தமிழக அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு – நிதித்துறை செயலர் எச்சரிக்கை!
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் சிகிக்சை பெறும் அரசு ஊழியர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட கூடாது என்று நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
கூடுதல் கட்டணம்:
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளது. இதன் முலம் அவர்கள் குறைவான தொகையில் சிகிச்சை பெற முடியும். மருத்துவக் காப்பீட்டிற்காக அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தில் இருந்து குறிப்பிட்டத் தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. மருத்துவ சிகிச்சையின் போது இந்த அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு மூலம் மொத்த தொகையில் பாதி தொகை மட்டும் செலுத்த வேண்டும் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்கும் நேரம் – விரைவில் அறிவிப்பு!
அரசு ஊழியர்கள் அரசு ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணமில்லாமல் தமிழகம் புதுச்சேரி பெங்களூரு திருவனந்தபுரம் புதுடில்லி போன்ற பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது இந்த திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுபவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை காட்டிலும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்து வருகிறது.
இது குறித்து தமிழ்நாடு ஓய்வு பெற்ற அதிகாரிகள் சங்கத்தினர் அரசிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு, ஆசிரியர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் – மாநில அரசு அறிவிப்பு!
அந்த மனுவில் வரையறை செய்யப் பட்டதை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள் மீது காப்பீட்டு நிறுவனங்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பயனாளர்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் கூடுதலாக செலுத்தப்பட்ட கட்டணமும் பயனாளிகளுக்கு திருப்பி செலுத்த படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். நிலையில் ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பும்போது கூடுதல் தொகைகளை வசூலிக்கக் கூடாது என்று நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் எஸ் கிருஷ்ணன் அறிவித்துள்ளார் அப்படி வசூலிப்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்
அரசு ஊழியருக்கு பெர்சனல் என்பது கேள்விக்குறி ஆகியநிலையில் மருத்துவராகப் சீட்டு திட்டம் ஒருமோசடிதிட்டமாகப்பார்க்கப்படுகிறது.s.vellaisamyMA