மாநில அரசு ஊழியர்களுக்கான சூப்பர் ஜாக்பாட் – 4% அகவிலைப்படி உயர்வு!! 

0
மாநில அரசு ஊழியர்களுக்கான சூப்பர் ஜாக்பாட் - 4% அகவிலைப்படி உயர்வு!! 
உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலுவையில் வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி உயர்வு தற்போது வழங்கப்பட்டுள்ளது.
 அகவிலைப்படி உயர்வு:

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அனைத்து அரசு ஊழியர்களும் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வினை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், உத்தரகாண்ட் மாநில அரசு பொது நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவனங்களின் நிர்வாகத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது.

அதாவது, ஏழாவது திருத்தப்பட்ட ஊதிய விகிதத்தை பெறும் ஊழியர்களுக்கான அகவிலைப்படி 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ஐந்தாவது ஊதிய விகிதங்களை பெறும் ஊழியர்களின் அகவிலைப்படி 212 சதவீதத்தில் இருந்து 221 சதவீதமாகவும், ஆறாவது ஊதிய விகிதங்களை பெறும் ஊழியர்களின் அகவிலைப்படி 396 சதவீதத்தில் இருந்து 412 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!