Daily Current Affairs February 4, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

0

Daily Current Affairs February 4, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

Top Current Affairs February 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – 04 பிப்ரவரி 2021

முக்கிய நாட்கள்

கர்நாடக சங்கீத இசைமேதை பண்டிட் பீம்சன் ஜோஷி பிறந்த ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது!!

  • பிரபல இசைமேதையான பீம்சன் ஜோஷி பிப்ரவரி 4 ஆம் தேதி 1922 ஆம் ஆண்டு பிறந்தார்.
  • கர்நாடக சங்கீதத்தை சாமானிய மனிதர்களுக்கும் புரியும் வகையில் இசை அமைத்ததால் இவர் அனைத்து தரப்பு மக்களிடையே பிரபலமாக கருதப்படுகிறார்.
  • தனது முதல் இசை கச்சேரியினை 1941 ஆம் ஆண்டு தனது 19 வது வயதில் செய்துள்ளார்.
  • இவரது பிறந்த தினத்திற்கான கொண்டாட்டம் மும்பையில் துவங்கியுள்ளது. இரண்டு நாட்கள் இவரது பிறந்த நாள் கொண்டாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று உலக புற்றுநோய் தினம்!!

  • ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4 ஆம் தேதி உலக புற்றுநோய் தினமாக கொண்டாடப்படுகிறது.
  • சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம் (Union of International Cancer Control) இந்த தினத்தை அனுசரிக்க வழிவகை செய்துள்ளது.
  • இந்த நாளில் உலக மக்கள் அனைவரும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வினை பெற வேண்டும் என்பதே நோக்கமாகும்.
  • இந்த நாளினை அனுசரிக்க கடந்த 2000 ஆம் ஆண்டு நடந்த புற்றுநோய்க்கு எதிரான முதல் உலக மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.
  • இந்த ஆண்டிற்கான கருப்பொருள் “‘I Am and I Will” என்பதே ஆகும்.

தேசிய நிகழ்வுகள்

ஜம்மு & காஷ்மீரின் வருடாந்த பாதுகாப்பு செலவு தொடர்பான அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது!!

  • யூனியன் பிரதேஷமான ஜம்மு & காஷ்மீரின் வருடாந்த பாதுகாப்பு செலவு (Security-Related Expenditure) தொடர்பான அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
  • இந்த ஆண்டு எஸ்ஆர்இ 1,267 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த தொகை 2019 – 2020 ஆண்டிற்கான வருடாந்திர கணக்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ஏற்கனவே, மத்திய உள்துறை அமைச்சகம் ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்தை நவீனமயமாக்க 40.20 கோடி ரூபாய் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய உள்துறை அமைச்சகம் பற்றி

மத்திய அமைச்சர்: அமித் ஷா

மாநில அமைச்சர் (உள்துறை) – ஸ்ரீ ஜி. கிஷன் ரெட்டி

இந்திய ரயில்வே முக்கிய திட்டங்களை வரும் 2021-22 நிதியாண்டிற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது!!

  • பிப்ரவரி-மார்ச் மற்றும் 2021-22 நிதியாண்டில் முடிக்கப்படவுள்ள பல்வேறு திட்டங்களில் முக்கியமாக உள்ள 56 திட்டங்களை முடிக்க இந்திய ரயில்வே தீவிரமாக உள்ளது.
  • இந்த திட்டங்கள் ரயில் உள்கட்டமைப்பை உயர்த்துவதோடு, இந்திய ரயில்வே சேவைகளை எதிர்காலத்திற்கு தகுந்தாற் போல் மாற்ற உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த பெரிய திட்டங்களைத் தவிர பொதுமக்களின் வசதிக்காக, இந்த ஆண்டு 1200க்கும் மேற்பட்ட ரோட் ஓவர் பிரிட்ஜ் (ROB), ரோட் அண்டர் பிரிட்ஜஸ் (RUB) மற்றும் சுரங்கபாதைகளை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • தற்போது வரை இந்தியாவில் 14000 ROB / RUB ஆகியவை உள்ளன.

உத்தரபிரதேச மாநிலத்தில் சவுரி சவுராவின் நூற்றாண்டு விழாவினை பிரதமர் திறந்து வைத்தார்!!

  • பிரதமர் நரேந்திர மோடி சவுரி சவுராவின் நூற்றாண்டு விழாவினை வீடியோ கான்பரன்சிங் முலமாக திறந்து வைத்தார்.
  • சவுரி சவுரா என்ற சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்து 100 ஆண்டுகளை கொண்டாடும் வகையில் இந்த விழா கொண்டப்படுகிறது.
  • இந்த சம்பவம் கடந்த 1922 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றதால் 22 போலீசார் உட்பட 25 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
  • உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 75 மாவட்டங்களும் இந்த நூற்றாண்டு விழாவினை பிப்ரவரி 2022 ஆம் ஆண்டு கொண்டாடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோபார்டன் நடவடிக்கைகளை கண்காணிக்க வலைத்தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது!!

  • கோபார்டன் (GOBARDHAN) திட்டம் என்பது கிராமங்களின் சாணம் மற்றும் பிற கரிம கழிவுகளை நிர்வகிக்க கிராமங்களை திறம்பட ஆதரிப்பதை தனது பிரதான நோக்கமாக கொண்டுள்ளது.
  • இந்த திட்டத்தின் நடவடிக்கைகளை கவனிக்க விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், கால்நடை பராமரிப்பு அமைச்சர் கிரிராஜ் சிங், ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷேகாவத் மற்றும் ஜல் சக்தி அதிகாரி ரத்தன் லால் கட்டாரியா ஆகியோர் இணைத்து ஒரு வலைத்தளத்தினை உருவாக்கியுள்ளனர்.
  • ஸ்வச் பாரத் மிஷன் உருவாகியுள்ள முக்கியமான திட்டம் தான், கோபார்டன். இந்த திட்டம் மூலமாக விவசாயிகள் பல நன்மைகளை அடைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 2021

சர்வதேச நிகழ்வுகள்

ரஷ்யாவுடனான அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை அமெரிக்கா இன்னும் 5 ஆண்டுகள் வரை நீடித்துள்ளது!!

  • ரஷ்யாவுடனான புதிய அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை அமெரிக்கா ஐந்து ஆண்டுகளாக நீட்டித்துள்ளது.
  • இதனால் தற்போது இந்த ஒப்பந்தம் 2026 பிப்ரவரி 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • 2011 ஆம் ஆண்டில் முதன்முதலில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
  • இதன் மூலமாக அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் போர் களத்தில் 1,550 அணு ஆயுதங்களை பயன்படுத்தாது என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

அமெரிக்கா பற்றி

தலைநகரம் – வாஷிங்டன், டி.சி.

ஜனாதிபதி- ஜோ பிடன்

நாணயம்- யுனைடெட் ஸ்டேட்ஸ் டாலர்

ரஷ்யா பற்றி

தலைநகரம் – மாஸ்கோ

ஜனாதிபதி- விளாடிமிர் புடின்

நாணயம்- ரஷ்ய ரூபிள்

மாநில நிகழ்வுகள்

மேற்கு வங்க மாநிலம் முதன் முறையாக  நீர் பறவைகளின் கணக்கெடுப்பை எடுத்துள்ளது!!

  • மேற்கு வங்காள மாநில வனத்துறை சுந்தர்பான்ஸ் பகுதிகள் உட்பட நீர் பறவைகளின் கணக்கெடுப்பை நடத்தியுள்ளது.
  • இதுவரை 65 இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக முதன்மை வனத்துறை பாதுகாவலர் வினய் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
  • இந்த ஆய்வு ஜனவரி 12 முதல் பிப்ரவரி 2 வரை மாநிலம் முழுவதும் 54 வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்டது.
  • முதல் முறையாக, சுந்தர்பான்ஸில் ஒரு கருப்பு கழுத்து கிரேப் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தைப் பற்றி

முதல்வர் – மம்தா பானர்ஜி

ஆளுநர்- ஜகதீப் தங்கர்

தலைநகரம் – கொல்கத்தா

முதன் முறையாக காகிதமில்லா பட்ஜெட்டினை தாக்கல் செய்ய உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது!!

  • மத்திய நிதியமைச்சரின் சமீபத்திய மின்-பட்ஜெட் போன்று தங்களது மாநிலத்திலும் காகிதமில்லா பட்ஜெட்டினை தாக்கல் செய்ய உத்தரபிரதேச அரசு முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றது.
  • இந்த மாதத்தின் மூன்றாவது வாரத்தில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மத்திய அமைச்சரவைக்கு பின்பு இது போன்ற நடவடிக்கையினை எடுக்கும் முதல் மாநிலம் உத்தரப்பிரதேசம் தான் என்று கூறப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசம் பற்றி

முதல்வர் – யோகி ஆதித்யநாத்

ஆளுநர்- ஆனந்திபென் படேல்

தலைநகரம் – லக்னோ

தமிழக செய்திகள்

ரூ .189 கோடி செலவில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது!!

  • 189 கோடி செலவில் என்னூர் தோட்டத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றது.
  • என்னூர் தோட்டத்தில் பொதுப்பணித் துறை சார்பில் பூங்கா அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
  • இந்த திட்டம் பசுமையை அதிகரிப்பது, அங்கு வாழும் விலங்குகளின் இனப்பெருக்கத்திற்கு உகந்த சூழலை உருவாக்குவது போன்ற பணிகளை மேற்கொள்வதை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

தமிழகம் பற்றி

தலைநகரம்: சென்னை

முதல்வர்: எடப்பாடி கே.பழனிசாமி

ஆளுநர்: பன்வாரிலால் புரோஹித்

நிதித்துறை நிகழ்வுகள்

நியமனங்கள்

இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பின் தலைவராக அஜய் சிங் நியமனம்!!

  • ஆஷிஷ் ஷெலரை தோற்கடித்து அஜய் சிங் இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பின் (பிஎஃப்ஐ) தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • அஜய் சிங் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனங்களின் தலைவராகவும் உள்ளார்.

BFI பற்றி

தலைமையகம்- புது தில்லி

தலைவர் – அஜய் சிங்

எல்ஐசி மேலாண்மை இயக்குனராக சித்தார்த்தா பொறுப்பேற்பு!!

  • எல்ஐசி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக சித்தார்த்தா மொஹத்தி பதவி ஏற்றார்.
  • இவரது நியமனத்தை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. இவர் கடந்த இரு நாட்களுக்கு முன்பு தனது புதிய பதவியினை ஏற்றுக்கொண்டார்.
  • கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாக மொஹத்தி எல்ஐசி நிறுவனத்தில் சேர்ந்தார்.
  • இவரது இந்த புதிய பதவிக்கு முன்பாக எல்ஐசி ஹவுசிங் பைனாஸ் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார்.

மூத்த ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் சின்ஹாவிற்கு  சிபிஐயின் கூடுதல் இயக்குனர் பதவி!!

  • மத்திய பணியாளர் துறை அமைச்சகம் மூத்த ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் சின்ஹாவிற்கு கூடுதல் இயக்குனர் பதவியை வழங்கியுள்ளது.
  • கடந்த 1988 ஆம் ஆண்டு இவர் ஐபிஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
  • தற்போது அவருக்கு சிபிஐயின் கூடுதல் இயக்குனர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
  • இவருக்கு முன்பாக இந்த பதவியில் 2 ஆண்டு காலமாக ரிஷிகுமார் சுக்லா என்பவர் பதவி வகித்து வந்தார்.

Download Tamil Current Affairs 2021 Pdf

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!