தடுப்பூசி செலுத்திய மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள்? அரசிற்கு கோரிக்கை!

0
தடுப்பூசி செலுத்திய மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள்? அரசிற்கு கோரிக்கை!
தடுப்பூசி செலுத்திய மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள்? அரசிற்கு கோரிக்கை!
தடுப்பூசி செலுத்திய மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள்? அரசிற்கு கோரிக்கை!

பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்புகள் அதிக அளவில் உறுதி செய்யப்பட்டு வருவதால் அங்கு அனைத்து பள்ளிகளையும் மூட அரசு முடிவெடுத்தது. இந்நிலையில், பள்ளி முதல்வர்கள் தடுப்பூசி செலுத்திய மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

அரசிடம் கோரிக்கை:

பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிக அளவில் இருந்து வந்த காரணத்தால் முன்னதாக பள்ளிகள் அனைத்தும் மாணவர்களின் நலன் கருதி மூடப்பட்டது. கடந்த மாதம், லூதியானா நிர்வாகம் பள்ளி முதல்வர்களுடன் நடத்திய சந்திப்பின் போது, அதிகபட்சமாக 15 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளை உள்ளடக்கும் வகையில் பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் தெரிவித்தது. நாட்டின் பல மாநிலங்களிலும் உள்ள பள்ளிகளும் கொரோனா தொற்று அதிகரித்து உள்ளதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பஞ்சாபின் பல நகரங்களில் உள்ள கல்வி அதிகாரிகளும் பள்ளி நிர்வாகமும் இனி வர இருக்கும் நாட்களில் மாநிலத் தேர்தல் வர இருப்பதால் பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசித்து வந்தனர்.

TN Job “FB  Group” Join Now

பஞ்சாப் மாநிலத்தின் பள்ளி முதல்வர்கள், செய்தியாளர்களிடம் பேசுகையில் தடுப்பூசி போடப்பட்ட மாணவர்களுக்கு பெற்றோரின் சம்மதத்துடன் பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். பஞ்சாப் பள்ளிகள் சங்கத்தின் கூட்டமைப்பு தலைவர் ஜக்ஜித் சிங் துரி, பள்ளிகள் 50 சதவீத மாணவர்களுடன் மீண்டும் திறக்கப்பட வேண்டும். பள்ளிகள் கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் நிலையில், பள்ளிகளை மூட சொல்வது நியாயமற்றது என்று கூறினார்கள்.

‘பிக் பாஸ்’ வீட்டில் புகைப்பிடித்து சர்ச்சையை உருவாக்கிய அபிராமி – நெட்டிசன்கள் விமர்சனம்!

பிஆர்எஸ் நகரில் உள்ள சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் வைரஸை எதிர்த்துப் போராட ஒவ்வொரு நாடும் தயாராக இருப்பது முக்கியம் என்றும், குழந்தைகளின் வளர்ச்சிக்கு பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்றும் கூறினார். தனியார் பள்ளி சங்கத் தலைவர் தாக்கூர் ஆனந்த், குழந்தைகளின் மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் கவலை போன்றவற்றை அதிகரிக்கும். பள்ளிகளை மூட அரசு வற்புறுத்தினால், சாலை வரி, காப்பீடு, மின் கட்டணம், சொத்து வரி, தண்ணீர் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என நிர்வாகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், லூதியானாவின் பாலர் சங்கத் தலைவர் அமன்பிரீத் சிங், கூட்டம் மற்றும் நீண்ட ஊர்வலங்களுடன் அரசியல் பேரணிகளை அனுமதி அளித்துள்ளது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். உணவகங்கள், பார்கள், திரையரங்குகள், மால்கள் 50 சதவீத திறனுடன் திறக்கப்படும் மற்றும் கோவில்கள், குருத்வாராக்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் கூட 100 சதவீத திறனுடன் திறக்கப்படும் என்று அரசு அனுமதி அளித்துள்ளது குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!