டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு…!
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Dev Ops, Tester, Developer, Full Stack Developer, State Coordinator, Graphic Designer, Tech Executive and Security Admin பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Dev Ops, Tester, Developer, Full Stack Developer, State Coordinator, Graphic Designer, Tech Executive and Security Admin பணிக்கென 51 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
Exams Daily Mobile App Download
- விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 1 முதல் 5 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன் அனுபவம் கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu’s Best TNPSC Coaching Center
- விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 15.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.