நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 13, 2019

1

நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 13, 2019

முக்கியமான நாட்கள்

ஜூன் 13 – சர்வதேச வெளிறல் விழிப்புணர்வு தினம்
 • 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி ,ஐ.நா பொது சபை A/RES/69/170 என்ற தீர்மானத்தின் படி ஜூன் 13 ஆம் தேதியை சர்வதேச வெளிறல் விழிப்புணர்வு தினமாக அறிவித்தது . ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் 2013 ஆம் ஆண்டில் வெளிறல் நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் தாக்குதல்கள் மற்றும் அவர்களின் பாகுபாடு குறித்த பிரச்சனைகளுக்கு எதிராக தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தது.
 • சர்வதேச வெளிறல் விழிப்புணர்வு தினம் 2019 தீம் – “Still Standing Strong”

தேசிய செய்திகள்

மேலும் ஆறு மாதங்களுக்கு ஜம்மு-காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி நீட்டிப்பு
 • ஜம்மு- காஷ்மீர் மாநில ஆளுநரின் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த வகையில் மாநிலத்தில் தற்போது நிலவும் சூழ்நிலையின் அடிப்படையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ஜூலை 3, 2019 முதல் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை வழங்கியது.
 • தற்போதைய குடியரசுத் தலைவர் ஆட்சியின் காலம் 2019 ஜூலை 2-ம் தேதியுடன் முடிவடைகிறது. 2019 ஜூலை 3 முதல் மேலும் ஆறு மாத காலத்திற்கு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிக்கலாம் என மாநில ஆளுநர் பரிந்துரைத்திருந்தார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

டி.ஆர்.டி. தொழில்நுட்ப செயல்திறன் வாகனத்தை அறிமுகப்படுத்தியது
 • ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் அப்துல் கலாம் தீவில் இருந்து எதிர்காலப் பணிக்கான பல தொழில்நுட்பங்களை நிரூபிக்க பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) ஒரு தொழில்நுட்ப செயல்திறன் வாகனத்தை அறிமுகப்படுத்தியது. பல்வேறு ரேடார்கள், டெலிமெட்ரி நிலையங்கள் மற்றும் மின் ஆப்டிகல் டிராக்கிங் சென்சார்கள் இந்த வாகனத்தின் வழிப்பயணத்தை கண்காணித்தது. தரவுகள் சேகரிக்கப்பட்டு முக்கியமான தொழில்நுட்பங்களை மதிப்பிடுவதற்கு பகுப்பாய்வு செய்யப்படவுள்ளது .

மாநாடுகள்

கடல் தகவல் பகிர்வு ஒர்க்க்ஷாப்  2019
 • இந்தியப் பெருங்கடல் (IOR ) மற்றும் பிற பகுதிகளில் உள்ள 29 நாடுகளில் இருந்து 41 பிரதிநிதிகள்,  இரண்டு நாள் நிகழ்வில் (கடல் தகவல் பகிர்வு ஒர்க்க்ஷாப் ) கலந்துகொள்கின்றனர் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவுத்துள்ளது. தகவல் இணைவு மையம்-இந்திய பெருங்கடல் பகுதி IFC-IOR, அதன் தகவல் பகிர்வு வழிமுறைகள் மற்றும் இந்த துறையில் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்ளும் முறைகள் பற்றி இரண்டு நாட்கள் நிகழ்ச்சியில் விவாதிக்கஉள்ளது .
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாடு
 • கிர்கிஸ்தானின் தலைநகரான பிஷ்கேக்கில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் [SCO] பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டுச் சென்றார். உலகளாவிய பாதுகாப்பு நிலைமை, பன்முக பொருளாதார ஒத்துழைப்பு, மக்கள்-க்கு மக்கள் பரிமாற்றங்கள் மற்றும் சர்வதேச மற்றும் பிராந்திய முக்கியத்துவத்தின் மேற்பார்வை பிரச்சினைகள் ஆகியவை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டின் போது விவாதிக்கப்படும். உச்சி மாநாட்டில் ஆப்கானிஸ்தான் பற்றி விவாதிப்பது முக்கிய இடங்களில் ஒன்றாக இருக்கும்.
“PwDs உரிமைகள் தொடர்பாக நடக்கும்12 வது சர்வதேச மாநாடு”
 • நியூயார்க்கின் ஐ.நா தலைமையகத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் “ஊனமுற்றோருக்கான உரிமைகள் தொடர்பான கருத்தரங்கில் 12 வது மாநாட்டில்” கலந்து கொண்டார் திருமதி. சகுந்தலா டொலி காம்லின் .இவர் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சின் கீழ் உள்ள குறைபாடுடைய நபர்களுக்கு  அதிகாரமளிக்கும் துறையின் (DEPWD) செயலாளர் ஆவார்.
 • ஐ.நா.சி.ஆர்.பி .டி மற்றும் ஐ.நாவின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அமுல்படுத்துவதில் இந்தியா முழுமையாக ஈடுபட்டுள்ளது என்று கூட்டத்தில் தெரிவித்தார். இந்தியாவின் முக்கிய கவனம் அணுகல், உதவிகள், உபகரணங்கள் மற்றும் மறுவாழ்வு சேவைகளை வழங்கி மாற்றுத்திறனாளிகளின் உளவியல் சவால்களை எதிர்கொள்ளவும் மற்றும் ஐ.டி தீர்வுகளை பயன்படுத்தி மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையை மேலும் எளிய மற்றும் திருப்திகரமானதாக்க வேண்டும் என்பதாகும் என்று தெரிவித்தார்.
16 ஆசிய ஊடக உச்சி மாநாடு
 • கம்போடியாவில் 16 வது ஆசியா ஊடக உச்சிமாநாடு தொடங்கியது . இதில் ஊடகங்கள் மற்றும் ஒளிபரப்பு தொழில் சம்பந்தமான பல விஷயங்கள் விவாதிக்கப்பபட்டன. மேலும் புதிய தொழில்நுட்ப சாத்தியங்களை வளர்ந்துவரும், சந்தைகளில் நடப்பு சூழ்நிலைகளில் பயன்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

வணிக மற்றும் பொருளாதார செய்திகள்

ஜப்பான் அரசாங்கம் வடகிழக்குப் பகுதியில் ரூ.13,000 கோடி முதலீடு செய்ய முடிவு
 • ஜப்பான் அரசு இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள பல்வேறு மாநிலங்களின் புதிய திட்டங்களுக்கு 784 பில்லியன் யென் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. இது சுமார் ரூ .13,000 கோடிக்கு சமமானதாகும். இது இந்திய வடகிழக்கு மேம்பாட்டு அமைச்சர் (DoNER)டாக்டர் ஜிதேந்திர சிங், ஜப்பானிய தூதுவர் திரு கென்ஜி ஹிராமாட்சு தலைமையிலான ஜப்பானிய பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய பிறகு வெளிவந்தது.

புரிந்துணர்வு ஒப்பந்தம் & அமைச்சரவை ஒப்புதல்

இந்தியா மற்றும் கிர்கிஸ்தான் இடையே கூட்டு முயற்சி மேற்கொள்வதற்கான ஒப்பந்தம்
 • பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் உயிரியல் மற்றும் மருத்துவத்தில் உயரமான பகுதியில் கூட்டு ஆராய்ச்சிப் பணி மேற்கொள்ள இந்தியா மற்றும் கிர்கிஸ்தான் இடையே கூட்டு முயற்சி மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது
 • இந்திய, கிர்கிஸ்தான் ராணுவத்தினர் / மக்கள் மத்தியில், உயர்ந்த மலைப் பகுதிகளில் ராணுவ வீரர்களின் உடல் மற்றும் மனநலம் சார்ந்த விஷயங்களைப் புரிந்து கொள்ளவும், யோகா, மூலிகைகள் மற்றும் ஊட்டச்சத்து மாற்று மருந்துகள் மூலம் அந்தப் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்துவது குறித்த புரிதல் ஏற்படுவதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.
இந்தியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
 • பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையில் வானவியல் / வான் இயற்பியல்/ வான்வெளி அறிவியல் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
 • புதிய அறிவியல்பூர்வ முடிவுகளை உருவாக்கவும், அறிவியல் கருத்துப் பறிமாற்றம் மற்றும் பயிற்சி, அறிவியல் கட்டமைப்பு வசதியை கூட்டாகப் பயன்படுத்துதல் மூலம் மனிதவள மேம்பாட்டை அதிகரிக்கவும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது.
இந்தியாவுக்கும் பொலிவியாவுக்கும் இடையில் ரயில்வே துறை தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம்
 • பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பொலிவியாவில் நிலம் மற்றும் நீர்வழித்தட ரயில்வே ஒருங்கிணைப்பு சரக்குப் போக்குவரத்து திட்டம் தொடர்பாக இந்தியாவுக்கும் பொலிவியாவுக்கும் இடையில் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.
 • கூட்டாக ஒப்புக்கொள்ளப்பட்ட ஒத்துழைப்புத் திட்டங்கள் தொடர்பாக தகவல் பரிமாற்றம், நிபுணர் கூட்டங்கள், கருத்தரங்குகள், தொழில்நுணுக்கப் பயணங்கள் மற்றும் அமலாக்கம் ஆகியவற்றை ஊக்குவிப்பதாக இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இருக்கும்.
இந்தியாவுக்கும் பின்லாந்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
 • பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், கணினிசார் பாதுகாப்பு தொடர்பாக இந்தியாவுக்கும் பின்லாந்துக்கும் இடையில் ஒத்துழைப்பு பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
 • பாதுகாப்பு தொடர்பான நிகழ்வுகள் குறித்து அறிவுப் பரிமாற்றம், கண்டறிதல், தீர்வு காணுதல் மற்றும் தடுப்பதில் ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதில் இரு நாடுகளுக்கும் இடையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்கப் பட்டுள்ளது.
இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையில் ரயில்வே துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
 • பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தரப்படுத்தல் அமைப்பு,  ரஷிய ரயில்வே ஆராய்ச்சி நிலையம் மற்றும் தகவல் தொழில்நுட்பம், சிக்னல் வசதி ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு நிலையம் மற்றும் ரஷிய ரயில்வே போக்குவரத்து தொலைத் தொடர்புத் துறைகளுக்குள் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.
 • கூட்டாக ஒப்புக்கொள்ளப்பட்ட ஒத்துழைப்புத் திட்டங்களில் தகவல் பரிமாற்றம், நிபுணர் கூட்டங்கள், கருத்தரங்குகள், தொழில்நுணுக்கப் பயணங்கள் நடப்பதற்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகுக்கும்.
முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா 2019க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 • முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) இரண்டாவது அவசர சட்டம் 2019 ( 2019-ம் ஆண்டின் 4வது அவசர சட்டம்) க்குப் பதிலாக முன்வைக்கவுள்ள முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா 2019 க்கு பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை வழங்கியது.
 • இந்த மசோதா பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்துவதாகவும் முஸ்லீம் பெண்களுக்கு பாலின ரீதியான நீதியை வழங்குவதாகவும் அமையும். திருமணமான முஸ்லீம் பெண்களின் உரிமைகளையும் இந்த மசோதா பாதுகாப்பதோடு அவர்களின் கணவர்கள் முத்தலாக் சொல்வதன் மூலம் விவாகரத்து செய்வதையும் தடுக்கும்.
சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (திருத்த) மசோதா, 2019-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 • பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று புதுதில்லியில் கூடிய மத்திய அமைச்சரவை, சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (திருத்த) அவசரச் சட்டம், 2019-க்கு மாற்றாக, சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (திருத்த) மசோதா, 2019 ஐ அறிமுகப்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்படும்.
 • சிறப்பு பொருளாதார மண்டலங்கள் சட்டம், 2005-ல் பிரிவு 2ன் கீழ் துணைப்பிரிவு 5ல் திருத்தம் செய்யப்பட்ட பின்னர், மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அறக்கட்டளையோ அல்லது எந்த அமைப்போ, சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தொழிற்கூடம் அமைப்பதற்கான அனுமதியைப் பெற பரிசீலிப்பதற்கான தகுதியைப் பெறும்

நியமனங்கள்

கஜகஸ்தான் புதிய ஜனாதிபதி
 • கசகஸ்தான் நாட்டின் புதிய ஜனாதிபதியாக கஸ்ஸிம் ஜோமர்ட் டொக்கேயேவ் பதவி ஏற்றார். ஜனாதிபதியாக பணியாற்றிய நர்சுல்தான் நாஜ்பேபேவ் இந்த ஆண்டு மார்ச் மாதம் பதவி விலகினார். 78 வயதான நர்சுல்தான் நாச்பேபேவ் பதவி விலகிய பிறகு, நாட்டின் இரண்டாவது ஜனாதிபதியாக கஸ்ஸிம் ஜோமர்ட் டொக்கேயேவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் புதிய தூதுவராக சீனாவின் மூத்த தூதர் சன் வேயிடோங் நியமனம்
 • இந்தியாவின் புதிய தூதுவராக சன் வேயிடோங் நியமிக்கப்பட்டார். பாகிஸ்தான் தூதுவராக பணியாற்றிய திரு சன் தற்போது வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கொள்கை மற்றும் திட்டமிடல் துறையின்  பொது இயக்குனர் ஆவார்.  “Luo Zhaohui ” வை தொடர்ந்து திரு சன் இப்பொது வெளியுறவுத்துறை துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விருதுகள்

ஞானபீத் விருது:
 • புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் அமிதாவ் கோஷ், 2018 ஆம் ஆண்டுக்கான 54 வது ஞானபீடம் விருதை பெற்றார். ஆங்கிலத்தில் அவரது சிறந்த பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்பட்டது. மேற்கு வங்காளத்தின் முன்னாள் கவர்னர் கோபால்கிருஷ்ணா காந்தி புது டெல்லியில் நடைபெற்ற ஒரு விழாவில் திரு கோஷுக்கு விருது வழங்கினார். இந்த விருது பெற்ற முதல் ஆங்கில எழுத்தாளர் ஆவார்.

செயலி மற்றும் வலைத்தளம்

பழங்குடியின மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த மின்னணு ஆளுமை
 • மத்திய பழங்குடியினர் நல அமைச்சரகம் புதுதில்லியில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில், “பழங்குடியினருக்கான நலத்திட்டங்களை மின்னணு ஆளுமை மூலம் பெற்றுக் கொள்ளும் திட்டத்தை” அத்துறையின் மத்திய அமைச்சர் திரு. அர்ஜூன் முண்டா தொடங்கி வைத்தார்.
 • பழங்குடி மக்களுக்கான மின்னணுத் திட்டங்களை செயல்படுத்த டி.பி.டி. பழங்குடியினர் ஆன்-லைன் போர்டலும், என்.ஜி.ஓ. நிதியுதவி ஆன்-லைன் விண்ணப்பம் மற்றும் கண்காணிப்பு முறைக்கான போர்டலும் உருவாக்கப்பட்டுள்ளன.

விளையாட்டு செய்திகள்

ஒலிம்பிக் போட்டிக்கு  இந்திய வீரர்களின் வில்வித்தை அணி இடஒதுக்கீடு பெற்றது
 • நெதர்லாந்தில் நடைபெறும் வில்வித்தை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கனடாவை 5-3 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய வீரர்களின் வில்வித்தை அணி கால் இறுதிக்கு முன்னேறியது.இதன் மூலம் 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆண்கள் அணி இடஒதுக்கீடு பெற்றது . 2012 லண்டன் ஒலிம்பிக்கிற்குப் பிறகு முதல் தடவையாக இந்திய ஆண்கள்  குழு ஒதுக்கீடு பெற்றுள்ளது.
சீனியர் ஆசிய கலை ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி
 • ஜிம்னாஸ்டிக்ஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா, இந்த மாதம் 19 முதல் 22 வரைமங்கோலியாவில் உள்ள உலான்பாட்டர் நகரில் நடைபெறவிருக்கும் சீனியர் ஆசிய கலை ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்திய அணியின் பெயர்களை அறிவித்துள்ளது.
 • ஆண்கள் அணியில் ராகேஷ் குமார் பத்ரா, யோகேஷ்வர் சிங், தபாங் டே மற்றும் அரிக் டே உள்ளனர் .பிரணதி நாயக், சாந்தா தலேகர், பிரணதி தாஸ் மற்றும் பாபியா தாஸ் ஆகியோர் பெண்கள் அணியில் உள்ளனர்.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 13, 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!