Daily Current Affairs July 20 2021 in Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

0
Daily Current Affairs July 20 2021 in Tamil
Daily Current Affairs July 20 2021 in Tamil

தினசரி நடப்பு நிகழ்வுகள் – 20 ஜூலை 2021

Top Current Affairs July 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!

சர்வதேச நிகழ்வுகள்

பஷர் அல் அசாத்  சிரியாவின் ஜனாதிபதியாக 4 வது முறையாக பதவியேற்றார்.

  • பஷர் அல் அசாத் சிரியாவின் ஜனாதிபதியாக 4 வது முறையாக பதவியேற்றார்.  இவர் பதவிக்காலம் 7 ஆண்டுகள் ஆகும் .
  • பஷர் அல் அசாத் 17 ஜூலை 2000 முதல் சிரியாவின் 19 வது ஜனாதிபதியாக உள்ளார்.

சிரியா

  • தலைநகரம் : டமாஸ்கஸ்
  • நாணயம்: சிரிய பவுண்டு
  • பிரதமர்: இமாத் காமிஸ்
  • தலைவர்: பஷர் அல் அசாத்

டிஜிட்டல் நில பயன்பாட்டு தரவு சேகரிப்பை நிறைவு செய்த முதல் கண்டமாக ஆப்பிரிக்கா திகழ்கிறது.

சுற்றுச்சூழல், வேளாண்மை மற்றும் நில முன்முயற்சி (DEAL) க்கான ஆபிரிக்காவின் திறந்த தரவுகளின் கீழ் துல்லியமான, விரிவான மற்றும் இணக்கமான டிஜிட்டல் நில பயன்பாடு மற்றும் நில பயன்பாட்டு மாற்ற தரவுகளை சேகரிப்பதை நிறைவு செய்த உலகின் முதல் கண்டமாக ஆப்பிரிக்கா திகழ்கிறது.

  • தரவு சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வு முயற்சிகள் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) மற்றும் ஆப்பிரிக்க யூனியன் ஆணையம் (AUC) ஆகியவற்றால் வழிநடத்தப்பட்டன.
  • DEAL – Data for the Environment, Agriculture and Land Initiative
  • FAO – Food and Agriculture Organization
  • AUC – African Union Commission

உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO)

  • தலைமையகம்: ரோம், இத்தாலி
  • இயக்குநர் ஜெனரல்: கியூ டோங்யு
  • நிறுவப்பட்டது: 16 அக்டோபர் 1945
தேசிய நிகழ்வுகள்

நாடாளுமன்ற மழைக்கால  கூட்டத்தொடர்

  • நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் ஜூலை 19 தொடங்கி ஆகஸ்ட் 13 ம் தேதி முடிவடைகிறது. பல்வேறு பிரசனைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளனர்
  • இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளியில் முதல் நாளிலேயே இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

ராணுவ நிலக்கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  • ராணுவத்துக்கும் சொந்தமான நிலங்கள் தொடர்பான கொள்கையின் 250 ஆண்டுகளுக்கு பிறகு புதிய கொள்கையை மத்திய அரசு தற்போது உருவாக்கியுள்ளது.
  • தற்போதைய சட்டங்களின் படி ராணுவத்தின் நிலத்தை அரசு பணிகளுக்காக பரிமாற்றி கொள்ளலாம். அதற்க்கு பதிலாக அந்த நிலத்தின் மதிப்புக்கு நிகரான நிலத்தை வேறொரு இடத்தில் ராணுவத்துக்கு அளிக்க வேண்டும்.
  • பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் 1765 ல் மேற்கு வங்காளத்தின் பராக்பூரில் நாட்டின் முதல் “கண்டோன்மெண்ட்” எனப்படும் ராணுவமுகாம் அமைக்கப்பட்டது.

‘ஒரு மாவட்டம் , ஒரு  தயாரிப்பு ‘  என்ற திட்டத்தை ஹரியானா அரசு செயல்படுத்தப்படவுள்ளது.

  • கிராமப்புறங்களில் உள்ள சிறு குறு நடுத்தர கைத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
  • மாநிலத்தின் ஒவ்வொரு தொகுதியையும் சில தொழில்துறை பார்வையுடன் இணைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் அரசாங்கம் விரைவாக செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
  • சிறு குறு நடுத்தர அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் ஹரியானாவின் ‘ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு’ திட்டம் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Try Today Current Affairs Quiz

ஹரியானா

  • தலைநகரம்: சண்டிகர்
  • கவர்னர்: பண்டாரு தத்தாத்ரயா
  • முதல்வர்: மனோகர் லால் கட்டர்

இந்தியாவின் முதல் துறவி பழ சாகுபடி பயிற்சி  ஹிமாச்சலப்பிரதேசத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

  • இந்தியாவின் முதல் துறவி பழ சாகுபடி பயிற்சி இமாச்சல பிரதேசத்தின் குலுவில் தொடங்கப்பட்டுள்ளது.
  • கலோரி இல்லாத இயற்கை இனிப்பானது என அறியப்படும் சீனாவிலிருந்து வந்த ‘துறவி பழம்’, இமாச்சலப் பிரதேசத்தில் கள சோதனைகளுக்காக பாலம்பூரைச் சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை தொழில்நுட்ப கவுன்சில், இமயமலை உயிர் வள தொழில்நுட்ப நிறுவனம் (CSIR-IHBT) அறிமுகப்படுத்தியது.
  • CSIR-Institute of Himalayan Bioresource Technology (CSIR-IHBT), Palampur. Institute of Himalayan Bioresource Technology (CSIR-IHBT)
  • CSIR – Council of Scientific and Industrial Research (CSIR)

இமாச்சல பிரதேசம்

  • தலைநகரம் : சிம்லா (கோடை), தர்மஷாலா (குளிர்காலம்)
  • முதல்வர்: ஜெய் ராம் தாக்கூர்
  • ஆளுநர்: ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

மன் கி பாத் – மனதின் குரல்

  • 2014 ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திரமோடி வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துவார்.
  • இந்த நிகழ்ச்சிக்கு மன் கி பாத்  அல்லது  மனதின் குரல் என்று பெயர்.இதுவரை 78  மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் உரை ஆற்றியுள்ளார்.
  • தற்போது இந்த நிகழ்ச்சியின் மூலம் அரசுக்கு 30.80 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
மாநில நிகழ்வுகள்

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை  சந்தித்து பேசினார்.

  • மே மாதம் டெல்லி சென்ற மு.க . ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழகம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் பற்றி பேசினார். இந்நிலையில் இரண்டாவது முறையாக டெல்லி சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை  சந்தித்து பேசினார்.
  • மனோகர் தேவதாஸ் எழுதிய ” மல்டிபிள் பேஸ்ட்ஸ் ஆப் மை மதுரை ” என்ற நூலை ஜனாதிபதிக்கு மு.க . ஸ்டாலின் வழங்கினார்.
  • பழம்பெரும் பாரம்பரியம் கொண்ட தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டை காண்கிறது. இந்த நூற்றாண்டு விழா கொண்டாட்டத்துக்கு தலைமை வகிக்க இந்தியா ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
  • 1920 களின் இறுதியில் நடந்த தேர்தலில் நீதிக்கட்சி வென்று அதன் தலைமையில் அமையப்பெற்ற இந்த சட்டப்பேரவை நூற்றாண்டை காண்கிறது.
  • இந்த கொண்டாட்டத்தின் போது, தலைவர் கருணாநிதியினுடைய உருவப்படத்தை சட்டமன்ற வளாகத்திற்குள் திறந்து வைக்க வேண்டும் என்றும், மதுரையில் தலைவர் கருணாநிதி பெயரால் அமைய இருக்கம் நூலக அடிக்கல் நாட்டு விழாவையும், சென்னை கிண்டியில் அமைய இருக்கம் அரசு பன்னோக்கு மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவையும், சுதந்திரம் பெற்று 75 ஆண்டை குறிக்கும் வகையில் சென்னை கடற்கரை சாலையில் அமைய இருக்கக்குடிய நினைவுத்தூண் அடிக்கல் நாட்டு விழாவையும, நடத்தி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

1000 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

  • டி .கல்லுப்பட்டி அருகே வேளாம்பூரில் 1000 ஆண்டுகள் பழமையான சிதைந்த நிலையில் 24வது தீர்த்தங்கரர் மஹாவீரர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
  • சமீபத்தில் கவசக்கோட்டை செங்கமேடு பகுதியில் கண்டறியப்பட்ட மகாவீரர் சிலையும் , இந்த சிலையும் ஒப்பிட்டின் படி 10ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
விண்வெளி

அமேசான் நிறுவனம் – ” புளு ஆர்ஜின் “

  • அமேசான் நிறுவனரான ஜெப் பெசாசின் விண்வெளி சுற்றுலா பயண திட்டத்திற்க்காக ” புளு ஆர்ஜின் ” என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

ஜெப் பெசாசின் மற்றும் 4 பேரும்  அவருடன் விண்வெளிக்கு பயணிக்க உள்ளனர்.

  • இந்த நிறுவனத்தை சேர்ந்த விண்வெளி பொறியாளர்கள் “நியூ செப்பர்டு” என்ற ராக்கெட்டை தயாரித்துள்ளனர். இந்த குழுவில் இந்தியாவை சேர்ந்த சஞ்சல் கவாண்டே என்ற மஹாராஷ்டிராவை சேர்ந்த பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • ஏற்கனவே லண்டனை சேர்ந்த ரிச்சர்ட் பிரான்சன் தன் “விர்ஜின் கேலடிக்” குழுவினருடன் விண்வெளி சுற்றுலா பயணத்தை சமீபத்தில் வெற்றிகரமாக முடித்துள்ளார்.
  • விண்வெளிக்கு செல்லும் 5வது இந்தியர் என்ற பெருமையை மஹாஸ்டிரா மாநிலத்தை சேர்ந்த பெண் சஞ்சால் கவாண்டே பெறவுள்ளார்.
  • இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு சென்ற ராகேஷ் சர்மா , கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் , சிரிஷா பண்ட்லா ஆகியோரது வரிசையில் தற்போது சஞ்சால் கவான்டேவும் இடம்பெற்றுள்ளார.
பொருளாதாரம்

ஃபெடரல் வங்கி வாடிக்கையாளர்களுக்காக ” FEDDY ” AI- இயங்கும் மெய்நிகர் உதவியாளரை அறிமுகப்படுத்தியுள்ளது.

  • வங்கி தொடர்பான தகவல்களை பெற வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்காக செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் மெய்நிகர் உதவியாளரான ” FEDDY ” ஐ பெடரல் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
  • “FEDDY” கூகிள் வணிக செய்திகளிலும், ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது இந்திய அடிப்படையிலான வங்கியின் முதல் சாதனையாகும்.

பெடரல் வங்கி

  • தலைமையகம்: அலுவா, கேரளா
  • MD& CEO: ஷியாம் சீனிவாசன்
விருதுகள்

இந்தியாவின் முன்னாள் கோல்கீப்பர் ஷிபாஜி பானர்ஜிக்கு மோஹுன் பாகன் ரத்னா விருது மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டுள்ளது.

  • முன்னாள் இந்திய கோல்கீப்பர் ஷிபாஜி பானர்ஜிக்கு மோஹுன் பாகன் ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.
  • மோஹுன் பாகன் செயற்குழு பின்வரும் விருதுகளை அறிவித்துள்ளது:
  • ஃபிஜிய கால்பந்து வீரர் ராய் கிருஷ்ணா 2020–21 ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக தேர்வு செய்யப்பட்டார்.
  • சிறந்த கிரிக்கெட் வீரராக வங்க கிரிக்கெட் அணியின் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு செய்யப்பட்டார்.
  • தேசிய சாம்பியன்ஷிப்பில் 100 மீ தடைகளையும் உயரம் தாண்டுதலையும் வென்ற பிடிஷா குண்டு சிறந்த தடகள வீரராக தேர்வு செய்யப்பட்டார்.

74 வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பாம் டி’ஓர் (Palme d’Or) என்ற விருதை  பிரான்சின் ஜூலியா டுகோர்னாவ் பெற்றுள்ளார்.

  • 37 வயதான பிரெஞ்சு இயக்குனர் ஜூலியா டுகோர்னாவ் 74 வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பாம் டி’ஓரை (Palme d’Or) வென்ற வரலாற்றில் இரண்டாவது பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
  • ஒரு தொடர் கொலைகாரனைப் பற்றிய கற்பனையான திரைப்படமான டைட்டேன் (Titane) படத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பயல் கபாடியா 74 வது கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த ஆவணப்படத்திற்கான ஓயில் டி விருதை வென்றுள்ளார்.

  • பிரான்சின் கேன்ஸில் என்ற இடத்தில்  74 வது கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்றது.
  • இதில் சிறந்த ஆவணப்படமாக பயல் கபாடியா இயக்கிய  ‘எ நைட் ஆஃப் நோட்டிங் நத்திங்’ (‘A Night of Knowing Nothing’)  என்ற படம் தேர்தெடுக்கப்பட்டுள்ளது.
  • சிறந்த ஆவணப்படத்திற்கான ஓயில் டி’ஓர் (Golden Eye)) என்ற விருதையும்  வென்றது.

பங்களாதேஷ் நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுஸ்க்கு  ஒலிம்பிக் லாரல் விருது வழங்கப்படுகிறது.

  • முதல் ஒலிம்பிக் லாரல் கென்ய தடகள வீரர் கிப் கெய்னோவுக்கு ஆகஸ்ட் 5, 2016 அன்று ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவின் போது வழங்கப்பட்டது.
  • ஒலிம்பிக் லாரல் என்பது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) வழங்கிய புதிய விருது ஆகும், இது “விளையாட்டு, கல்வி, கலாச்சாரம், வளர்ச்சி மற்றும் அமைதி ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்தவர்களை கெளரவிப்பதற்காக” வழங்கப்படுகிறது.
  • இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வென்ற முஹம்மது யூனுஸ் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஒலிம்பிக்லாரல் விருது வழங்கப்படுகிறது. வளர்ச்சிக்காக விளையாட்டில் அவர் செய்த விரிவான பணிக்காக அவரை கெளரவிப்பதற்காக வழங்கப்படுகிறது.
புத்தகம்

‘The India Story: An Epic Journey of Democracy and Development’ என்ற புதிய புத்தகத்தை பிமல் ஜலான் எழுதியுள்ளார்.

  • இந்தியாவின் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் பிமல் ஜலானின் புதிய புத்தகம் ‘The India Story: An Epic Journey of Democracy and Development’ வெளியிடப்பட்டது.
  • இந்த புத்தகத்தை ரூபா பப்ளிகேஷன்ஸ் இந்தியா வெளியிட்டது.

” மல்டிபிள் பேஸ்ட்ஸ்  ஆப் மை மதுரை (“Multiple Pests of My Madurai”)என்ற புத்தகம் மனோகர் தேவதாஸ் எழுதியுள்ளார்.

  • மனோகர் தேவதாஸ் எழுதிய ” மல்டிபிள் பேஸ்ட்ஸ் ஆப் மை மதுரை ” என்ற நூலை ஜனாதிபதிக்கு மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
விளையாட்டு

ஒலிம்பிக் ஒரு பார்வை

1952 – ஹெல்சிங்கி ஒலிம்பிக்ஸ்

  • முதல் முறையாக இஸ்ரேல் அணிகள் ஒலிம்பிக்கில் பங்கேற்றனர்.

1956 – மெல்போர்ன் ஒலிம்பிக்ஸ்

  • உலக ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் அணிவகுப்பு நடைபெற்றது.
  • நிறைவு விழாவில் ஆங்கில அகரவரிசையின்படி அணிகள் வராமல் , வீரர்கள் அனைவரும் உலக ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் ஒன்றாக கலந்து வந்தனர்.

1960 – ரோம் ஒலிம்பிக்ஸ்

  • 1908 க்கு பிறகு கிட்டத்தட்ட 54 ஆண்டுகள் கழித்து 1960ல் மீண்டும் ரோம் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது.
  • இந்த போட்டிகளை 18 ஐரோப்பிய நாடுகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
முக்கிய தினங்கள்

தேசிய நிலவு தினம் – ஜூலை 20

  • ஜூலை 20 அன்று தேசிய நிலவு தினத்தில் “மனிதனுக்கு ஒரு சிறிய படி, மனிதகுலத்திற்கு ஒரு மாபெரும் பாய்ச்சல்” என்பதன் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது.
  • முதன் முதலில் நீல் ஆம்ஸ்ட்ராங் ஜூலை 20, 1969 அன்று நிலவில் கல்பத்தித்தார். அதை நினைவுகூரும் வகையில் தேசிய சந்திரன் தினம் ஜூலை 20, அன்று வரலாற்று சந்திர தரையிறக்கத்தை கொண்டாடுகிறது

Try Today Current Affairs Quiz

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!