ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 20 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 20 2019

பிப்ரவரி 20 – உலக சமூக நீதிக்கான தினம்

  • 2019 தீம்: நீங்கள் அமைதி மற்றும் வளர்ச்சியை விரும்பினால், சமூக நீதிக்காக உழையுங்கள்
  • கேரளாவில் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் லட்சக்கணக்கான பெண்கள் கூடி பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். திரிபுரா
  • திரிபுராவின் முதல் மெகா உணவு பூங்கா அகர்தலாவின் துலாக்கோனா கிராமத்தில் சிகாரியா மெகா உணவு பூங்கா தொடங்கி வைக்கப்பட்டது.
  • உத்தரப்பிரதேசத்தில் 510 கி.மீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அடிக்கல் நாட்டினார்.
  • இந்தியாவில் படிப்பதற்காக இலங்கையின் மாணவர்களுக்கு மகாத்மா காந்தி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
  • 12 பொதுத்துறை வங்கிகளில் 48,239 கோடி ரூபாயை செலுத்த அரசு திட்டம்.
  • ஸ்டார்ட் அப் தொடக்க நிறுவனங்களின் மாநில அளவிலான தரவரிசை – இரண்டாம் பதிப்பு வெளியிடப்பட்டது.
  • இந்திய ஜனாதிபதி ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய சர்வதேச மாநாடு: சவால்கள் மற்றும் வாய்ப்புகள் (ENCO 2019) புது தில்லியில் துவக்கி வைத்தார்.
  • விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு.ராதா மோகன் சிங் 14வது வேளாண் அறிவியல் காங்கிரஸில் உரையாற்றினார்.
  • புதுடெல்லியில் “உள்ளூர் உணவு முறைகளால் ஆரோக்கியமான உணவை மேம்படுத்துதல்” பற்றிய தேசிய ஒர்க்ஷாப் நடைபெற்றது.
  • திரு. தருண் ஸ்ரீதர் – மீன்வளத்துறையின் கூடுதல் பொறுப்பு செயலாளர், விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம்.
  • இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில் காலநிலை மாற்றத்தின் சிக்கல்களைத் தீர்க்க NICRA என்று அழைக்கப்படும் மெகா திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது.
  • அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நாட்டில் தரமான கல்வியை உயர்த்துவதற்கு தொழில்நுட்பத்தை ஒழுங்கமைப்பதற்காக ஆபரேஷன் டிஜிட்டல் வாரியத்தை தொடங்கினார்.
  • சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையே ஒப்பந்தம்.
  • எல்சிஏ தேஜாஸ் எம்.கே.I-ற்கு இறுதி செயல்பாட்டு அனுமதி.
  • பெங்களூரில் 12-வது சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி மற்றும் பாதுகாப்பு கண்காட்சி ஏரோ இந்தியா 2019-ஐ பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்.
  • 70வது ஸ்ட்ராண்ட்ஜா நினைவுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண்கள் குத்துச்சண்டை வீராங்கணை எனும் சாதனை படைத்தனர் நிகத் ஜரீன் (51 கிலோ) மற்றும் மீனா குமாரி தேவி (54 கிலோ).
  • வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் நியூசிலாந்து 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

PDF Download

ஜனவரி 2019 மாத நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!