திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு முக்கிய அறிவிப்பு – அலைமோதும் கூட்டம்!

0
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு முக்கிய அறிவிப்பு - அலைமோதும் கூட்டம்!
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு முக்கிய அறிவிப்பு - அலைமோதும் கூட்டம்!
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு முக்கிய அறிவிப்பு – அலைமோதும் கூட்டம்!

இன்று சித்திரை 1-ம் தேதி தமிழ் புத்தாண்டாக, சித்திரை திருநாளாக தமிழர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சித்திரை முதல் நாளான இன்று ‘பிலவ’ ஆண்டு விடை பெற்று ‘சுப கிருது’ புத்தாண்டு பிறந்துள்ளது. தமிழ் புத்தாண்டையொட்டி அதிகாலை முதலே கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அதிகாலை தொடங்கி நள்ளிரவு வரை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.

சிறப்பு தரிசனம்:

ஆந்திரா மாநிலத்தின் சிறப்பே திருப்பதி கோவில்கள் தான், இதில் மிகவும் பிரபலமானது ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயில். திருமலை மலைகளின் ஏழு சிகரங்களில் ஒன்றில் அமர்ந்திருக்கிறது. நாடு மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள கோவில்களை விட இந்த கோவிலுக்கு தான் பக்தர்கள் அதிகம் உண்டு. இக்கோவிலின் கட்டிடங்கள் பழைய கால முறையில் அமையப்பட்டிருக்கும். இந்தியா முழுவதும் கோவிட்-19 தொற்றின் அதீத தாக்கத்தால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து துறைகளிலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. இந்த கட்டுப்பாடுகள் மூலம் அனைத்து வழிபாட்டு தளங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி (DA) உயர்வு அமல் – வலுக்கும் கோரிக்கை

இந்த நிலையில் பல்வேறு தடுப்பு விதிமுறைகளான கொரோனா தடுப்பூசி , மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி மூலம் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும் அமலில் இருந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது. இந்நிலையில் திருப்பதி கோவிலும் நோய் தொற்று கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது. திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏழுமலையானை தரிசனம் செய்ய தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இதில் ஏராளமானோர் பாதயாத்திரையாக மலை ஏறி நடந்து சென்று தரிசனம் செய்கின்றனர். பலரும் ஆன்லைன் மூலம் https://ttdsevaonline.com இணையதளத்தில் 300 ரூபாய் தரிசன கட்டணத்திற்கு புக்கிங் செய்து செல்கின்றனர். இது தவிர சர்வ தரிசன சேவை என இலவச டிக்கெட் மூலமும் தரிசனம் செய்யலாம்.

மேலும் இன்று தமிழ் வருடப் பிறப்பை முன்னிட்டு அனைத்து வழிபாட்டு தளங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. அந்த வகையில் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகமான பக்தர்கள் இன்று திரண்டுள்ளனர். மேலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 88 ஆயிரத்து 748 பக்தர்கள் சாமி தரிசனம் செய்த நிலையில், உண்டியல் வருமானமாக 4 கோடியே 82 லட்சம் ரூபாய் கிடைக்கப் பெற்றதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கட்டுப்பாடுகள் இன்றி இலவச தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இருப்பினும் பக்தர்கள் மாஸ்க் அணிதல் போன்ற நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கோவில் நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!