நடப்பு நிகழ்வுகள் ஜூன் 19, 2018

0

நடப்பு நிகழ்வுகள் ஜூன் 19, 2018

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

ஜூன் நடப்பு நிகழ்வுகள் வினா விடை – கிளிக் செய்யவும்

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

தேசிய செய்திகள்

மணிப்பூர்

உலகின் உயரமான கிர்டர் ரயில் பாலத்திற்கு SAIL எஃகு வழங்கியது

  • மணிப்பூரில், 111 கிமீ நீளமுள்ள ஜிராபம்-துப்புல்-இம்பால் புதிய பரந்த பாதை ரயில் திட்டத்திற்காக, ஸ்டீல் அதாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் (SAIL) 60,000 டன் எஃகு பொருள்களை வழங்கியுள்ளது.

தமிழ்நாடு

ஐபிஎம் உடன் இணைந்து என்பிடிஇஎல் ஆன்லைன் பயிற்சி

  • பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம் உடன் இணைந்து தொழில்நுட்ப முன்னேற்ற கற்றல் தேசிய திட்டம் (NPTEL) மூலம் தொகுதி வாரிய கட்டிடக்கலை, வடிவமைப்பு மற்றும் பயன்பாடு ஆகியவற்றிற்கு 12-வார ஆன்லைன் பயிற்சி வழங்கப்படும்.

சர்வதேச செய்திகள்

உயிர் எரிபொருள் மூலம் ஓடிய விமானம்

  • புதிய கேட் பசிபிக் ஏர்பஸ் ஏ 350-1000 விமானம் பிரஞ்சு நகரமான துலூஸ்ஸில் இருந்து ஹாங்காங் வரை கரும்பு அடிப்படையிலான உயிரி எரிபொருள் மூலம் ஓடியது.

அறிவியல் செய்திகள்

அரசு கூகுளுடன் இணைந்து வெள்ளப்பெருக்கை கணிக்கத்திட்டம்

  • மத்திய நீர் ஆணையம் கூகுளுடன் இணைந்து வெள்ளப் பெருக்கை கணிக்கவும் நீர் ஆதாரங்களை சிறப்பாக நிர்வகிப்பதற்கும், வெள்ளம் தொடர்பான தகவல்களை மக்களுக்கு பரப்ப ஒப்பந்தம் செய்துள்ளது.

உலகின் மிகப் பழமையான சுமத்திரா ஓராங்குட்டான் மரணம்

  • உலகில் வயதான அருகிவரும் இனங்களில் ஒன்றான சுமத்திரா ஓராங்குட்டான் ஆஸ்திரேலிய மிருகக்காட்சி சாலையில் தனது 62 வயதில் உயிரிழந்துள்ளது.
  • “மிக வயதான பெண்” என்று அழைக்கப்படும் ‘புவாம்’ என்ற பெயர்கொண்ட இந்த ஓராங்குட்டான் வயது முதிர்ச்சி தொடர்பான சிக்கல்கள் காரணமாக கடந்த திங்களன்று உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வணிகம் & பொருளாதாரம்

பத்திரிகையாளர்களுக்கான பயிற்சி திட்டத்தை கூகுள் அறிவித்தது

  • மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் தவறான தகவல் மற்றும் போலி செய்திகளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பத்திரிகையாளர்களுக்கான பயிற்சித் திட்டத்தை அறிவித்தது.

கடலோரப் பகுதிகளுக்கான காற்று சக்தி தேசிய இலக்குகளை அரசு அறிவித்துள்ளது

  • காற்றுத் தொழில்துறைக்கு நம்பிக்கை ஏற்படுத்த காற்று ஆற்றல் திறன் மேம்பாட்டிற்காக, அமைச்சகம் 2022 ஆம் ஆண்டில் 5 ஜிகாவாட், 2030 ஆம் ஆண்டில் 30 ஜிகாவாட் ஆகிய நடுத்தர மற்றும் நீண்டகால இலக்கை அறிவித்துள்ளது.

மாநாடுகள்

நீடித்த வளர்ச்சிக்கு நீரின் அவசியம்: பத்தாண்டிற்கான சர்வதேச நடவடிக்கை 2018-2028

  • துஷான்பேயில் நடைபெற உள்ள “நீடித்த வளர்ச்சிக்கு நீரின் அவசியம்: பத்தாண்டிற்கான சர்வதேச நடவடிக்கை 2018-2028” என்ற உயர் மட்ட மாநாட்டில் நிதின் கட்கரி பங்கேற்கிறார். உலகம் முழுவது ஒருங்கிணைந்த மற்றும் நீடித்த நீர்வள மேலாண்மை குறித்த தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேச நடவடிக்கைகளை ஊக்குவிப்பதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.

பாதுகாப்பு செய்திகள்

இணைய பாதுகாப்புக் கட்டமைப்புக்கான பயிலரங்கு 2018

  • பாதுகாப்புத் துறைக்காக, பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு உற்பத்தித்துறை இணைய பாதுகாப்பு கட்டமைப்பு பயிலரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த பயிலரங்கை பாதுகாப்பு அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.

திட்டங்கள்

தேசிய சுகாதார சுயவிவரம் – 2018

  • மத்திய சுகாதார புலனாய்வுத் துறையால் (CBHI) தயாரிக்கப்பட்ட தேசிய சுகாதார சுயவிவரம் – 2018 சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஸ்ரீ ஜீ பி நட்டாவால் வெளியிடப்பட்டது.

தரநிலைக்கான தேசிய வியூகம்

  • இந்திய தொழில்துறை வர்த்தக மற்றும் கூட்டமைப்பு (சிஐஐ) திணைக் களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தர நிலைக்கான தேசிய வியூகத்தை
    வர்த்தக மந்திரி 5 வது தேசிய நியதிக் கூட்டத்தில் புது தில்லியில் வெளியிட்டார்.

இந்தியாவின் தேசிய டிஜிட்டல் நூலகம்

  • ஐ.ஐ.டி கரக்பூரால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் தேசிய டிஜிட்டல் நூலகம் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரால் புது தில்லியில் தொடங்கப்பட்டது.

ஒருங்கிணைந்த முதலமைச்சர்கள் துணைக்குழு

  • வேளாண்மை மற்றும் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கொள்கை அணுகுமுறைகளை ஒருங்கிணைக்க முதலமைச்சர்கள் துணைக்குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
  • திட்டத்திற்கான ஒருங்கிணைந்த கொள்கை அணுகுமுறைகளை ஏற்படுத்த, ஏழு மாநில முதலமைச்சர்களையும் ஒருங்கிணைக்கும் அமைப்பாளராக மத்தியப் பிரதேச முதலமைச்சரை பிரதமர் நியமித்துள்ளார்.

தரவரிசை & குறியீடு

இருதய நோய்க்கான ஆபத்து

  • கேரளம் முதலிடத்திலும் ஜார்கண்ட் கடைசி இடத்திலும் உள்ளது.
  • பெண்களுக்கான உயர்ந்த சராசரி இதய ஆபத்து – கோவா (16.73%)
  • ஆண்களுக்கான உயர்ந்த சராசரி இதய ஆபத்து – ஹிமாச்சல பிரதேசம், நாகாலாந்து (24.23%)

புத்தகங்கள் & ஆசிரியர்கள்

  • கழிமுகம் (ஆறு கடலோடு கலக்கும் இடம்) – பெருமாள் முருகன்

காவல்துறைக்கான சட்ட நடைமுறைக் கையேடு

  • குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தொடர்பாகக் காவல்துறைக்கான சட்ட நடைமுறைக் கையேட்டை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி மேனகா சஞ்சய் காந்தி தில்லியில் இன்று நடைபெற்ற விழா ஒன்றில் வெளியிட்டார்.

விருதுகள்

  • மனிஷா வருண் – திருமதி. இந்தியா யுனிவர்ஸ் 2018

நியமனங்கள்

  • சந்தீப் பக்ஷி – ஐசிஐசிஐ வங்கியின் தலைமை இயக்க அதிகாரி

விளையாட்டு செய்திகள்

481 ரன்கள் குவித்து இங்கிலாந்து  உலகசாதனை

  • ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 481 ரன்கள் குவித்து இங்கிலாந்து புதிய உலகசாதனையை நிகழ்த்தியதோடு, ஆஸ்திரேலியாவை 239 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியை ஈட்டியதோடு ஒருநாள் தொடரையும் 3-0 என்று கைப்பற்றியது.

 PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!