ஜனவரி 18 நடப்பு நிகழ்வுகள்

0

தமிழகம்

1.எம்எஸ்எம்இ அமைச்சகத்தின் சார்பில் ஆன்லைன் மூலம் வர்த்தகம் புதிய சேவை தொடக்கம்: புதிய தலைமுறையினருக்கு தொழில் வாய்ப்பு

  • தேசிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அமைச்சகத்தின் சார்பில், ஆன்லைன் மூலம் வர்த்தக வாய்ப்புகளை தேடுவதற்கான புதிய சேவை தொடங்கப்பட்டுள்ளது.
  • சர்வதேச அளவில் நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன.இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியிலும் அவை சிறந்த பங்களிப்பை அளித்து வருகின்றன.அத்துடன், இத்துறை மூலம் லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.இந்த குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை ஊக்கப்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

2.  இந்து ஆன்மிக கண்காட்சியை முன்னிட்டு 10 ஆயிரம்  மாணவர்கள் பங்கேற்ற ‘ஸ்ரீகிருஷ்ணா யோகத்தான்’:  அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது

  • இந்து ஆன்மிக கண்காட்சி நடைபெற உள்ளதை முன்னிட்டு சுமார் 10 ஆயிரம் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற ‘ஸ்ரீகிருஷ்ணா யோகத்தான்’ நிகழ்ச்சி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
  • இந்து ஆன்மிக, சேவை மையம் மற்றும் கலாச்சார பயிற்சி முனைவு அறக்கட்டளை ஆகியவை இணைந்து இந்து ஆன்மிக, சேவை கண்காட்சியை நடத்தி வருகின்றன.அந்த வகையில் 9-வது கண்காட்சி சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் வரும் ஜனவரி 24-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

3. பள்ளிக்கல்வி இயக்குநர் கார்மேகம் ஐஏஎஸ்     அதிகாரியாக பதவி உயர்வு

  •  தமிழக பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் எஸ்.கார்மேகம் உட்பட 4 உயர் அதிகாரிகள் ஐஏஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
  • ஐஏஎஸ் அதிகாரிகள் யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நேரடியாக தேர்வு செய்யப்படுகின்றனர். மேலும், குரூப்-1 தேர்வு மூலம் நேரடியாக துணை ஆட்சியர் பணியில் சேருவோர், மாவட்ட வருவாய் அதிகாரி ஆகி அதன்பிறகு குறிப்பிட்ட ஆண்டுகளில் ஐஏஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு பெறுகின்றனர்.

4. இலங்கை, தென்னாப்பிரிக்கா காசுகள்: சேதுக்கரையில் கண்டெடுத்த அரசு பள்ளி மாணவர்கள்

  • ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இலங்கை, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் புழக்கத்தில் இருந்த காசுகளை ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அரசு பள்ளி மாணவர்கள் கண்டெடுத்துள்ளனர்.
  • திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்கள், தங்கள் பகுதிகளில் உள்ள பழங்காலப் பொருள்கள், காசுகள், வரலாற்றுச் சுவடுகள் ஆகியவற்றை விடுமுறை நாள்களிலும், ஓய்வு நேரங்களிலும் ஆர்வத்தோடு தேடி கண்டுபிடித்து ஆவணப்படுத்தி வருகின்றனர்.

5. தேசிய கபடி போட்டியில் பங்கேற்ற மயிலாடுதுறை அரசுப் பள்ளிமாணவருக்கு சார் ஆட்சியர் பாராட்டு

  • தேசிய அளவிலான கபடி போட்டியில் கலந்துகொண்டு விளையாடிய மயிலாடுதுறை மாணவரை சார் ஆட்சியர் நேற்று பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

இந்தியா

1.  ஹஜ் மானியம் ரத்து பெரிய விஷயமல்ல: முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் கருத்து

  • முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை செல்வதற்கு அளிக்கப்பட்டு வந்த மானியத்தை மத்திய அரசு ரத்து செய்திருப்பது பெரிய விஷயமல்ல என அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் கூறியுள்ளது.
  • ஹஜ் செல்வதற்காக மத்திய அரசு அளித்துவந்த மானியம் ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கே அதிகப் பலன் தந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.ஏனெனில், சாதாரண நாட்களில் ரூ.32 ஆயிரம் வரை இருக்கும் விமானக் கட்டணம் ஹஜ் யாத்திரையின்போது ரூ.1 லட்சம் வரை உயர்ந்து விடுகிறது.எனவே ஒரு கண்துடைப்பாக அளிக்கப்பட்ட மானியத்தால் இதுவரை தாங்கள் ஏமாற்றப்பட்டு வந்ததாக முஸ்லிம்கள் புகார் கூறியுள்ளனர்

2. ஆந்திராவிலேயே முதன்முறையாக திருப்பதியில் குப்பையை உரமாக மாற்றும் இயந்திரம் அறிமுகம்: 1000 கிலோவில் 300 கிலோ உரம் கிடைக்கும்

  • அனைத்து வகையான குப்பைகளையும் உரமாக மாற்றும் திறன் கொண்ட இயந்திரம் திருப்பதியில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த இயந்திரத்தின் மூலமாக நாளொன்றுக்கு 1,000 கிலோ எடைகொண்ட குப்பைகளை உரமாக மாற்ற முடியும்.
  • நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடமாக திருப்பதி விளங்குவதால் இங்கு அதிக அளவிலான குப்பைகள் சேர்கின்றன.இந்தக் குப்பைகளை உடனுக்குடன் அகற்றவும், சுகாதார சீர்கேடு ஏற்படாமல் தடுக்கவும் திருப்பதி மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

3. ஆன்லைனில் உங்கள் எல்ஐசி பாலிசி தகவலைப் பார்க்க வேண்டுமா?- அதற்கும் ஆதார் கட்டாயம்

  • அரசு நலத்திட்டங்களுக்கான சலுகைகளைப் பெறுவதற்கு ஆதாரை கட்டாயமாக்குவதை மார்ச் 31 2018 வரை தள்ளிவைத்திருந்தாலும், பல்வேறு காப்பீட்டு நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்கள் ஆதார் எண்ணை தெரிவிப்பதை கட்டாயமாக்கியுள்ளது.
  • இதில், எல்ஐசி காப்பீட்டு நிறுவனம் அதிக கெடுபிடி காட்டுவதாக அதன் வாடிக்கையாளர்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.எந்த அளவுக்கு கெடுபிடி என்றால், வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் தங்கள் பாலிசி பக்கத்தைப் பார்க்க வேண்டும் என்றால்கூட அதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

4. புல்லட் ரயில் திட்டத்தில் பயனடையப்போவது ஜப்பான் நிறுவனங்கள்: ‘மேக் இன் இந்தியா’வுக்கு பின்னடைவு?

  • இந்தியாவில் முதல் புல்லட் ரயில் விடும் திட்டத்தில் மத்திய அரசு தீவிரம் காண்பித்து வரும் நிலையில், அத்திட்டத்துக்காக 70% சப்ளைகளை மேற்கொள்ளவிருப்பது ஜப்பான் நிறுவனங்களே என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
  • 17 பில்லியன் டாலர்கள் இந்திய புல்லட் ரயில் திட்டத்தில் ஜப்பானிய ஸ்டீல் மற்றும் பொறியியல் நிறுவனங்கள் பெரிய அளவில் ஒப்பந்தங்களைப் பெறுவதாக இது தொடர்பான அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.
  • இந்த புல்லட் ரயில் திட்டத்துக்கு ஜப்பான் நிதியளிக்கிறது, ஜப்பானிய நிறுவனங்கள் 80% பாகங்களை வழங்கவுள்ளதாகத் தெரிகிறது.

உலகம்

1. ஆஸ்திரேலியாவில் மகாத்மா காந்தி பற்றிய டிஜிட்டல் கண்காட்சி

  • ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் மகாத்மா காந்தி பற்றிய டிஜிட்டல் கண்காட்சி வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது.
  • இதுதொடர்பாக விக்டோரியா மாகாண முதல்வர் டேனியல் ஆண்ட்ரூஸ் நேற்று கூறும்போது, “மகாத்மா காந்தியின் வாழ்க்கை மற்றும் அவரது சாதனைகள் குறித்த கண்காட்சி 4 மாதங்கள் (ஏப்ரல் முதல் ஜூலை வரை)நடைபெறவுள்ளது. இதில் காந்தியின் 1,000 புகைப்படங்கள், 130 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ, திரைப்படக் காட்சிகளில் இருந்து 60 நிமிட வீடியோ, காந்தி பேசிய 20 ஆடியோ டேப்புகள் இடம்பெறும்.

2. அமெரிக்க ஊடகங்களுக்கு விருது அறிவித்துள்ள ட்ரம்ப்: போலி செய்திக்கான விருதைப் பெற்ற நியூயார்க் டைம்ஸ்

  • போலி செய்திகளுக்கான விருதை ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகைக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
  • அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் போட்டியிட்ட நாள் முதலே அவர் தொடர்பான சர்ச்சை மிகுந்த கருத்துகள் அமெரிக்க ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன.
  • இதன் காரணமாக ஊடகங்களை ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து வந்தார்.அதிலும் குறிப்பாக சிஎன்என் செய்தி நிறுவனம், தி நியூயார்க் டைம்ஸ் ஆகியன பொய் செய்தியை வெளியிட்டு வருவதாக ட்ரம்ப் பகிரங்கமாக குற்றம் சுமத்திவந்தார்.

வணிகம்

1.ரூபாய் மதிப்பு உயர்வு

  • அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை (வியாழன்) 5 காசுகள் உயர்ந்து 63.83 ரூபாயாக ஆக இருந்தது.
  • அமெரிக்க டாலருக்கு எதிரான பல்வேறு நாடுகளின் கரன்சிகளும் உயர்வு கண்டதாலும், இந்திய பங்குச்சந்தைகள் நேற்று புதிய ஏற்றம் கண்டதாலும், இதன் எதிரொலியால், இந்திய ரூபாயின் மதிப்பும் இன்று உயர்வு கண்டது.
  • இன்றைய காலை நேர வர்த்தகத்தின்படி, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து 63.83 ரூபாயாக இருந்தது.

2. ஹெச்யுஎல் நிகர லாபம் 27% உயர்வு

  • எப்எம்சிஜி நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனிலீவர் (ஹெச்யுஎல்) நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 27 சதவீதம் உயர்ந்து ரூ.1,326 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் நிகர லாபம் ரூ.1,038 கோடி இருந்தது. இதே காலத்தில் நிகர விற்பனை 4 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.8,400 கோடியாக இருந்த நிகர லாபம் தற்போது ரூ.8,742 கோடியாக உயர்ந்திருக்கிறது.

3. முதல் முறையாக 35000 புள்ளியை கடந்தது சென்செக்ஸ்: நிப்டியும் 10800 புள்ளியை தொட்டது

  • மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல் முறை யாக 35000 புள்ளியைத் தொட்டது. மத்திய அரசு கூடுதலாக வாங்க இருந்த ரூ.50,000 கோடி கடன் அளவு குறைக்கப்பட்டது. ரூ.20,000 கோடி போதும் என பொருளாதார விவகாரங்களுக் கான செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் அறிவித்தார். இதனால் நிதிப்பற்றாக்குறை கட்டுக்குள் இருக்கும் என்னும் கணிப்பு காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் உயர்வில் முடிந்தன.

4.  அனைத்து 10 ரூபாய் நாணயமும் செல்லும்: ரிசர்வ் வங்கி விளக்கம்

  • அனைத்து வகையான 10 ரூபாய் நாணயமும் செல்லத்தக்கவை என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.தற்போது 14 வகைகளில் 10 ரூபாய் நாணயம் புழக்கத்தில் உள்ளது.
  • கடந்த சில நாட்களாக சில வர்த்தக நிறுவனங்கள் 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதில் தயக்கம் காட்டியதாக தகவல்கள் வெளியானதால் ரிச்ர்வ் வங்கி இந்த விளக்கத்தை வெளியிட்டுள்ளது.
  • இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், சில பொது நிறுவனங்கள் மற்றும் வர்த்தகர்கள் 10 ரூபாய் நாணயங்களை செல்லாது என்று ஏற்றுக் கொள்ள தயக்கம் காட்டி வந்ததால் இந்த விளக்கம் அளிக்கப்படுகிறது. 10 ரூபாய் நாணயங்களை செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவிக்கவில்லை. 10 ரூபாய் நாணயங்கள் ரிசர்வ் வங்கி பரிமாற்றத்துக்கு செல்லும்

5. விசாகப்பட்டினத்தில் சர்வதேச பெண் தொழிலதிபர்கள் கருத்தரங்கு: சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்

  • ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் 3 நாட்கள் நடைபெறும் சர்வதேச பெண் தொழிலதிபர்களின் கருத்தரங்கை நேற்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்.இதில் இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்தும் பெண் தொழிலதிபர்கள் பங்கேற்றுள்ளனர்.

6. கடன் வாங்கும் இலக்கு: குறைத்தது மத்திய அரசு

  • நடப்பு நிதி ஆண்டில் நிர்ணயம் செய்யப்பட்டதை விட கூடுதலாக ரூ.50,000 கோடியை கடன் வாங்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் தற் போது கூடுதலாக ரூ.20,000 கோடியே போதுமானது என நிதி அமைச்சகம் அறிவித்திருக்கிறது. கூடுதலாக ரூ.50,000 கோடி தேவை என கடந்த மாதம் 27-ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் அரசின் வருமானம் மற்றும் செலவு விவரங்களை கணக்கிட்ட பிறகு ரூ.20 ஆயிரம் கோடியே போதுமானது என தெரிவிக்கப்ப ட்டிருக்கிறது.

7.  29 பொருட்கள், 53 சேவைகளுக்கான வரி விகிதம் மாற்றம்: 25-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு

  • சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் வியாழனன்று நடந்தது.இது 25-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமாகும்.இந்த கூட்டத்தில் 29 பொருட்கள் மற்றும் 53 சேவைகளுக்கான வரி விகிதம் மாற்றி அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது.
  • புதிய வரி விகிதங்கள் வரும் 25-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.மேலும் 29 கைவினைப் பொருட்களுக்கான வரி ரத்து செய்யப்பட்டிருக்கிறது.கடந்த ஆண்டு நவம்பர் மாதக் கூட்டத்தில் 200 பொருட்களுக்கு மேல் வரிகள் மாற்றி அமைக்கப்பட்டன.
  • ஜிஎஸ்டி நெட்வொர்க்கை இன்ஃபோசிஸ் நிறுவனம் கையாளுகிறது.இந்த நிலையில் வரித் தாக்கல் முறைகளை எளிமையாக்குவதற்கு ஆலோசனைகளும் நேற்று நடத்தப்பட்டன.இந்தக் கூட்டத்தில் இன்ஃபோசிஸ் தலைவர் நந்தன் நிலகேணியும் கலந்து கொண்டார்.

விளையாட்டு

1. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் நுழைந்தார் ரபேல் நடால்; தோல்வியில் இருந்து தப்பித்தார் வோஸ்னியாக்கி

  • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.மகளிர் ஒற்றையர் பிரிவில் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி தோல்வியில் இருந்து தப்பித்தார்.
  • ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், 52-ம் நிலை வீரரான அர்ஜென்டினாவின் லியோனார்டோ மேயரை எதிர்த்து விளையாடினார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால் 6-3, 6-4, 7-6 (7/4) என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.3-வது சுற்றில் நடால், 28-ம் நிலை வீரரான போஸ்னியாவின் டமீர் ஸூம்கூரை சந்திக்கிறார்.

2. ஹாக்கியில் இந்தியா வெற்றி

  • 4 நாடுகள் ஹாக்கி தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஜப்பானை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
  • நியூஸிலாந்தின் தவுரங்கா நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று இந்தியா – ஜப்பான் அணிகள் மோதின. தொடக்கம் முதலே இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.இந்திய அணிக்கு 7-வது நிமிடத்தில் பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பு கிடைத்தது.இதை ரூபிந்தர் பால் சிங் கோலாக மாற்றினார்.12-வது நிமிடத்தில் 2-வது கோலை அறிமுக வீரான விவேக் சாகர் பிரசாத் அடித்தார்.இது பீல்டு கோலாக அமைந்தது.

3. ஐசிசி விருதுகள்: சிறந்த கிரிக்கெட் வீரராக விராட் கோலி தேர்வு

  • 2016 – 17 ஆண்டுக்கான ஐசிசி ஆண்டு விருதுகள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார்.மேலும் சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரர் என்ற விருதையும் கோலி பெற்றுள்ளார்.

     ஜனவரி 18  நடப்பு நிகழ்வுகள் pdf வடிவம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!