ந்து தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றது. இதில் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு உட்பட்டு வழங்கப்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்பது முக்கியமான ஒன்று. கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கும் குறைவான நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது.

BSNL பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – ரீசார்ஜ் திட்டத்தின் வேலிடிட்டி அதிகரிப்பு!

இந்நிலையில் நகை கடன் வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், நகை அடமானம் வைத்தவர்களின் பெயர், விவரம் மற்றும் அவர்களது ரே‌ஷன் கார்டு, ஆதார் கார்டு, பான்கார்டு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது. எனவே 5 பவுனுக்கு குறைவான நகை கடன் மட்டுமின்றி கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்பட்டுள்ள அனைத்து நகை கடன்களையும் ஆய்வு செய்ய கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

SBI வங்கியில் 567 காலிப்பணியிடங்கள் – சம்பளம், வயது வரம்பு, கல்வித்தகுதி & விண்ணப்ப முறை!

கூட்டுறவு சங்கங்களில் 100 சதவீதம் நகைகளை ஆய்வு செய்து நாள்தோறும் அறிக்கை அளிக்க வேண்டும் என தமிழக அரசு உதவியுள்ளது குறிப்பிடத்தக்கது. நாள்தோறும் 250 கிராம் முதல் 300 கிராம் வரை நகைகளை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் மாவட்டத்தின் பெயர், ஆய்வில் ஈடுபட்ட குழுக்களின் எண்ணிக்கை, ஆய்வு செய்யப்பட்ட நகை, ஆய்வு செய்ய வேண்டிய நகை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய படிவத்தை பூர்த்தி செய்து நாள்தோறும் மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூடுதல் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!