ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 1, 2018

0

ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 1, 2018

 • இசைத் திருவிழாவில் ஒன்றான 171 வது ஆராதணை இசை திருவிழா, தஞ்சாவூர் தமிழ் நாட்டில் நடைபெற்றது. இந்த விழாவினை பன்வாரிலால் புரோகித் தொடங்கிவைத்தார்.
 • அருணாச்சலப் பிரதேசம் திறந்தவெளி கழிப்பிடமற்ற மாநிலமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று இடங்களாக சிக்கிம், ஹிமாச்சல்  மற்றும் கேரளாவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 • NARI – National Respository of Information for women என்ற இணையதளத்தை பெண்களின் முன்னேற்றத்திற்காக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி தொடங்கி வைத்தார். இதில் பெண்களுக்கு தேவையான, அனைத்து மத்திய மாநில திட்டங்களும் உள்ளன.
 • அச்சுருத்தலுக்கு உள்ளாகியுள்ள மாநிலமாக நாகாலாந்து அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜீன் 2018 வரை நாகாலாந்து மாநிலம் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 • நாட்டின் முதல் மாநிலமாக அசாம் தனது குடிமக்களின் பெயர்களை தேசிய பதிவு வரைவின் மூலம் வெளியிட்டுள்ளது. இதில் 1.9 கோடி மக்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
 • நாட்டின் சுகாதாரப் பணியாளர்களுக்கான சிறந்த அமைப்புகள் மற்றும் கட்டமைப்புகளை உறுதிப்படுத்துவதற்காக, 2018 ம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சின் செயலாளர் ப்ரீத்தி சூடான், கூட்டணி மற்றும் சுகாதாரப் பராமரிப்புத் தகவல் தரவு தளத்தை ஆரம்பித்துள்ளார்.
 • ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி உலக வெப்ப மயமாதலில் 2 டிகிரி செல்சியஸின் எழுச்சி கூட உலகின் நிலப்பகுதியில் வறண்டு மற்றும் பாலைவனமாக மாறும். மேலும் காட்டுத் தீ அச்சுறுத்தல் ஏற்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 • சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரசு அமீரகம் ஜனவரி 1, 2018 முதல் மதிப்புக் கூட்டு வரியை (Value Added Tax)  நடைமுறைப்படுத்தியுள்ளது. வளைகுடா நாடுகளில் மதிப்புக் கூட்டு வரிவிதித்த முதல் நாடுகள் என்ற பெயர் பெற்றுள்ளது. இது ஒரு நீண்ட வரி முறைமையை பெருமையாகக் கருதுகிறது.
 • 2018ம் ஆண்டு ஜனவரி 1 ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற அனுசக்தி நிறுவல்களின் 27 வது பட்டியலை பறிமாறிக் கொண்டது.
 • பிரிட்டனைச் சேர்ந்த பொருளாதார தொழில் ஆராய்ச்சி மையம் 2018 உலகப் பொருளாதார அட்டவணையை வெளியிட்டது. (World Economic League Table) 2018ம் ஆண்டில் பிரானஸ் பிரிட்டன் நாடுகளை பின்னுக்கு தள்ளி உலகின் 5 வது பொருளாதார நாடாக இந்தியா முன்னேறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளர் நிருபேந்திர மிஷ்ரா தலைமையில் டெல்லியின் காற்று மாசைக் கட்டுப்படுத்துவதற்கு உயர்மட்ட செயற்கைக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here