மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 26ம் தேதிக்கு முன் DA நிலுவைத் தொகை? முக்கிய தகவல் இதோ!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 26ம் தேதிக்கு முன் DA நிலுவைத் தொகை? முக்கிய தகவல் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 26ம் தேதிக்கு முன் DA நிலுவைத் தொகை? முக்கிய தகவல் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 26ம் தேதிக்கு முன் DA நிலுவைத் தொகை? முக்கிய தகவல் இதோ!

மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் ஜனவரி 26ம் தேதிக்கு முன்னதாக அகவிலைப்படி (DA) நிலுவைத் தொகை கொடுக்கப்படும் என்று புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

DA நிலுவைத் தொகை

நீண்ட நாட்களாக மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு நல்ல செய்தி குடியரசு தினத்திற்கு முன் கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு, கடந்த 18 மாதங்களாக நிறுத்தி வைத்திருந்த அகவிலைப்படி (DA) நிலுவைத் தொகையை கடந்த 2021ம் ஆண்டு இறுதியில் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த செயல்முறைகள் அனைத்தும் மீண்டும் தாமதமாகி இருக்கும் நிலையில் DA நிலுவைத்தொகை இந்த மாதம் 26ம் தேதிக்கு முன்னதாக கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

இந்தியாவில் மீண்டும் அமலுக்கு வரும் முழு ஊரடங்கு? பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை!

இது தவிர இந்த ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி தொகை மேலும் அதிகரித்தால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் கணிசமான உயர்வை காணும். இது தொடர்பான சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 18 மாதங்களாக நிலுவையில் உள்ள மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA ) தொகையை 2022 ஜனவரியில் விடுவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு ரூ.2 லட்சம் வரை DA தொகை கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. இப்போது அகவிலைப்படியில் 3% அதிகரிப்பு ஏற்பட்டால் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒட்டுமொத்த DA தொகை 34% ஆக இருக்கும்.

தமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? முதல்வர் நாளை ஆலோசனை!

அதாவது மாதம் ரூ.18,000 சம்பாதிக்கும் மத்திய அரசு ஊழியர் ஆண்டுக்கு ரூ.73,440 அகவிலைப்படியை பெறுவார்கள். இந்த தொகையை வழங்குவது தொடர்பாக மத்திய அமைச்சரவை அடுத்த கூட்டத்தில் முடிவு எடுக்க உள்ளதாக பல்வேறு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. அந்த வகையில் இது குறித்த மதிப்பீடுகளின்படி, லெவல்-1 ஊழியர்களுக்கான DA நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை இருக்கலாம் என்றும் அதே சமயம் லெவல்-13 ஊழியர்களுக்கு ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 வரை DA தொகை இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!