Daily Current Affairs March 14, 15 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

0

Daily Current Affairs March 14, 15 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

Top Current Affairs March 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – 14 & 15 மார்ச் 2021

தேசிய நிகழ்வுகள்

NIREH அமைப்பின் பசுமை வாளாகதினை திறந்து வைத்தார்!!

  • ICMR என்று கூறப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய சுற்றுச்சூழல் சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்திற்கான(NIREH) புதிய பசுமை வளாகத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வரதன் சிங் திறந்து வைத்தார்.
  • NIREH கடந்த 2010 ஆம் ஆண்டே துவக்கப்பட்டு விட்டது. இது போபாலில் உள்ள ICMR அமைப்பின் நிரந்தர ஆராய்ச்சி மையமாக தற்போது வரை செயல்பட்டு வருகின்றது.
  • இத்துடன் ICMR மற்றும் புற்றுநோய் சிகிச்சை மையத்துடன் உருவாக்கிய மைக்காலஜி ஆராய்ச்சி மையத்தினையும் திறந்து வைத்தார்.

ICMR-NIREH பற்றி

NIREH மற்றும் ICMR அமைப்பின் இயக்குனர் – டாக்டர் ஆர்ஆர்.திவாரி

செயலாளர் – டாக்டர் பால்ராம் பார்கவா

இந்தியாவில் மின்சார பயன்பாடு 16.5 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது என்று தகவல்!!

  • இந்த மாதத்தின் முதல் 12 நாட்களில் இந்தியாவில் மின்சார பயன்பாடு 16.5 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புள்ளிவிவரத்தினை மத்திய எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
  • நடப்பு மாதத்தின் முதல் 12 நாட்களில் நாட்டின் மின்சார பயன்பாடு 4.767 யூனிட்டுகளாக உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் 12 வரையிலான தேதிகளில் 4,092 அளவில் யூனிட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • கடந்த ஆண்டு இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 16.5 சதவீத வளர்ச்சி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய எரிசக்தி அமைச்சகம் பற்றி

மத்திய அமைச்சர் – ராஜ் குமார் சிங்

நிறுவகிக்கப்பட்டது – 1992

தலைமையகம் – புது டெல்லி

உயர் வளிமண்டல ஆய்வுக்காக இஸ்ரோ உருவாக்கியுள்ள சவுண்டிங் ராக்கெட் சோதனை வெற்றி!!

  • உயர் வளிமண்டல பரப்பில் நிலவும் காற்று மற்றும் பிளாஸ்மா அயனிகள் தொடர்பான ஆய்வுக்காக இஸ்ரோ சார்பில் ‘சவுண்டிங் ராக்கெட்’ வெற்றிகரமாக ஏவப்பட்டது. ககன்யான், சந்திரயான்-3 உட்பட பல்வேறு ஆய்வுத் திட்டங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
  • சிறிய ரகஆய்வு சாதனங்களை புவியின்தாழ்ந்த சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தவும், வளிமண்டலம் தொடர்பான விண்வெளி ஆய்வுக்கும் சவுண்டிங் ராக்கெட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
  • அந்த வரிசையில், ஆந்திர மாநிலத்தில் உள்ள ஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோ சார்பில் ஆர்எச்-560 ரக சவுண்டிங் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

இஸ்ரோ பற்றி

நிறுவகிக்கப்பட்டது – 1969

தலைவர் – சிவன்

தலைமையகம் – பெங்களூரு

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 2021

சர்வதேச நிகழ்வுகள்

1 பில்லியன் கொரோனா தடுப்பூசிகளை வழங்க குவாட் மாநாட்டில் 4 நாட்டின் தலைவர்கள் ஒப்புதல்!!

  • இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா தலைவர்களின் முதல் குவாட் உச்சி மாநாட்டில் வரும் 2022 ஆம் ஆண்டிற்குள் 1 பில்லியன் தடுப்பூசிகளை ஆசியா பகுதிகளில் உள்ள மக்களுக்கு வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. குவாட் கூட்டமைப்பின் முதல் உச்சிமாநாட்டில் உலகளாவிய பல பிரச்சனைகள் குறித்து 4 நாடுகளின் தலைவர்களும் விவாதித்தனர்.
  • அதில் தடுப்பூசிகள் வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த தடுப்பூசிகள் இந்திய நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கூடுதலாக, இந்த மாநாட்டில் சீனாவின் தொடர்ச்சியான துன்புறுத்தல்களை எதிர்த்து போராடுவது குறித்தும் பேசப்பட்டது.

இந்தியா மற்றும் பாகிஸ்தானின் சிந்து நதி ஆணையாளர்கள் சந்திப்பு நடைபெறவுள்ளது!!

  • சிந்து நதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் நீரைப் பகிர்ந்து கொள்வது குறித்து பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையேயான பேச்சுவார்த்தை டெல்லியில் வரும், 23 – 24ல் நடக்க உள்ளது.பாகிஸ்தான் – இந்தியா இடையே பாயும் நதிகளின் நீரைப் பகிர்ந்து கொள்வது குறித்து 1960ல் சிந்து நதி ஒப்பந்தம் போடப்பட்டது.
  • சிந்து நதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் நீரைப் பகிர்ந்து கொள்வது, நீர் மின் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக ஆலோசனை செய்வதற்காக, இரு நாட்டிலும், சிந்து நதி கமிஷனர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
  • இந்தியாவின் சிந்து நதி கமிஷனர், பி.கே.சக்சேனா தலைமையிலான குழுவும், பாகிஸ்தான் சிந்து நதி கமிஷனர், சையது முகமது மெஹர் அலி ஷா தலைமையிலான குழுவும் இதில் பங்கேற்க உள்ளனர்.

பாகிஸ்தான் பற்றி

தலைமையகம் – இஸ்மிலாபாத்

அதிபர் – ஆரிப் அல்வி

பிரதமர் – இம்ரான் கான்

விளையாட்டு செய்திகள்

ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான தமிழக வீராங்கனை!!

  • ஜப்பான் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீராங்கனை பவானி தேவி பங்கு பெறவுள்ளார். இவர் வாள் வீச்சில் பங்குபெறும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.வருகிற ஜூலை மாதம் 23 ஆம் தேதி ஜப்பான் நகரில் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இவர் வாள்வீச்சில் உலக தரவரிசை பட்டியலில் 45வது இடத்தில் உள்ளார். 27 வயதுடைய பவானி தேவி சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர்.
  • இவர் பல்வேறு சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளார். இவர் Adjust Official Ranking என்ற வழிமுறை படி ஒலிம்பிக் போட்டியில் தேர்வாகியுள்ளார்.

3000 ரன்களை கடந்த முதல் கிரிக்கெட் வீரர் விராட் கோலி!!

  • இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்திற்கு எதிரான சர்வதேச டி 20 போட்டிகளில் விளையாடி வருகின்றது. இதனை அடுத்து இதில் கேப்டன் விரட்ட கோலி 3000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
  • நேற்று நடைபெற்ற போட்டியில் கேப்டன் விராட் கோலி 73 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் விளையாடினார். வருக்கு அடுத்த படியாக அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் கப்டில் 2,839 ரன்கள் 2வது இடத்திலும், ரோஹித் சர்மா 2,773 ரன்கள் 3வது இடத்திலும் உள்ளனர்.

Download TNPSC Notification 2021 

மரணங்கள்

ஜெர்மனி ஆஸ்பத்திரியில் ஐவரி கோஸ்ட் நாட்டின் பிரதமர் மரணம்!!

  • ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட் நாட்டின் பிரதமராக இருந்து வந்தவர், ஹமேட் பக்காயோகோ (வயது 56). அங்கு ஏற்கனவே பிரதமராக இருந்து வந்த அமடோ கோன் கூலிபாலியின் திடீர் மரணத்தை தொடர்ந்து, பக்காயோகோ அந்த நாட்டின் பிரதமராக கடந்த ஜூலை மாதம் 8-ந்தேதிதான் பதவிக்கு வந்தார்.
  • புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் முதலில் பாரீஸ் நகரில் சிகிச்சை பெற்றார். பின்னர் ஜெர்மனிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரெய்பர்க் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
  • அவரது மறைவுக்கு அதிபர் அலசேன் குவாட்டாரா இரங்கல் தெரிவித்துள்ளார்.

முக்கிய தினங்கள்

உலக நுகர்வோர் தினம் 2021!!

  • நுகர்வோரின் உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மார்ச் 15ஆம் தேதி, உலக நுகர்வோர் உரிமைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. நுகர்வோரின் அடிப்படை உரிமைகளை விளக்குவது அதன் மீது நடவடிக்கை எடுத்தல், சந்தை குற்றங்களுக்கு எதிராக போராடுதல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்கள் ஆகும்.
  • இந்த தினம் அனைத்துலக நுகர்வோர் அமைப்பின் சார்பில் அனுசரிக்கப்படும் தினமாகும்.
  • 1962ஆம் ஆண்டு அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ஜான் கென்னடி உலக நுகர்வோர் அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக தூக்க தினம் 2021!!

  • ஒவ்வொரு ஆண்டும் உலக தூக்க தினம் மார்ச் மாதத்தில் இரண்டாவது வாரத்தின் வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் பல கோடி பேர் நாள்தோறும் தூக்கமின்றி தவிக்கின்றனர். இதற்கு மன அழுத்தம் மற்றும் எதிர்காலம் குறித்த அச்சம், கவலையே முக்கிய காரணம் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
  • ஆரோக்கியமான தூக்கமே பல பிரச்சனைகளை தீர்க்கிறது. தூக்கமே நல்ல மருந்தாக செயல்படுகிறது.
  • தூக்கம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்த தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

Download CA Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!