அதிக முறை கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற டாப் 5 வீரர்கள் டென்னிஸ் வீரர்கள் பட்டியல் – ஒரு அலசல்

0
அதிக முறை கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற டாப் 5 வீரர்கள் டென்னிஸ் வீரர்கள் பட்டியல் - ஒரு அலசல்
அதிக முறை கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற டாப் 5 வீரர்கள் டென்னிஸ் வீரர்கள் பட்டியல் - ஒரு அலசல்
அதிக முறை கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற டாப் 5 வீரர்கள் டென்னிஸ் வீரர்கள் பட்டியல் – ஒரு அலசல்

டென்னிஸ் வரலாற்றில் 21 முறை கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை ஸ்பானிஷ் நாட்டு டென்னிஸ் வீரர் ரபேல் நடால் படைத்துள்ளார். அதனை தொடர்ந்து அதிக முறை கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற டாப் 5 வீரர்கள் குறித்து இப்பதிவில் விரிவாக காண்போம்.

டாப் 5 வீரர்கள்:

2022 ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் ஜனவரி 17 ஆம் தேதி தொடங்கி நேற்று ஜனவரி 30 ஆம் தேதி முடிவடைந்தது. இதில் சிறப்பாக விளையாடிய ஸ்பானிஷ் நாட்டு டென்னிஸ் வீரர் ரபேல் நடாலும், ரஷ்யாவை சேர்ந்த டேனியல் மெத்வதேவும் இறுதி போட்டியில் மோதினர். நடப்பு லீக் போட்டியின் போது அவர்கள் காட்டிய பார்மைப் பார்க்கும்போது இருவரும் இறுதிப்போட்டியில் பலப்பரிட்சையில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக நேற்று ஆட்டம் நடைபெற்றது.

TN Job “FB  Group” Join Now

இதில் ரபேல் நடால் வெற்றி பெற்று தனது 21 வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். இதனால் அதிக கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற வீரர்கள் பட்டியலில் ரபேல் நடால் முதல் இடத்தில் திகழ்கிறார். ரபேல் நடால் பிரெஞ் ஓபனில் 13, அமெரிக்க ஓபனில் 4, ஆஸ்திரேலியா ஒபெனில் 3, விம்பிள்டனில் 2 என மொத்தமாக 21 முறை கிராண்ட்சிலாம் பட்டத்தை வென்றுள்ளார். இதனை தொடர்ந்து சுவிட்சர்லாந்து வீரர் பெடரர் 2 வது இடத்தை பிடித்துள்ளார். இவர் ஆஸ்திரேலியா ஒபெனில் 6,பிரெஞ் ஓபனில் 1, விம்பிள்டனில் 8, அமெரிக்க ஓபனில் 5 என மொத்தமாக 20 கிராண்ட்சிலாம் பட்டத்தை வென்றுள்ளார்.

தடுப்பூசி செலுத்திய மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள்? அரசிற்கு கோரிக்கை!

அடுத்தபடியாக சொர்பியாவை சேர்ந்த ஜோகோவிச் ஆஸ்திரேலியா ஒபெனில் 9, பிரெஞ் ஓபனில் 2 , விம்பிள்டனில் 6, அமெரிக்க ஓபனில் 3 என மொத்தமாக 20 கிராண்ட்சிலாம் பட்டத்தை வென்று 3 வது இடத்தை தக்க வைத்துள்ளார். 4 வது இடத்தில் அமெரிக்காவின் சாம்பிராஸ் ஆஸ்திரேலியா ஒபெனில் 2, பிரெஞ் ஓபனில் 0, விம்பிள்டனில் 7, அமெரிக்க ஓபனில் 5 என மொத்தமாக 14 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றுள்ளார். இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த எமர்சன் ஆஸ்திரேலியா ஒபெனில் 6, பிரெஞ் ஓபனில் 2, விம்பிள்டனில் 2, அமெரிக்க ஓபனில் 2 என மொத்தமாக 12 முறை கிராண்ட்சிலாம் பட்டத்தை வென்று 5 வது இடத்தில் உள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!