இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 1020 பெண்கள் – Daily Current Affairs 26 November 2021 in Tamil

0
இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 1020 பெண்கள் - Daily Current Affairs 26 November 2021 in Tamil
இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 1020 பெண்கள் - Daily Current Affairs 26 November 2021 in Tamil
இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 1020 பெண்கள் – Daily Current Affairs 26 November 2021 in Tamil
ஐ.என்.எஸ் வேலா கடற்படையில் சேர்ப்பு:
 • ஐ.என்.எஸ் வேலா என்பது பி.75 என்ற திட்டத்தின் கீழ் பிரான்ஸ் நாடுதான் இணைந்து உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நான்காவது ஸ்கார்பியன் வகை நீர்முழ்கிக்கப்பல் ஆகும்.
 • இந்த கப்பல் நேற்று இந்தியா கப்பற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

திறன்கள்:

 • கடலுக்கு அடியில் படைகொள்ளும் சக்தி.
 • ஒலியின் மூலம் பொருள்களின் தொலைவை கண்டறியும் சென்சார்களும் பொருத்தப்பட்டுள்ளது.

இன்டர்போல் உயர்பதவியில் இந்தியாவின் சிபிஐ இயக்குநர்:
 • இன்டர்போல் என்பது 190 நாடுகளின் காவல் துறைகளை ஒருங்கிணைக்கும் சர்வதேச காவல் துறை அமைப்பாகும்.
 • இந்த அமைப்பின் ஆசிய நாடுகளின் பிரதிநிதியாக இந்தியாவை சேர்ந்த சிபிஐ இயக்குநர் பிரவீண் சின்ஹா தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
 • மேலும் இன்டர்போலின் தலைவராக ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த நாசர் அல் ரயீஸி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 1020 பெண்கள் உள்ளனர்:
 • தேசிய குடும்ப சுகாதார ஆய்வு தெரிவித்துள்ள அறிக்கையில் தற்போது உள்ள 1000 ஆண்களுக்கு 1020 பெண்கள் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
 • பெரும்பாலான மாநிலங்களின் ஆண்களை விட பெண்கள் அதிகம் உள்ளனர்.
 • கடந்த 2015-2016ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி 1000 ஆண்களுக்கு 991 பெண்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆசியாவின் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையம் இந்தியா-வில் அமைய உள்ளது.
 • உத்திரபிரதேசத்தில் உள்ள நொய்டாவில் சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று நடைபெற்றது.
 • இந்த விமான நிலையம் சர்வேதேச அளவில் நான்காவது மிகப்பெரிய விமான நிலையமாகவும், ஆசிய அளவில் முதலிடத்திலும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 • விமான நிலையம் அமைக்க ஆகும் செலவு- 10,050 கோடி ருபாய்.
 • பரப்பளவு- 1330 ஏக்கர்.

இன்று நடக்கிறது ஆர்.ஐ.சி மாநாடு:
 • ரஷ்ய-இந்திய-சீன நாடுகளை குறிக்கும் 18-ஆவது முத்தரப்பு ஆர்.ஐ.சி மாநாடு காணொலி வாயிலாக இன்று நடைபெறுகிறது.
 • நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு திட்டங்கள் பற்றி இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.
 • இந்த மாநாடு கடந்த ஆண்டு செப்டம்பரில் ரஷ்சியாவின் மாஸ்க்கோ நகரில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

100% முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டம் காஞ்சிபுரம்:
 • இதுவரை தமிழகத்தில் 76%-க்கும் மேற்பட்டோர் முதல் தவணை தடுப்பூசியும், 40% பேருக்கு இரண்டாம் தவணையும் செலுத்தப்பட்டுள்ளது.
 • இதில் 100% முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாவட்டமாக காஞ்சிபுரம் உள்ளது.

மற்ற மாவட்டங்கள்:

 • இரண்டாம் இடம்- கோவை
 • மூன்றாம் இடம்- அரியலூர்

நீலகிரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக எஸ்.பி.அம்ரித் நியமனம்:
 • நீலகிரி மாவட்டத்தின் தற்போதைய ஆட்சியாளராக அம்மாவட்டத்தின் நகராட்சி நிர்வாகத்துறை இணையமைச்சராக இருந்த எஸ்.பி.அம்ரித் நியமிக்கப்பட்டுள்ளார்.
 • இதற்கு முன்பு நீலகிரி மாவட்டத்தின் ஆட்சியராக இன்னசென்ட் திவ்யா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யுனெஸ்கோ வின் உறுப்பினரானது இந்தியா:
 • யுனெஸ்கோ உலக பாரம்பரிய குழுவின் உறுப்பினராக 4 ஆண்டுகளுக்கு ஆசிய-பசுபிக் பிராந்தியத்திலிருந்து இந்தியா கடந்த 17ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
 • 2025 ஆம் ஆண்டு வரை யுனெஸ்கோ-வின் உறுப்பினராக இந்தியா தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!