CWC மணிமேகலை வீட்டில் நடந்த விசேஷம் – வைரலாகும் பதிவு! ரசிகர்கள் வாழ்த்து!

0
CWC மணிமேகலை வீட்டில் நடந்த விசேஷம் - வைரலாகும் பதிவு! ரசிகர்கள் வாழ்த்து!
CWC மணிமேகலை வீட்டில் நடந்த விசேஷம் - வைரலாகும் பதிவு! ரசிகர்கள் வாழ்த்து!
CWC மணிமேகலை வீட்டில் நடந்த விசேஷம் – வைரலாகும் பதிவு! ரசிகர்கள் வாழ்த்து!

தங்களுக்கென்று ஒரு வீடு கட்ட வேண்டும் என்பது மணிமேகலை மற்றும் ஹுசைனின் மிகப் பெரிய ஆசையாக இருந்து வந்தது. தற்போது இவர்கள் வாங்கிய நிலத்தில் முதல் முறையாக போர் போடும் படியான வீடியோ ஒன்றை யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

CWC மணிமேகலை:

விஜய் டிவியில் பலர் காதல் ஜோடிகளை பார்த்திருக்கலாம். ஆனால் மணிமேகலை மற்றும் ஹுசைனின் காதல் ஜோடி அளவிற்கு கலகலப்பான ஒரு காதல் ஜோடியை பார்க்கவே முடியாது. சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஃப்ரியா விடு என்கிற நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகமானவர்தான் மணிமேகலை. இந்த நிகழ்ச்சியின் மூலமாகவே லட்சக்கணக்கான ரசிகர்களின் ஆதரவை பெற்றார். இதற்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானார்.

Exams Daily Mobile App Download

விஜய் தொலைக்காட்சிக்கு மணிமேகலை வந்த பிறகு கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. தற்போது விஜய் தொலைக்காட்சியில் தனக்கென்று ஒரு சிறந்த அங்கீகாரத்தை மணிமேகலை பிடித்துள்ளார். அதிலும் மணிமேகலை தற்போது கலந்து கொண்டு வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக கூடுதலாக ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளார். அவ்வப்போது தனது கணவருடன் சண்டையிட்டுக் கொண்டும், பழி வாங்கிக்கொண்டும், வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வது, கடைத்தெருக்களில் சுற்றியது என அனைத்து புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

வருங்கால மனைவியுடன் பொது இடத்தில் CWC பிரபலம் புகழ் – வைரலாகும் வீடியோ!

மணிமேகலை மற்றும் ஹுசைன் இருவருமே மிகவும் கஷ்டப்பட்டு காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். மணிமேகலை மற்றும் ஹுசைன் இருவரும் வாங்கிய கார், வீடு, பைக் என அனைத்தும் இவர்களின் ஒவ்வொரு உழைப்பிலிருந்து தான் வாங்கி கொண்டிருக்கின்றனர். ஹுசைன் மணிமேகலையின் பிறந்தநாளுக்காக ஒரு நிலத்தை அவருக்கு பரிசாக வழங்கினார். அந்த இடத்தில் இருவரும் தனது கனவு இல்லத்தை கட்ட இருக்கின்றனர். முதன்முறையாக அந்த நிலத்தில் தற்போது போர் போடும் படியான வீடியோ ஒன்றை மணிமேகலை ரசிகர்களின் மத்தியில் பகிர்ந்துள்ளார். இதேபோல வாழ்வின் அடுத்தடுத்த நிலைகளுக்கு இருவரும் செல்ல வேண்டும் என ரசிகர்கள் மணிமேகலை மற்றும் ஹுசைனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!