நடப்பு நிகழ்வுகள் – மே 29, 2019

0

நடப்பு நிகழ்வுகள் – மே 29, 2019

முக்கியமான நாட்கள்

மே 29 – சர்வதேச அமைதி காப்போர் தினம்
 • 2001ம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆண், பெண் இரு சாராரையும் கௌரவப்படுத்துவதற்கும்,சமாதானத்திற்கான இந்த நடவடிக்கைகளின்போது உயிர் நீத்தவர்களை ஞாபகமூட்டுவதற்காகவும் மே 29ம் தேதியை ஐக்கிய நாடுகளின் சர்வதேச அமைதி காப்போர் தினமாக பிரகடனப்படுத்தியது.
மே 29 – உலக டைஜஸ்டிவ் ஹெல்த் தினம் (WDHD)
 • ஒவ்வொரு மே 29 அம தேதி அன்று உலக இரைப்பை குடலியல் அமைப்பு (WGO) மற்றும் WGO அறக்கட்டளை (WGOF) உடன் இணைந்து உலக டைஜஸ்டிவ் ஹெல்த் தினத்தை (WDHD) கொண்டாடுகிறது மேலும் 110 க்கும் மேற்பட்ட WGO உறுப்பினர்கள் மூலம் இந்த பிரச்சாரத்தை உலகளாவிய, பொது சுகாதாரப் பிரச்சாரமாக உருவாக்குகிறது.
 • உலக டைஜஸ்டிவ் ஹெல்த் தின 2019 பிரச்சாரத்திற்கான தீம் “ஆரம்பகால நோயறிதல் மற்றும் ஜி.ஐ. புற்றுநோயின் சிகிச்சை.

தேசிய செய்திகள்

‘டிஜிட்டல் டைலேமா’வின் ஹிந்திப் பதிப்பு
 • தில்லியில் அகாடமி பப்ளிகேஷனின் ஹிந்தி பதிப்பான “டிஜிட்டல் டைலேமா” வை ஜான் பெய்லி, மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் அகாடமி தலைவர் (பிரபலமாக ஆஸ்கார் அகாடமி என அழைக்கப்படுகிறது) தொடங்கி வைத்தார். திரைப்பட சேமிப்பு ஊடகத்தில் தொழில்நுட்ப மாற்றங்களால் பல சவால்கள் உள்ளன என்று ஜான் பெய்லி கூறினார், இந்தப் புத்தகம், திரைப்பட தயாரிப்பாளர்கள் டிஜிட்டல் பொருள் குறித்து புரிதல் மற்றும் திட்டமிடல் செய்ய உதவும் எனக்கூறினார்.
உத்தரப் பிரதேசம்
வேளாண் பணிக்காக கிராமப்புற பகுதிகளுக்கு 24 மணிநேர மின்சாரம்
 • உத்தரப்பிரதேசத்தில், சௌபாக்கியா திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட பின்னர், அரசாங்கம் விவசாய வேலைக்காக மாநிலத்தின் கிராமப்புற பகுதிகளில் 24 மணி நேர மின்சாரம் வழங்க திட்டமிட்டுள்ளது.
 • மாநில அரசு மாநில மக்களின் மக்களுக்கு தரமான எந்த தடையும் இல்லாமல் மின்சாரத்தை வழங்குவதில் கவனம் செலுத்தவுள்ளது.

அறிவியல்

புதிய புவியியல் சகாப்தம் – அன்ட்ரோபாசீன் (Anthropocene)
 • மே 21 அன்று, அன்ட்ரோபாசீன் வேலைக் குழுவின் (AWG) 34 உறுப்பினர்கள் கொண்ட குழுவானது புதிய புவியியல் சகாப்தத்தை (Anthropocene) நியமிப்பதற்கு ஆதரவாக வாக்களித்தனர். பூமியின் பல்வேறு அம்சங்கள் எவ்வாறு மனித நடவடிக்கைகளால் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதை இந்த முடிவு பிரதிபலிக்கிறது.
 • இந்த வாக்கெடுப்பு 11,700 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய ஹோலோசீன் சகாப்தத்தின் முடிவைக் குறிப்பதாகவுள்ளது .

சர்வதேச செய்திகள்

மலேசியா பிளாஸ்டிக் கழிவுகளை வெளிநாட்டுகளுக்கு  திருப்பி அனுப்பவுள்ளது
 • அமெரிக்கா, யு.கே., கனடா மற்றும் ஆஸ்திரேலியா உட்பட நாடுகளுக்கு 3,000 மெட்ரிக் டன் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் கழிவுகள் திருப்பி அனுப்பப்படும் என்று மலேசியா தெரிவித்துள்ளது. மலேரியாவில்  அசுத்தமான கழிவுகளை கொண்ட அறுபது கன்டெய்னர்  சட்டவிரோதமாக  கடத்தப்பட்டு உள்ளே  வந்துள்ளது.

பதவியேற்புகள்

ஒடிசா மாநில முதல்வராக தொடர்ந்து 5வது முறையாக பதவியேற்றார் நவீன் பட்நாயக்
 • புவனேஷ்வரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒடிசா மாநில முதல்வராக 5வது முறையாக பிஜு ஜனதா தளத்தின் தலைவர் நவீன் பட்நாயக் இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
ஸ்காட் மோரிசன் ஆஸ்திரேலியாவின் பிரதமராக பதவியேற்றார்
 • ஆஸ்திரேலியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமராக இருந்த மால்கம் டர்ன்புல்லுக்கு எதிராக மூத்த அமைச்சர்கள் போர்க் கொடி தூக்கியதால் நாடாளுமன்றத்தில் அவரது ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க எம்பிகளின் வாக்கெடுப்பு நடந்தது இதில் ஸ்காட் மோரிசன் வெற்றி பெற்று பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் மீண்டும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் ஸ்காட் மோரிசன். மைகேல் மெக்கார்மாக்கும் துணை பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார்.
நீதிபதி அஜய் குமார் மிட்டல்மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
 • நீதிபதி அஜய் குமார் மிட்டல் மேகாலயா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார். கவர்னர் ததகதா ராய் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நீதிபதி ஏ.கே. மிட்டல் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MOU & அமைச்சரவை ஒப்புதல்கள்

MSME அமைச்சகத்துடன் NSIC ஒப்பந்தம் செய்துள்ளது
 • குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவன (MSME) அமைச்சகத்துடன் தேசிய சிறு தொழில்கள் கழகம் (NSIC) 2019-20 ஆம் ஆண்டுக்கான புதிய  புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் MSME கீழ் உள்ள திட்டங்களுக்கு NSIC மூலம் நாட்டிலுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவங்களுக்கான மார்க்கெட்டிங், நிதி,தொழில்நுட்பம் மற்றும் பிற மேம்பட்ட சேவைகளுக்கு  ஒதுக்கீடு வழங்குகிறது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை மேம்படுத்த இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியா இடையே கூட்டுறவு ஒப்பந்தம் கையெழுத்தானது.
 • கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை மேம்படுத்துவதற்கான திட்டம் தொடர்பாக இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியா இடையே ஒரு கூட்டுறவு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இத்திட்டமானது 500 மில்லியன் டாலர்கள் முதல்  700 மில்லியன் டாலர்கள் வரையிலான செலவில் ஒப்பந்தமாகியுள்ளது. கடந்த ஆண்டு முதலே நடந்த ஒப்பந்தம் பேச்சுவார்த்தையானது  தற்போது கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு செய்திகள்

J80 உலக சாம்பியன்ஷிப்
 • ஜூலை 13 முதல் 20 வரை ஸ்பெயினில் பில்வோவில் நடத்தப்படவுள்ள J80 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய பெண்கள் அணியை ஆசிய இளைஞர் சாம்பியன் பட்டம் வென்ற டாக்டர் ரோஹினி ராவ் தலைமை தாங்கி வழிநடத்துகிறார். J80 இப்போட்டியானது துறைமுகங்கள் மற்றும் ஏரிகள் போன்ற பகுதிகள் அல்லாத பாதுகாக்கப்பட்ட சூழலிலுள்ள நீர்நிலைகளில் அதி நவீன விளையாட்டு படகுகள் கொண்டு நடத்தப்படவுள்ளது.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – மே 29, 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!