நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 18 2018

0

நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 18 2018

தேசிய செய்திகள்

கேரளம்

கோழிக்கோடில் மாநிலத்தின் முதல் திறன் கஃபே திறப்பு

  • கோழிக்கோட்டில் உள்ள ஆட்சியர் வளாகத்தில் தொழில் ரீதியாக மனநிலை பாதித்தவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதை நோக்கமாகக் கொண்ட கேரளத்தின் முதல் திறன் கஃபே திறக்கப்பட்டுள்ளது.

புது தில்லி

ITU தெற்காசிய பகுதி அலுவலகம் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையம்

  • சர்வதேச தொலைத்தொடர்பு கழகம் (ITU) தெற்காசிய பகுதி அலுவலகம் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையம் புது டெல்லியில் நிறுவப்படும்.

உள்ளூர் நகர்ப்புற கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் உயிரி கழிப்பறைகள் திறக்கப்பட்டது

  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஆரோக்கியமான மறுபயன்பாட்டு திட்டத்திற்காக (LOTUSHR) உள்ளூர் நகர்ப்புற கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் உயிரி கழிப்பறைகளை சன் டயல் பூங்கா, புது டில்லியில் திறந்து வைத்தார்.

மகாராஷ்டிரம்

மகாராஷ்டிரா சைபர் பல்கலைக்கழகம் அமைக்கப்பட உள்ளது

  • சைபர் அச்சுறுத்தலைக் குறைப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட சைபர் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான முதல் படிநிலையை மகாராஷ்டிரா அரசு நடவடிக்கை.

திரிபுரா

திரிபுராவில் விண்வெளி தொழில்நுட்ப இன்குபேசன் மையம்

  • திரிபுரா தலைநகரான அகர்தலாவில் விண்வெளி தொழில்நுட்ப இன்குபேசன் மையத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) துவக்கியது.

சர்வதேச செய்திகள்

துறைமுக பயன்பாட்டிற்காக இந்தியாவுடன் வங்கதேசம்  அமைச்சரவை ஒப்பந்தம் செய்துள்ளது

  • வடகிழக்கு இந்தியாவிற்கும், வடகிழக்கு இந்தியாவிலிருந்தும் பொருட்களை எடுத்துச்செல்ல சிட்டகாங் மற்றும் மோங்க்லா துறைமுகங்களைப் பயன்படுத்த வங்கதேச அமைச்சரவை இந்தியாவுடன் ஒரு வரைவு உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

அறிவியல் செய்திகள்

மலிவான லித்தியம் பேட்டரிகளை IIT- சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் தயாரித்தது

  • ஹைதராபாத் இந்திய தொழில்நுட்பக் கழகத்தை (ஐஐடி-எச்) சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் வேளாண் துறை மற்றும் விண்வெளி பயன்பாடுகளுக்கு பயன்படும் லித்தியம் பேட்டரிகளை உருவாக்கியது.

மருத்துவ சைக்லோட்ரான் வசதி சைக்லோன்-30 செயல்படத் தொடங்கியது

  • புற்றுநோய் நோயாளிகளுக்கு நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சையளிப்புக்கான ரேடியோ ஐசோடோப்களை தயாரிக்க சைக்லோட்ரான் பயன்படுத்தப்படுகிறது. மாற்று சக்தி சைக்லோட்ரான் மையம் (VECC), கொல்கத்தாவில் மருத்துவ பயன்பாட்டிற்காக இந்தியாவின் மிகப்பெரிய சைக்லோட்ரானான சைக்லோன்-30 செயல்படத் தொடங்கியது.

வணிகம் & பொருளாதாரம்

FPI களுக்கான புதிய KYC விதிமுறைகளை செபி [SEBI] அங்கீகரிக்கிறது

  • வெளிநாட்டுப் பங்குகள் முதலீட்டாளர்களுக்கான புதிய KYC விதிமுறைகளை இந்திய பங்குச் சந்தை மற்றும் செலாவணி வாரியம் (செபி) அங்கீகரித்துள்ளது.

மாநாடுகள்

இந்தியாவின் தெரு விற்பனையாளர்கள் தேசிய சங்கத்தின் தேசிய மாநாடு, நாஸ்வி[NASVI]

  • வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி புது தில்லியில், இந்தியாவின் தெரு விற்பனையாளர்களின் தேசிய சங்கத்தின் நாஸ்வி[NASVI] இரண்டு நாள் தேசிய மாநாட்டை துவங்கி வைத்தார்.

நியமனங்கள்

  • சஞ்சய் அகர்வால் புதிய செயலாளர், வேளாண்மை
  • ப்ரீதம் சிங்செயலாளர், பட்டியல் சாதியின் தேசிய ஆணையம் (NCSC)

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

குழாய் கட்டுமானத்திற்காக இந்தியா, வங்கதேசம் ஒப்பந்தம்

  • வங்கதேத்தின் டினாஜ்புர் மாவட்டம் – இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரியை இணைக்கும் 130 கிலோ மீட்டர் குழாய்த்திட்டத்திற்கு இந்தியா மற்றும் வங்கதேசம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

ரூ. 9,100 கோடி மதிப்புள்ள கருவிகள் கொள்முதல் செய்வதற்கு பாதுகாப்பு கொள்முதல் குழு ஒப்புதல்

  • பாதுகாப்பு கொள்முதல் குழு கூடி, ரூ.9,100 கோடிக்கும் கூடுதலான மதிப்புள்ள கருவிகளை பாதுகாப்புப் படைகளுக்கு என கொள்முதல் செய்வதற்கு அனுமதி வழங்கியது.

உலக வங்கியுடன் இந்தியா நிதிக்கான கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்து

  • உத்தரகாண்ட் தொழிலாளர் மேம்பாட்டு திட்டத்திற்கு (யு.கே.டபிள்யு.டி.பி) ஐ.பி.ஆர்.டி.யின் 74 மில்லியன் அமெரிக்க டாலர் நிகர கடன் ஒப்பந்தத்தில் உலக வங்கியுடன் கையெழுத்திட்டது.

பாதுகாப்பு செய்திகள்

ரஷ்யாவின் இராணுவ விமானம் மத்தியதரைக் கடலோரப் பகுதியில் மாயம்

  • சிரியாவின் மத்திய தரைக்கடல் கடலோரப் பகுதியில் 14 பேர் கொண்ட ரஷ்ய இராணுவ விமானம் Il-20 காணாமல் போயுள்ளது.

ஜப்பான் நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சியை நடத்தியது

  • மூலோபாய நுட்பங்களை மேம்படுத்துவதற்காக பிரச்சனைக்குரிய தெற்கு சீனக் கடலில் ஜப்பான் அதன் முதல் நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சியை நடத்தியது.

சர்வதேச கடற்சக்தி கருத்தரங்கின் (ISS) 23 வது பதிப்பு

  • யுஎஸ் கடற்படை அமைப்பின் 23 வது சர்வதேச கடற்சக்தி கருத்தரங்கின் பதிப்பில் கலந்துகொள்ள இந்தியக் கடற்படைத் தளபதி அமெரிக்காவின் ரோட் தீவிற்கு விஜயம் செய்தார்.

விருதுகள்

  • தலாய் லாமாகாந்தி குளோபல் பவுண்டேசனின் காந்திதர்ஷன் சர்வதேச விருது [கேரளா]
  • அருண் ஜேட்லிகாந்திதர்சன் தேசிய விருது
  • பினராயி விஜயன்சிறந்த முதலமைச்சர் விருது
  • எம்.ஏ. யூசுப் அலி, பி.ஆர். ஷெட்டி மற்றும் பி. கோவிந்தன்வணிக விருதுகள்
  • ஜோசப் புளிகன்னெல்மனித நேயத்திற்கான விருது

தூய்மையான பள்ளிகள் விருதுகள் 2017-18

  • தூய்மையான பள்ளிகள் விருதுகள் 2017-18-ஐ மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவ்டேகர் புதுதில்லியில் டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.

மேலும் விவரங்களுக்கு – இங்கே கிளிக் செய்யவும்

  • கர்நாடகாவில் கக்கூன்களின் இ-ஏலத்திற்கு – கர்நாடகா அரசின் ஆளுமை விருது.

மொபைல் செயலிகள் & இணைய போர்ட்டல்

  • தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த ஆண்டினை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் இலச்சினை மற்றும் இணையப் பக்கத்தை குடியரசுத் தலைவர் மாளிகையில் வெளியிட்டார்.

சஹாஜ்போர்ட்டல்

  • மத்திய உள்துறை செயலாளர் ஸ்ரீ ராஜீவ் கௌபா பாதுகாப்பு அனுமதி வழங்குவதற்கான ஆன்லைன் ‘இ-சஹாஜ்’ போர்ட்டல் ஒன்றை அறிமுகப்படுத்தியது.

C-DAC தகவல் ஊடக சேவையகம் (CIMS)

  • நல்ல ஆளுமையை மேம்படுத்துவதற்காக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஸ்ரீ. எஸ்.எஸ். அலுவாலியா C-DAC தகவல் ஊடக சேவையகத்தை (சிஐஎம்எஸ்) அறிமுகப்படுத்தினார்.

PDF DOWNLOAD

நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 18, 2018 வினா விடை

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

ஆகஸ்ட் நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

For  WhatsAPP Group – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!