SBI வங்கியில் 567 காலிப்பணியிடங்கள் – சம்பளம், வயது வரம்பு, கல்வித்தகுதி & விண்ணப்ப முறை!

0
SBI வங்கியில் 567 காலிப்பணியிடங்கள் - சம்பளம், வயது வரம்பு, கல்வித்தகுதி & விண்ணப்ப முறை!
SBI வங்கியில் 567 காலிப்பணியிடங்கள் - சம்பளம், வயது வரம்பு, கல்வித்தகுதி & விண்ணப்ப முறை!
SBI வங்கியில் 567 காலிப்பணியிடங்கள் – சம்பளம், வயது வரம்பு, கல்வித்தகுதி & விண்ணப்ப முறை!

நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கி அதன் மேலாண்மை குழுவில் சுமார் 567 காலி இடங்கள் ஏற்பட்டிருப்பதாக அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவும் தற்போது துவங்கியுள்ளது.

வேலை வாய்ப்புகள்

நாடு முழுவதும் நிலவி வரும் கொரோனா நோய் தொற்று சூழலுக்கு மத்தியில் புதிய வேலை வாய்ப்புகளும் தொடர்ச்சியாக பெருகிக்கொண்டே வருகிறது. அந்த வகையில் தொழில்நுட்ப நிறுவனங்கள் முதல் வங்கித்துறை நிறுவனங்கள் வரையும் வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடைக்கிறது. இந்நிலையில் இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கி நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) தற்போது புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

தமிழக பணியாளர்களுக்கு அரசு அறிவித்த 30% ஊதிய உயர்வு – அமைச்சர் பேட்டி!

இது தொடர்பான SBI வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், ‘SBI வங்கியின் புதிய வேலைவாய்ப்பு துறைகளில் உறவு மேலாளர், உறவு மேலாளர் (குழு முன்னணி), வாடிக்கையாளர் உறவு நிர்வாகி, முதலீட்டு அதிகாரி, மத்திய ஆராய்ச்சி குழு (தயாரிப்பு முன்னணி) மற்றும் மத்திய ஆராய்ச்சி குழு (ஆதரவு) ஆகியவை அடங்கும். SBI வங்கியில் இந்த பணிகளுக்கு மொத்தம் 567 இடங்கள் காலியாக இருக்கிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி அக்டோபர் 18 என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் SBI ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரிகள் பணியிடங்களுக்கு bank.sbi/careers அல்லது www.sbi.co.in/careers மூலம் விண்ணப்பிக்கலாம்.

SBI வங்கியின் உறவு மேலாளர்:

இப்பணிக்கு மொத்தம் 314 காலியிடங்கள் உள்ளன. ஜெனரல் – 126, OBC – 70; SC – 54, ST- 33, EWS – 31 மற்றும் மற்ற பிரிவுகளுக்கு – 25 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 23 மற்றும் அதிகபட்ச வயது 35 ஆகும். SBI வங்கியில் உறவு மேலாளர் பணிக்கு CTC வரம்பு ரூ.6 லட்சம் முதல் ரூ.15 லட்சம் ஆகும்.

உறவு மேலாளர் குழு முன்னணி:

இந்த பதவிக்கு, மொத்தம் 20 காலியிடங்கள் உள்ளன. ஜெனரல் – 8, OBC – 6, SC – 2, ST – 2, EWS – 2 மற்றும் மற்ற பிரிவுகளுக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 28 மற்றும் அதிகபட்ச வயது 40. SBI வங்கியின் ரிலேஷன்ஷிப் மேனேஜர் பதவிக்கு CTC வரம்பு ரூ.10 லட்சம் முதல் ரூ.28 லட்சம் ஆகும்.

வாடிக்கையாளர் உறவு நிர்வாகி:

இந்த பதவிக்கு, மொத்தம் 217 காலியிடங்கள் உள்ளன. ஜெனரல் -88, OBC – 57, SC – 35, ST 16, EWS – 21 மற்றும் மற்ற பிரிவுகளுக்கு -13 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இத்தகு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 20 மற்றும் அதிகபட்ச வயது 35 ஆகும். SBI வங்கியில் வாடிக்கையாளர் உறவு நிர்வாகியின் CTC வரம்பு ரூ.2 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் ஆகும்.

முதலீட்டு அதிகாரி:

இந்த பதவிக்கு, மொத்தம் 12 காலியிடங்கள் உள்ளன. ஜெனர- 5, OBC – 4, SC – 1, ST – 1, EWS – 1 மற்றும் மற்ற பிரிவுகளுக்கு – 1 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 28 மற்றும் அதிகபட்ச வயது 40. SBI முதலீட்டு அதிகாரியின் CTC வரம்பு ரூ.12 லட்சம் முதல் ரூ.18 லட்சம் ஆகும்.

மத்திய ஆராய்ச்சி குழு (தயாரிப்பு முன்னணி):

இந்த பதவிக்கு, மொத்தம் 2 காலியிடங்கள் உள்ளன. பொது – 1 மற்றும் OBC – 1 பிரிவுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 30 மற்றும் அதிகபட்ச வயது 45. SBI மத்திய ஆராய்ச்சி குழு (தயாரிப்பு முன்னணி) CTC வரம்பு ரூ.25 லட்சம் முதல் ரூ.45 லட்சம் ஆகும்.

மத்திய ஆராய்ச்சி குழு (ஆதரவு):

இந்த பதவிக்கு, மொத்தம் 2 காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 25 மற்றும் அதிகபட்ச வயது 35. SBI மத்திய ஆராய்ச்சி குழுவிற்கான (தயாரிப்பு முன்னணி) CTC வரம்பு ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் ஆகும்.

விண்ணப்ப பதிவு:
  • முதலில் SBI வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குள் நுழையவும்.
  • அதற்கு முன்னதாக விண்ணப்பதாரர்கள் தங்கள் சமீபத்திய புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  • இப்போது விண்ணப்பத்தை கவனமாக நிரப்பவும்.
  • விண்ணப்பம் முழுமையாக நிரப்பப்பட்டவுடன், அதை சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழகத்தில் அக்.4 வரை அதி கனமழைக்கு வாய்ப்பு – ஷாகீன் புயல் எதிரொலி!

  • இப்போது ஒரே நேரத்தில் விண்ணப்பத்தை நிரப்ப முடியாவிட்டால், அவர் ஏற்கனவே உள்ளிட்ட தகவல்களை சேமிக்க முடியும்.
  • தகவல் அல்லது பயன்பாடு சேமிக்கப்படும் போது, ஒரு தற்காலிக பதிவு எண் மற்றும் கடவுச்சொல் கணினியால் உருவாக்கப்பட்டு திரையில் காட்டப்படும்.
  • இந்த பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லை பதிவு செய்ய வேண்டும்.
  • இறுதியாக ஆன்லைனில் பதிவு செய்த பிறகு, விண்ணப்பதாரர்கள் கணினியில் உருவாக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்ப படிவங்களை பிரிண்ட் அவுட் எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணத்தை பொறுத்தளவு, பொது, EWS, OBC விண்ணப்பதாரர்களுக்கு ரூ.750 மற்றும் SC, ST மற்றும் PWD விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.

ஆவணத்தின் விவரங்கள்:
  • சுருக்கமான விண்ணப்பம் (PDF).
  • அடையாள சான்று (PDF).
  • பிறந்த தேதி சான்று (PDF).
  • சாதி சான்றிதழ் (PDF).
  • PWD சான்றிதழ் (PDF).
  • கல்விச் சான்றிதழ்கள்: மதிப்பெண் அல்லது பட்டம் சான்றிதழ் (PDF).
  • அனுபவ சான்றிதழ்கள் (PDF) – ஓட்டுநர் உரிமம் (இரு சக்கர வாகனம்).
  • படிவம் -16, லுகைக் கடிதம் அல்லது தற்போதைய முதலாளியிடமிருந்து சமீபத்திய சம்பளச் சீட்டு (PDF).
  • NOC (பொருந்தினால்) (PDF).
  • சமீபத்திய புகைப்படம்.
  • கையெழுத்து.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!