10th முடித்தவரா நீங்கள்! தமிழக அரசின் தொல்லியல், கல்வெட்டியல் பட்ட படிப்பு – 1 வருட பயிற்சி வகுப்பு!

0
10th முடித்தவரா நீங்கள்! தமிழக அரசின் தொல்லியல், கல்வெட்டியல் பட்ட படிப்பு - 1 வருட பயிற்சி வகுப்பு!
10th முடித்தவரா நீங்கள்! தமிழக அரசின் தொல்லியல், கல்வெட்டியல் பட்ட படிப்பு - 1 வருட பயிற்சி வகுப்பு!
10th முடித்தவரா நீங்கள்! தமிழக அரசின் தொல்லியல், கல்வெட்டியல் பட்ட படிப்பு – 1 வருட பயிற்சி வகுப்பு!

தமிழகத்தில் 2023-2024 ஆம்‌ ஆண்டிற்கான ஓராண்டு கல்வெட்டியல்‌ மற்றும்‌ தொல்லியல்‌, அகழாய்வுக்கான பட்டய வகுப்பு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியான நிலையில், இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இறுதி நாள் டிசம்பர் 31 என்பதால் தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொல்லியல் படிப்பு:

சென்னை, உலகத்‌ தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக ஓராண்டுக்கான தொல்லியல் டிப்ளமோ படிப்பிற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. வார இறுதி நாளான ஞாயிற்று கிழமை ஒரு நாள் முழுவதும் மட்டுமே இப்படிப்பிற்கான வகுப்புகள் சென்னையில் உள்ள கல்லூரியில் நடத்தப்படும். அனைத்து மாவட்டத்தையும் சேர்ந்த 10 ம் வகுப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், இப்படிப்புக்கு அதிகபட்ச வயது வரம்பு எதுவும் இல்லை. கல்வெட்டியல்‌ மற்றும்‌ தொல்லியல்‌, அகழாய்வுக்கான பட்டய வகுப்பு வரும் ஜனவரி மாதம் முதல் தொடங்கப்படும்.

Follow our Instagram for more Latest Updates

இப்படிப்பில், கல்வெட்டியல்‌, தொல்லியல்‌ வழி தமிழக வரலாறு, மொழி, பண்பாடு, கலை, இலக்கியம்‌ குறித்து அறிந்து கொள்வதற்கும்‌, கல்வெட்டுப்‌ படியெடுத்தல்‌ மற்றும்‌ ஆவணப்படுத்தலுக்கான பயிற்சிகள் அளிக்கப்படும். இதற்கு நேரடி விண்ணப்பம் மட்டுமே பெறப்படும், விண்ணப்பங்கள் டிசம்பர் 31ம் தேதி மாலை 5 மணிக்குள் உலகத்‌ தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு செல்ல வேண்டும். இப்படிப்பிற்கு சேர்க்கை கட்டணமாக 1 முறை மட்டும் ரூ.3,100 செலுத்த வேண்டும். இப்படிப்பு குறித்த மேலும் அதிக தகவல்களை https://www.ulakaththamizh.in/ என்ற தளத்தில் இருந்தும், வேலை நாட்களில்‌ காலை 10 மணி முதல்‌ மாலை 5 மணி வரை 044-22542992, 9500012272 என்ற தொலைபேசி எண்களில்‌ தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம்.

அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மறுவாய்ப்பு – தேர்வு கால அட்டவணையை வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகம்!

Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
  • முதலில், https://www.ulakaththamizh.in/ என்ற அதிகாரபூர்வ தளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில் ஓராண்டு கல்வெட்டியல்‌ மற்றும்‌ தொல்லியல்‌, அகழாய்வுக்கான பட்டய வகுப்பு குறித்த இணைப்பு இருக்கும்.
  • அதனை கிளிக் செய்து விண்ணப்ப படிவம் உள்ள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
  • விண்ணப்பத்தில் கேட்கப்பட்டிருக்கும் உங்களை பற்றிய விவரங்கள் அனைத்தையும் உள்ளிட வேண்டும்.
  • மேலும், 10 ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அல்லது TC மற்றும் நீங்கள் கட்டணம் செலுத்திய RECEIPT இரண்டையும் விண்ணப்பத்துடன் சேர்ந்து, இயக்குநர்‌, உலகத்‌ தமிழாராய்ச்சி நிறுவனம்‌, இரண்டாம்‌ முதன்மைச்‌ சாலை, மையத்‌ தொழில்நுட்பப்‌ பயிலக வளாகம்‌, தரமணி, சென்னை – 600 113 என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
  • அதன்பின்னர், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வகுப்பு ஆரம்பிக்கும் நாள், மற்றும் மற்ற விவரங்கள் குறித்து தெரிவிக்கப்படும்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!