ஜூன் 2018 – பாதுகாப்பு செய்திகள்

0

ஜூன் 2018 – பாதுகாப்பு செய்திகள்

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 2018 PDF பதிவிறக்கம் செய்ய

இங்கு ஜூன் பாதுகாப்பு செய்திகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

ஜூன்  பாதுகாப்பு செய்திகள் PDF பதிவிறக்கம் செய்ய

பாதுகாப்பு செய்திகள் – ஜூன் 2018

அக்னி-5 ஏவுகணை வெற்றிகர சோதனை

  • அணு ஆயுதங்களைச் சுமந்து சென்று தொலைதூர இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் அக்னி-5 ஏவுகணை, டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவிலிருந்து (வீலர் தீவு) 03.06.2018 அன்று வெற்றிகரமாக ஏவிப் பரிசோதிக்கப்பட்டது.
  • அனைத்து ரேடார்கள், மின் ஒளியியல் சுவடு பற்றிச் செல்லும் நிலையங்கள், தொலை தூரத் தொடர்பு நிலையங்கள், ஏவுகணையின் விசை வீச்சு வளைவை அதன் பாதையில் செலுத்தின. ஏவுகணையின் அனைத்து நோக்கங்களும் இந்த பரிசோதனையில் எட்டப்பட்டன.

இந்தியர்களை காப்பாற்றுவதற்காக ஆபரேஷன் ‘NISTAR’

  • மெக்னு புயலால் ஏமன் சோகோட்ரா தீவில் தனியாக சிக்கிக்கொண்டிருந்த 38 இந்தியர்கள் இந்திய கப்பல் ஐ.என்.எஸ். சுனேயானால் மீட்கப்பட்டனர்.

மலபார் கூட்டுப்பயிற்சி 2018

  • இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படைகள் பங்கேற்கும் மலபார் கூட்டுப்பயிற்சி 2018 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதியிலிருந்து 16 ஆம் வரை அமெரிக்காவின் குவாமில் நடைபெறுகிறது.

ஜியோ-இன்டெலிஜென்ஸ் ஆசியா 2018

  • ஜியோ-இன்டெலிஜென்ஸ் ஆசியா 2018 பதினொன்றாம் பதிப்பை புதுடில்லியிலுள்ள ஜியோஸ்பேஷியல் மீடியா அண்ட் கம்யூனிகேஷன் நடத்தியது.
  • தீம்: ‘GeoSpatial: A Force Multiplier for Defence and Industrial Security’.

2 வது BSF மவுண்ட். எவரெஸ்ட் பயணம்

  • பத்மஸ்ரீ லவ்ராஜ் சிங் தர்மசாக்டு என்பவர் எவரெஸ்ட் சிகரத்தை 7-ஆவது முறையாக சென்றடைந்து வரலாறு படைத்துள்ளார்.

(IND-INDO ​​CORPAT ) இந்த்-இந்தோ கார்பட்

  • இந்தியா – இந்தோனேசியா ஒருங்கிணைந்த ரோந்துப் பிரிவின் (IND-INDO ​​CORPAT) 31 வது பதிப்பின் நிறைவு விழா 06 முதல் 09 ஜூன் 18 வரை நடைபெறுகிறது.

முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ‘தனுஷ்’ பீரங்கி இறுதிக்கட்ட சோதனை வெற்றி

  • முதல் முறையாக முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ‘தனுஷ்’ பீரங்கி, நீண்ட தொலைவில் உள்ள இலக்கை குறிபார்த்து சுடவல்லது. மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் இது தயாரிக்கப்பட்டது.

இந்தியா செப்டம்பர் மாதம் முதல் BIMSTEC இராணுவப் பயிற்சியை நடத்த உள்ளது.

  • செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் புனேயில் உள்ள பயங்கரவாத எதிர்ப்புக் குழுவில் BIMSTEC (Multi-Tech தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான குழுவின் துவக்கப் பிரிவு) முதல் இராணுவப் பயிற்சியை இந்தியா நடத்த உள்ளது.

வியட்நாமில் BEL பிரதிநிதித்துவ அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது

  • ரத்ஷா மந்திரி, திருமதி நிர்மலா சீதாராமன், வியட்நாம், ஹனோய் நகரில் நவரத்னா பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெடின் (BEL) முதல் பிரதிநிதி அலுவலகத்தை திறந்து வைத்தார்.

உத்திரபிரதேசத்தில் வெள்ள அபாயம் மற்றும் முன்னேற்ப்பாடு பயிற்சி

  • தேசிய பேரழிவு மேலாண்மை ஆணையம் (NDMA)) உத்திர பிரதேசத்தில் லக்னோவில் உள்ள அரசு அவசர நடவடிக்கை மையத்தில் (SEOC) ஒரு பயிற்சி மேற்கொண்டது.
  • இந்தப் பயிற்சி மாநில பேரழிவு மேலாண்மை ஆணையம் (SDMA) உடன் இணைந்து நடத்தப்பட்டுள்ளது.

மேலும் அறிய – கிளிக் செய்யவும்

2018 தினசரி நடப்பு நிகழ்வுகள் கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!