நடப்பு நிகழ்வுகள் – மே 3 2019

0

நடப்பு நிகழ்வுகள் – மே 3 2019

முக்கியமான நாட்கள்

மே 3 – உலக பத்திரிகை சுதந்திர தினம்

  • உலக பத்திரிகை சுதந்திர தினம் (World Press Freedom Day) என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் “மனித உரிமைகள் சாசனம்” பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. 1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3 ஆம் நாளன்று பத்திரிகை சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • 2019 தீம் “Media for Democracy: Journalism and Elections In Times of Disinformation”

தேசிய செய்திகள்

அனைத்து மோட்டார் வாகனங்களின் பதிவுகளும் நிறுத்தப்பட்டன

  • ‘வாகன்’ தரவுத்தளத்தில் உயர் பாதுகாப்புப் பதிவு தட்டை (ஹெச்.எஸ்.ஆர்.ஆர்) ஒருங்கிணைக்காததற்காக, மே 02 முதல், அனைத்து மோட்டார் வாகனங்களுக்கான பதிவு சான்றிதழ் வழங்கல் (RC) நிறுத்தப்பட்டன.

அடுத்த மூன்று மாதங்களில் விமானத்திற்குள் இணையதளம்

  • சர்வதேச விமான நிறுவனங்கள் அடுத்த மூன்று மாதங்களில் இந்தியாவில் முதன்முதலாக விமானங்களில் இணையதளத்தை வழங்கத் திட்டமிட்டுள்ளது, உள்நாட்டு பயணிகள் இந்த வசதிகளை பெற “7 முதல் 9 மாதங்கள்” காத்திருக்க வேண்டும். இந்த வசதி மூலம் வாட்ஸ் ஆப், ட்விட்டர், திரைப்படம் காணுதல் மற்றும் கைபேசியில் போன் கால் செய்து பேசலாம்.

புது தில்லி

வேதாந்த தேசிகன் தபால் தலைகள் வெளியிடப்பட்டன

  • மத தத்துவவாதியான ‘வேதாந்த தேசிகன்’ அவர்களின் 750வது பிறந்த நாள் விழாவில், அவரை கவுரவிக்கும் விதமாக நினைவுத் தபால்தலைகளை துணைக் குடியரசுத் தலைவர் எம். வெங்கையா நாயுடு வெளியிட்டார்.

மகாராஷ்டிரா

இந்தியா சீட் எண்ணிக்கையை அதிகரிக்க ஜசீரா ஏர்வேஸ் கோரிக்கை

  • குவைத்- நாட்டைச் சார்ந்த ஜஸீரா ஏர்வேஸ், மத்திய கிழக்கு நாட்டின் முதல் தனியார் விமான நிறுவனம், இந்தியா இருதரப்பு ஒப்பந்தம் மூலம் வாரத்திற்கு 12,000 இடங்களை அதிகரிக்க கோரிக்கை விடுத்துள்ளது. வரும் ஜூன் மாதம் முதல், ஒரு வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாட்டிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையில் பறக்கவிருக்கும் முதல் குறைந்த கட்டண விமானமாக இது இருக்கும், மேலும் இந்தியாவிலும் இதுபோன்ற விரிவாக்கத்தை செய்ய ஆவலுடன் எதிர்பார்க்கிறது.

தமிழ்நாடு

வி..டி. ஸ்பானிஷ் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம்

  • வெல்லூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (வி.ஐ.டி) மற்றும் ஸ்பெயினின் டோலிடோ, யுனிவர்சிடாட் டி காஸ்டிலா-லா மன்ச்சா (யு.சி.எம்.எம்) இடையே கல்வி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்பு, ஆசிரியர் மற்றும் மாணவர்களின் பரிமாற்றம், கூட்டு கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள் நடத்துதல் மற்றும் அறிவார்ந்த வெளியீடுகள் பரிமாற்றம் ஆகியவற்றிற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளது.

கேரளா

CSL மற்றும் இந்திய கடற்படை இடையே 6,311 கோடி ரூபாய் மதிப்பிலான நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு கப்பல்களை கட்ட ஒப்பந்தம் கையெழுத்து

  • கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் (சிஎஸ்எல்) உடன் ரூ. 6,311.32 கோடி மதிப்பில், இந்திய கடற்படைக்கு எட்டு Anti Submarine Warfare Shallow Water Craft (ASWSWCs) கட்டுமானத்திற்காக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

வணிகம் & பொருளாதாரம்

2019 ஆம் ஆண்டில் மத்திய வங்கிகள் தங்கம் வாங்குவதை அதிகரித்துளளது

  • உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள சமீபத்திய தங்க தேவை ட்ரெண்ட்ஸ் அறிக்கையின் படி, முதல் காலாண்டில் மத்திய வங்கிகள்5 டன் தங்கம் வாங்கியுள்ளது, இது 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 68% அதிகம் ஆகும், மேலும் இது 2013 ஆம் ஆண்டிற்கு பிறகு கிடைத்துள்ள ஆண்டிற்கான ஒரு வலுவான தொடக்கமாகும்.

பெயிண்ட் வணிகத்தில் JSW களமிறங்கியுள்ளது

  • JSW குழு 42,000 கோடி ரூபாய் மதிப்பிலான JSW பெயின்ட்ஸ் அறிமுகப்படுத்தியதன் மூலம் நாட்டில் பெயிண்ட் வணிகத்தில் JSW களமிறங்கியுள்ளது. தொழில்துறை மதிப்பீடுகளின்படி, இந்தியாவின் ஒழுங்குபடுத்தப்பட்ட பெயிண்ட் தொழில் 2020 ஆம் ஆண்டளவில் 15% கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதத்துடன்[CAGR] 50,000 கோடி ரூபாயைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநாடுகள்

ஆசியாவின் மிகப் பெரிய உள்ளடக்க மார்க்கெட்டிங் நிகழ்வு CMS ஆசியா மும்பையில் நடைபெறுகிறது

  • ஆசியாவின் மிகப் பெரிய உள்ளடக்க மார்க்கெட்டிங் சம்மேளனத்தால் நடத்தப்படும் மிகப்பெரிய லாபமில்லா உச்சிமாநாடு 2019 ஆம் ஆண்டு மே 8 ஆம் தேதி இந்தியா, மும்பையில் நடைபெறவுள்ளது.

பாதுகாப்பு செய்திகள்

இந்தியாவின் இராணுவ செலவினம் 2018 ல் 3.1% உயர்ந்துள்ளது

  • உலகெங்கிலும் இராணுவ செலவினங்கள் 2017ல் இருந்து6% உயர்ந்து 2018 ஆம் ஆண்டில் 1.8 டிரில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச சமாதான ஆராய்ச்சி நிறுவனம் [SIPRI] தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் செலவு 3.1% உயர்ந்துள்ளது, பாகிஸ்தானின் இராணுவச் செலவு 11% உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா, சீனா, சவுதி அரேபியா, இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகியவை அதிக இராணுவ செலவு செய்யும் ஐந்து நாடுகள் ஆகும்.

இந்திய விமானப்படையின் ஆபரேஷன்கிழக்கு அண்டை நாடு‘ [eastern neighbour]

  • இந்திய விமானப்படை கிழக்கு மற்றும் வடகிழக்கு பிரிவுகளில் வான் பாதுகாப்புத் தயார்நிலை குறித்து கவனம் செலுத்தி வருகிறது. இது நாட்டின் கிழக்கு அண்டை நாடுகளை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
  • குவஹாத்தியின் புறநகர்ப் பகுதியில் பொது விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படையின் சுஹோய் சு -30 விமானங்கள் பயிற்சியை மேற்கொண்டது. இந்த வகையிலான நடவடிக்கை இங்கு நடைபெறுவது இது முதல்முறையாகும். மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா மற்றும் துர்காபூரிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மொபைல் செயலிகள் & இணைய போர்ட்டல்

PayPal இந்தியாவில் கூகுள் ஸ்மார்ட் லாக் [Google Smart Lock] உடன் ஒன் டச்சை ஒருங்கிணைக்கிறது

  • இந்தியாவில் கூகுள் ஸ்மார்ட் லாக் மூலமாக PayPal தனது ஒன் டச் அனுபவத்தை அறிமுகப்படுத்தியது. இந்த வசதி ஆண்ட்ராய்டில் ஆதரிக்கப்படும் அம்சம் கொண்டது, பயனர்கள் தங்கள் சாதனங்களை PayPalல் பதிவு செய்ய அனுமதிக்கிறது.

விளையாட்டு செய்திகள்

நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன்

  • நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் முன்னணி வீரரான எச்எஸ் பிரனோய் 2-ம் நிலை வீரரான டோமி சுகியார்ட்டோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

PDF Download

Daily Current Affairs – May 03 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!