Daily Current Affairs March 13, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

0

Daily Current Affairs March 13, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

Top Current Affairs March 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – 13 மார்ச் 2021

தேசிய நிகழ்வுகள்

இந்தியாவில் தொழில்துறை உற்பத்தி 1.6 சதவீதமாக வீழ்ச்சி என்று மத்திய அரசு தகவல்!!

  • கடந்த ஜனவரி மாதத்தில் இந்தியாவில் தொழில்துறை உற்பத்தி 1.6 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளதாக மத்திய அரசு ஒரு புள்ளிவிவரத்தினை வெளியிட்டுள்ளது.
  • உற்பத்தி துறை 2 சதவீதமாகவும், சுரங்கதுறை 3.7 சதவீதமாகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது என்று அந்த புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இது ஒரு பக்கம் இருக்க மின் உற்பத்தி 5.5 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் துறையில் செயல்பாடும் 4.4 சதவீதத்தில் இருந்து 9.6 சதவீதமாக பின்னடைவினை சந்தித்துள்ளது.
  • கடந்த ஆண்டு இந்த துறைகளில் வளர்ச்சி சதவீதம் 0.50 சதவீதமாக இருந்ததாக மத்திய அரசு அந்த புள்ளி விவரத்தில் தெரிவித்துள்ளது.

75 வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு “ஆசாத் கா அம்ருத்” கொண்டாடட்டம் துவக்கம்!!

  • அடுத்த ஆண்டு வர இருக்கும் சுதந்திர தினம் இந்தியாவின் 75 வது சுதந்திர தினம் ஆகும்.
  • இதனை முன்னிட்டு இந்திய அரசு சார்பில் “ஆசாத் கா அம்ருத்” கொண்டாடட்டம் கோலாகலமாக ஆரம்பித்தது. வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி துவங்கி அடுத்து ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை நாடு முழுவதிலும் உள்ள முக்கியமான 75 இடங்களில் விழாக்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த விழாவினை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.

சர்வதேச நிகழ்வுகள்

சர்வதேச குவாட் கூட்டணி மாநாடு நடைபெற்றது!!

  • கடந்த 2004 ஆம் ஆண்டு “குவாட்” என்ற கூட்டணி அமைக்கப்பட்டது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் இணைத்து செயல்படுகின்றன. இந்த கூட்டமைப்பின் முதல் சந்திப்பு காணொளி காட்சியாக நடைபெற்றது.
  • இந்த கூட்டத்தில் 4 நாடுகளின் பிரதமர்கள் மற்றும் அதிபர்கள் பங்கேற்றனர்.
  • இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஆகியோர் பங்கேற்றனர். உலகளவில் உள்ள முக்கியமான பிரச்சனைகள் மற்றும் விவகாரங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 2021

மாநில நிகழ்வுகள்

உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு!!

  • உத்தரகாண்ட் மாநிலத்தில் தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தீரத் சிங் ராவத் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகின்றது. இதனை அடுத்து தற்போது புதிதாக அவரது தலைமையிலான புதிய அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களது பதவி பிரமணத்தினை அம்மாநில ஆளுநர் பேபி ராணி மௌரியா முன்பு ஏற்று கொண்டனர்.
  • இவரது புதிய அமைச்சாரவையில் புதிதாக 11 எம்எல்ஏகள் அமைச்சர்களாக பதவி ஏற்று கொண்டனர்.

விருதுகள்

“செல்லாத பணம்” என்ற நாவலுக்காக எழுத்தாளர் இமயத்திற்கு சாகித்ய அகாடமி விருது!!

  • நமது நாட்டில் தமிழ், மலையாளம் உள்ளிட்ட 24 மொழிகளில், தலைசிறந்த படைப்புக்களை வழங்கியவர்களுக்கு ஆண்டு தோறும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகின்றது. இதனை அடுத்து இந்த ஆண்டு எழுத்தாளர் இமயம் எழுதிய “செல்லாத பணம்” என்ற நாவலுக்காக சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தனது சாதியினை தவிர்த்து வேறு சாதியில் திருமணம் செய்து கொள்ளும் பெண் சந்திக்கும் பிரச்சனைகளை இந்த நாவல் அழகாக படம் பிடித்து காட்டியுள்ளது.

உலக அளவில் அதிக சொத்து சேர்ந்தவர்களில் கௌதம் அதானி முதலிடம்!!

  • சொத்து உருவாக்கத்தில் உலகின் “நம்பர் 1” இடத்தில் பணக்கார்களை விட இந்தியாவின் கௌதம் அதானி நடப்பு ஆண்டில் முன்னணியில் இருக்கிறார்.
  • உலகின் மிக பெரிய பணக்காரர் ஆன அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெசோஸை விட சொத்து சேர்ப்பதில் அதானி தான் முதல் இடத்தில் உள்ளார். “பிளூம்பெர்க் பில்லினியர்ஸ் இன்டெஸ்” வழங்கியுள்ள ஆய்வு அறிக்கையின் படி அதானி 1.18 லட்ச ரூபாயினை சேர்த்துள்ளார். இதனை அடுத்து அவரது மொத்த சொத்து மதிப்பு 3.65 லட்சம் கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அதானி குழும நிர்வாகத்தின் சொத்து மதிப்பு 50 சதவீதத்தில் இருந்து 90 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டுகளை விட குழந்தை தொழிலாளர்கள் பொது முடக்கத்தின் போது அதிகரித்துள்ளதாக ஆய்வில் தகவல்!!

  • குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான பிரச்சாரம் என்ற அமைப்பு தமிழகத்தின் 24 முக்கிய நகரங்களில் குழந்தை தொழிலாளர்கள் குறித்த ஆய்வு ஒன்றினை மேற்கொண்டது. அதில் கடந்த ஆண்டு 28.2 சதவீதமாக இருந்த குழந்தை தொழிலாளர்கள் விகிதம் இந்த பொது முடக்கத்தின் போது 79.6 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 6 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளிடம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

நியமனங்கள்

கர்நாடக உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக முகமது கவுஸ் சுக்குரே நியமனம்!!

  • இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 224-வது பிரிவின் ஒன்றாம் உட்பிரிவு தமக்கு அளித்துள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, கர்நாடக உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக முகமது கவுஸ் சுக்குரே கமாலை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.
  • இது தொடர்பான அறிவிப்பை மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் நீதித்துறை வெளியிட்டுள்ளது.
  • கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் பெங்களூரிலுள்ள இதர நீதிமன்றங்களிலும் 23 வருடங்களுக்கும் அதிகமாக திரு முகமது கவுஸ் சுக்குரே கமால் பணியாற்றியுள்ளார்.
  • சிவில், கிரிமினல், அரசியலமைப்பு, தொழிலாளர், நடுவர் மன்றம், வருவாய் மற்றும் வக்பு சார்ந்த வழக்குகளில் இவர் பணியாற்றியுள்ளார்.

Download TNPSC Notification 2021 

விளையாட்டு நிகழ்வுகள்

சர்வதேச மகளிருக்கான கிரிக்கெட் போட்டிகளில் மித்தாலி ராஜ் 10 ஆயிரம் ரன்களை குவித்து சாதனை!!

  • சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை குவித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும், உலக அளவில் இந்த சாதனையை இரெண்டாவது முறையாக நிகழ்த்திய வீராங்கனை என்ற சாதனையும் இந்திய அந்த கேப்டன் மித்தாலி ராஜ் செய்துள்ளார்.
  • தென் அப்பிரிக்காவிற்கு எதிராக நடந்த 3 வது ஒரு நாள் போட்டிகளில் அவர் 32 ரன்களை எடுத்த போது இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
  • கடந்த 1999 ஆம் ஆண்டு மித்தாலி இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தார்.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டனாக பிராத்வெயிட் நியமனம்!!

  • இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடவுள்ளது. மேலும் இந்த இரு அணிகளுக்குமான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 21ம் தேதி துவங்கவுள்ளது.
  • இந்த அணியின் கேப்டன் ஹோல்டர் சில காரணங்களால் போட்டிகளில் பங்கேற்கவில்லை. அதற்கு பதிலாக கிரிக்கெட் வீரர் பிராத்வெயிட் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஏற்கனவே இவரது தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடியோ கேசட் டேப் கண்டுபிடிப்பாளர் லூ ஒட்டன்ஸ் மரணம்!!

  • ஆடியோ கேசட் டேப்பை வடிவமைத்த டச்சு நாட்டை சேர்ந்த பொறியியலாளர் லூ ஒட்டனஸ் காலமானார். அவருக்கு வயது 94. அவரது சொந்த ஊரான Duizel பகுதியில் இயற்கையுடன் காலந்துள்ளார் லூ ஒட்டனஸ்.
  • ஓட்டென்ஸ் 1960 இல் பிலிப்ஸின் தயாரிப்பு மேம்பாட்டுத் துறையின் தலைவரானார். அங்கு அவரும் அவரது குழுவும் போர்ட்டபிள் டேப் ரெக்கார்டரை வடிவமைத்தார்கள்.
  • தொடர்ந்து 1963 வாக்கில் உலகிற்கு தாங்கள் வடிவமைத்த ஆடியோ கேசட் டேப்பை காட்சிப்படுத்தினார். அதோடு அதற்கு காப்புரிமையும் பெற்றார். தொலைக்காட்சி அதிகம் இல்லாத அந்த கால கட்டத்தில் மக்களுக்கு பொழுது போக்காக இருந்தது இந்த கேசட்டுகளின் டேப் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய நாட்கள்

உப்பு வரி விதித்த வெள்ளையர்களை எதிர்த்த “சத்தியகிரக போராட்டம்” நடந்த தினம் இன்று!!

  • இந்தியா ஆங்கிலேயர்கள் ஆட்சியின் கீழ் இருந்த போது அவர்கள் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உப்பிற்கு வரியினை விதித்தனர்.
  • இதனை எதிர்த்து தேச தந்தை மகாத்மா காந்தி கடந்த மார்ச் 12 ஆம் தேதி 170 பேர் கொண்ட குழுவுடன் தண்டி என்ற இடத்தினை நோக்கி பயணம் மேற்கொண்டார்.
  • இதனை அடுத்து இந்த தினத்தினை நினைவு கூறும் வகையில் பிரதமர் மோடி தண்டி யாத்திரையை அஹமதாபாத் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தொடங்கி வைத்தார்.

Download CA Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!