Daily Current Affairs 23 November 2021 in Tamil

0
Daily Current Affairs 23 November 2021 in Tamil
Daily Current Affairs 23 November 2021 in Tamil

Daily Current Affairs 23 November 2021 in Tamil

சென்னை உயர்நீதிமன்றம் பொறுப்பு தலைமை நீதிபதி பதவியேற்பு

  • சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக முனிஸ்வர்நாத் பண்டாரி அவர்கள் பதவியேற்றுள்ளார்.
  • இதற்கு முன் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீப் பானர்ஜி மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இவருக்கான பதவி பிரமாணத்தை செய்து வைத்தார்.

     முனிஸ்வர்நாத் பண்டாரி விவரம்:

  • பிறந்த தேதி- செப்டம்பர் 19, 1960.
  • பிறந்த மாநிலம்-ராஜஸ்தான்
  • 2007- ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் பொறுப்பு தலைமை நீதிபதி
  • 2019- அலகாபாத் உயர்நீதிமன்றம் பொறுப்பு தலைமை நீதிபதி

உள்நாட்டிலேயே போர் விமானம் தயாரிக்கும் திட்டம்

  • 5 ஆம் தலைமுறை போர் விமானங்களை இந்தியாவிலேயே தயாரிக்கும் திட்டத்தை மத்திய அரசு அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படவுள்ளது.
  • இத்தகைய விமானங்கள் அதிநவீன போர் திறன் கொண்டதாகவும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் கொண்டதாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இதுவரை விமானப்படையில் ரஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ரஃபேல் ரக விமானங்களும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் தேஜாஸ் போர் விமானங்களும் பயன்படுத்தபடுகிறது.

 பிற நாடுகளின் 5 ஆம் தலைமுறை போர் விமானங்கள்:

  • அமெரிக்கா- எப்/ஏ-22 ரேப்பிடர் மற்றும் எப்-35
  • சீனா- செங்க்டு ஜே -20
  • ரஷ்யா- சுகோய் 57

அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது

  • இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்த வர்தமானுக்கு வீர் சக்ரா விருது வழங்கி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பித்துள்ளார்.
  • 2019 ஆம் நடந்த புல்வாமா தாக்குதலில் அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்யபட்டது குறிப்பிடத்தக்கது.

அபிநந்தனின் பதவி:

  • ராணுவ கமெண்டேர் பதவியில் இருந்து குரூப் கேப்டன் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.

சையது முஷ்டாக் கோப்பையை வென்றது தமிழ்நாடு அணி

  • நேற்று நடைபெற்ற சையது முஷ்டாக் அலி டி-20 இறுதி போட்டியில் கர்நாடக அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது.
  • இந்த வெற்றியின் மூலம் சையது முஷ்டாக் தொடரில் தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது தமிழ்நாடு.
  • இதற்கு முன்பு 2006 மட்டும் 2020 களில் கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர் அனிதா தேசாய் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

  • இந்தியாவின் பிரபல எழுத்தரான அனிதா தேசாய் அவர்களின் 50 ஆண்டுகால இலக்கியசேவையை பாராட்டி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
  • இவர் அவரின் சிறுவயது முதலே பல்வேறு நாவல்களை எழுதியுள்ளார்

 விருதுகள்:

  • 1990 இல் பத்மஸ்ரீ
  • 2014 இல் பத்ம பூசன் விருது

தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2021

  • நவம்பர் 2021, ஆம் ஆண்டிற்கான முதலீட்டாளர்கள் மாநாடு கோவை இல் நடைபெற உள்ளது.
  • மேலும் இந்த திட்டத்தில் 52 நிறுவனங்கள் உடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பல்வேறு நிதி நுட்பக்கொள்கைகளும் நிறைவேற்றப்பட உள்ளது.
  • இந்த மாநாட்டின் மூலம் அகப்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்புகள்:

  • புரிந்துணர்வு ஒப்பந்தம்- 74,835 வேலைவாய்ப்பு
  • அடிக்கல் நாட்டப்படும் திட்டங்கள்- 11,681 வேலைவாய்ப்பு
  • வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறை ஒப்பந்தங்கள்-1,960 வேலைவாய்ப்பு

3 தலைநகரங்கள்  சட்டத்தை ரத்து செய்ய ஆந்திரா ஒப்புதல் வழங்கியுள்ளது

  • 2019 இல் நடைபெற்ற ஆந்திராவின் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
  • அப்போது அவர் அறிமுகபடுத்திய 3 தலைநகரங்கள் திட்டத்திற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின.
  • இந்த திட்டத்தின் படி ஆந்திராவின் விசாகப்பட்டினம், அமராவதி மற்றும் கர்னூல் தலைநகரங்களாக மாற்றி அமைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
  • இந்த நிலையில் இத்திட்டத்தினை ரத்து செய்ய என்ற அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

உலக டேபிள் டென்னிஸ் போட்டிகள் இன்று தொடங்குகிறது

  • அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் உலக டேபிள் டென்னிஸ் போட்டிக்கான சாம்பியன்ஷிப் போட்டிகள் இன்று முதல் நடைபெறவுள்ளது.
  • இன்று தொடங்கி நவம்பர் 29 ஆம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா சார்பில் 9 பேர் பங்கேற்க உள்ளன.

இந்திய வீரர்கள்:

  • ஆடவர் பிரிவு- 4 வீரர்கள்
  • மகளீர் பிரிவு- 5 வீராங்கனைகள்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!