டேராடூன் ராணுவ கல்லூரி மாணவர் சேர்க்கை 2021 – நுழைவுத்தேர்வு அறிவிப்பு!

0
டேராடூன் ராணுவ கல்லூரி மாணவர் சேர்க்கை 2021 - நுழைவுத்தேர்வு அறிவிப்பு!
டேராடூன் ராணுவ கல்லூரி மாணவர் சேர்க்கை 2021 - நுழைவுத்தேர்வு அறிவிப்பு!
டேராடூன் ராணுவ கல்லூரி மாணவர் சேர்க்கை 2021 – நுழைவுத்தேர்வு அறிவிப்பு!

டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய ராணுவ கல்லூரியில் 2022 ம் ஆண்டுக்கான 8 -ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நுழைவு தேர்வு டிசம்பர் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நுழைவு தேர்வு:

உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய ராணுவ கல்லூரியில் 2022 ம் ஆண்டுக்கான 8 -ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு டிசம்பர் 18ம் தேதி நடைபெற உள்ளதாக கூறப்பட்டது. அதனை தொடர்ந்து நேர்முக தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த தேர்வு எழுதுபவர்களுக்கான தகுதி மற்றும் வயது குறித்த விவரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு (DA) – எதிர்பார்ப்பு! விரைவில் அறிவிப்பு வெளியாகுமா?

நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர் 2022, ஜூலை 1 ந் தேதி அன்று 11 வயது குறையாமலும், 13 வயது பூர்த்தியாகாமல், 7ம் வகுப்பு பயில்பவராக அல்லது தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். விண்ணப்பம் மற்றும் தகவல் குறிப்பேட்டினை, கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி, டேராடூன் 248003, உத்தரகாண்ட் மாநிலம் என்ற முகவரிக்கு விரைவு தபால் அனுப்பி பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. தேர்வு எழுதுவதற்கு கட்டணம் செலுத்துவது கட்டாயமாகும்.

தமிழக அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு – நிதித்துறை செயலர் எச்சரிக்கை!

தேர்வு கட்டணத்தை வங்கி கிளையில் மாற்றத்தக்க வகையில் பொதுப்பிரிவினர் ரூ.600 க்கும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர், ஜாதி சான்றுடன் ரூ.555 க்கு கேட்பு காசோலை அனுப்ப வேண்டும். இதற்கு, www.rimc.gov.in என்ற இணையதளத்தையும் பயன்படுத்திக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், பூங்கா நகர், சென்னை என்ற முகவரிக்கு வருகிற 30ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!